தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி
நன்றி மறவாமை மஹாபெரியவாளின் சிறப்பு
காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு,1918 மார்ச் மாதம் ,முறையான யாத்திரையைத் தொடங்கினார்கள் பெரியவா.
இருப்பத்தோரு ஆண்டுகள் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவிட்டு 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார்கள் ஸ்வாமிகள்.
காசியிலிருந்து கொண்டுவந்த கங்கா தீர்த்தத்தால் ராமேஸ்வரம் ராம நாதஸ்வாமியை அபிஷேகம் செய்து வைத்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும்.
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயை கடக்க வேண்டும். அப்போது பாம்பன் மேல் செல்ல பேருந்து பாலம்கிடையாது. ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உரிய உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
குப்புஸ்வாமி என்பவரை தென்னிந்திய ரயில்வே தலைமை ஸ்தானமாக விளங்கிய திருச்சிக்கு அனுப்பினார்கள்.
இம்பீரியல் வங்கி அதிகாரி நாராயணஸ்வாமியும் ரயில்வே ஏஜண்டைச் சந்தித்து மடத்தின் சார்பில் ஓர் விண்ணப்பம் கொடுத்தார்.
இவர் பெரியவாளிடம் அபார பக்தி பூண்டவர். பூஜைப் பெட்டிகளை எடுத்துச் செல்ல தனி ட்ராலி தேவை, பாம்பன் ரயில் பாலத்தின் மீது நடந்து செல்ல அனுமதி
தேவை.....இவைதான் மனுவில் இடம் பெற்றிருந்தன.
இரண்டு தினம் சென்று ரயில்வே அதிகாரியிடமிருந்து பதில் வந்தது.
ஒரு நாற்காலி சுத்தம் செய்யப்பட்டு நான்கு சீடர்களுடன் பூஜைப் பெட்டி பயணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஸ்வாமிகளும் பத்து சீடர்களும் ரயில்வே பாலத்தின் வழியாக நடந்து செல்ல வசதியாக பலகைகள் பொருத்தித் தரப்படும்என்றும் அதில் கண்டிருந்தது.
குறிப்பிட்ட நாளில் காலை ஒன்பது மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்து , பத்தரை மணிக்குள் கடந்து சென்றுவிடவேண்டுமென
அதில் கண்டிருந்தது.
திட்டமிட்டபடி அக்கரை சேர்ந்த ஸ்வாமிகளுக்கும் சீடர்களுக்கும் ஓர் அதிசயம்!
தலைமை போக்குவரத்து அதிகாரியான ஆங்கிலேயர் பழத் தட்டுடன் ஸ்வாமிகளை வரவேற்று சமர்ப்பித்தார்.
''எல்லாம் சௌகர்யமாகவும் சரியாகவும் நடந்ததா'' என ஆங்கிலத்தில் வினவினார்! அவருக்கு நன்றி சொல்லும்படி குப்புஸ்வாமி ஐயரைப் பணித்தார்கள்.
இப்படி சங்கல்பித்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியதும், ஸ்வாமிகள் குப்புஸ்வாமி அவர்களிடம் இரண்டு பட்டுத்துணிகளும், பழ வகைகளும் கொடுத்து, ''இந்தப் ப்ரசாதங்களை மண்டபம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் திருச்சி அதிகாரிக்கும் கொடுத்துவிட்டுவா'' என்றார்கள்.
நன்றி மறவாமை என்பது பெரியவாளின் ஓர் அங்கம்!
பெரியவாளைப் பற்றி பேசுவதற்கு கூட அவரோட அனுக்ரஹம் இருக்க வேண்டும்.
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரஜினி யாருடன் கூட்டு? இன்னும் 2 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் உண்டாகும் குழப்பம் - துக்ளக் குருமூர்த்தி பளிச்!
பிரபல ஆங்கில ஊடகத்துடன் நடந்த பிரத்யேக உரையாடலில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்று கணித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் ஒரு நட்பு மையத்தை உருவாக்க விரும்புவார் என்று அரசியல் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மாநிலத்தின் அரசியல் அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் 20 ஏக்கர் நிலம் பிள்ளைகளுக்கு கிடையாது. மோடிஜிக்கு கொடுக்கப்போகிறேன். - 85 வயது அதிசய பாட்டி.!
தன் நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதில்லை மோடிஜிக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி பிடிவாதம் பிடித்த அதிசயம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச்சேர்ந்தவர் பிட்டன் தேவி. இவருக்கு 85 வயதாகிறது. இவர் தன்னிடம் உள்ள ஒரே சொத்தான நிலத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பிட்டன் தேவி என்ற அந்த பாட்டி தள்ளாடும் இந்த வயதிலும் கிருஷ்ணா பிரதாப் சிங் என்ற வக்கிலை சென்று பார்த்தார்.அவரிடம் தனக்கு சொந்தமான 12 பிக்ஹா நிலத்தை அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். 🇮🇳🙏1
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🙏2
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. 🇮🇳🙏3
“அடித்துத் துவைத்த பாஜக, காணாமல் போன காங்கிரஸ்- ஹைதராபாத் பெருநகர் மன்ற தேர்தல்:
ஹைதராபாத் பெருநகர்மன்ற தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை
கடந்த முறை இதையே பெருநகர் மன்ற தேர்தலின் போது நான்கு சீட்டுக்கள் மட்டுமே வெல்ல முடிந்த பாஜக இம்முறை 48 சீட்டுக்கள் வென்றுள்ளது.
வெறும் உள்ளாட்சித் தேர்தல் தானே என்று பாஜகவின் மத்திய தலைமை இதனை விட்டுவிடாமல் அமீத் ஷாவே நேரடியாக களமிறங்கினார்.
இந்தியாவின் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத் களமிறங்கி வார்டு கவுன்சிலராக போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது: கிஷண் ரெட்டி சவால்
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.