ரஜினி யாருடன் கூட்டு? இன்னும் 2 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் உண்டாகும் குழப்பம் - துக்ளக் குருமூர்த்தி பளிச்!
பிரபல ஆங்கில ஊடகத்துடன் நடந்த பிரத்யேக உரையாடலில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்று கணித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் ஒரு நட்பு மையத்தை உருவாக்க விரும்புவார் என்று அரசியல் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மாநிலத்தின் அரசியல் அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஜினியின் கருத்துக்களும் தத்துவமும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தெளிவாகிவிடும் என்று குருமூர்த்தி கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், "இப்போது பாஜகவும், ரஜினிகாந்தும் எனது பார்வையில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
ஏனென்றால், ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு ஆட்சிக்கு வரும்போது, அவருக்கு மைய அரசின் பலம் தேவைப்படும். எனவே அவருக்கும் பாஜகவுக்கும் அரசியல் ரீதியான பிணைப்பு உண்டாகும்.
ஆனால் எனது உணர்வு என்னவென்றால், அடுத்த இரண்டு-மூன்று மாதங்களில், தமிழக அரசியல் எடுக்கும் திருப்பங்கள் இன்று கற்பனை செய்ய முடியாத ஒன்று.
ஏனென்றால் ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்குப் பிறகு எந்தக் கட்சியும் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
யார் வேண்டுமானாலும் எந்தவொரு கட்சியிலிருந்தும் வெளியேறுவது சாதாரணமாக நடக்கிறது. ஒவ்வொரு கட்சியும் சுயநல நபர்களின் தொகுப்பாகும். எனவே, எந்தவொரு கட்சியும் அதன் அனைத்து மக்களின் சுயநல கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய முடியாது, ஏனெனில் அது அதன் திறனை விட 300 மடங்கு அதிகமாக இருக்கும்.
"எனவே, அனைத்து அரசியல் கட்சிகளிலும் இதுபோன்ற குழப்பம் ஏற்படப்போகிறது என்பது என் உணர்வு. இப்போதிலிருந்து இரண்டு மாதங்களில், தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் களத்தை நீங்கள் காண முடியும். இதைத்தான் நான் விளக்கினேன், அதுபற்றி எழுதியுள்ளேன்,
அரசியலை 40 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறேன். எனவே ரஜினிகாந்தின் நுழைவை குறைத்து மதிப்பிடாதீர்கள். பாஜகவுக்கும் அவருக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது.
மேலும் அவரது கருத்துக்கள் மற்றும் தத்துவம் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தெளிவாகிவிடும் "என்று அவர் மேலும் கூறினார்.
கதிர் நியூஸ்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னை : தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி தி.மு.க. விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 23ம்பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.
அவசரத்திலும் அரசியல் செய்த கனிமொழி
கோவை : கோவையில் தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி நடுரோட்டில் நின்று பேசும்போது நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ்க்கு தி.மு.க.வினர் வழிவிட மறுத்தனர். அவர்களை வழிகொடுக்கச் சொல்ல வேண்டிய கனிமொழி மாற்று வழியில் போகச் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
எம்.பி. கனிமொழி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை கோவை - மருதமலை ரோட்டிலுள்ள பாப்பநாயக்கன் புதுார் என்ற பகுதியில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி படத்துக்கு மாலையணிவித்த அவர் வேனில் ஏறி சிறிது நேரம் பேசினார்.
மருதமலையிலிருந்து கோவை செல்லும் ரோட்டை மறித்து அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தைச் சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் நின்றனர்.
பாக்., உளவாளிகள் ஐந்து பேர் கைது; பெரிய தாக்குதலுக்கு திட்டம்?
புதுடில்லி : 'டில்லியில் கைதான, ஐந்து பேருக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு உள்ளது' என, டில்லி போலீசார் தெரிவித்தனர்.
டில்லியின் ஷாகர்பூர் பகுதியில், சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த ஐந்து பேரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 கிலோ ஹெராயின், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கைதானவர்களில் இருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள மூவர், காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
விராலிமலை, திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். 🙏🇮🇳3
சீடன் ஒருவன் குருவிடம், சுவாமி நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். கடவுளுக்குத் தூக்கம் வருமா? வராதா? எனக் கேட்டான்.
குரு புன்னகைத்தவாறே, அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை நான் சொல்லும் வரை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்றார் குரு. சீடனும் கண்ணாடியைப் பிடித்தபடியே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சிகளை மேற்கொண்டும், அது பலன் அளிக்கவில்லை, தன்னையும் மறந்து ஒரு விநாடி அவன் கண்ணயர்ந்து விட்டான். கண்ணாடி கீழே விழுந்து துண்டு துண்டாய்ச் சிதறியது. பதறிப்போன சீடன், கலவரத்துடன் குருவை நோக்கினான்.
கட்டாய மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறை; மத்திய பிரதேச அரசும் அதிரடி சட்டம்
போபால்: மத்திய பிரதேசத்தில், கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, சமீப காலமாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதையடுத்து, உ.பி.,யில், சமீபத்தில் அதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய பிரதேசத்திலும், கட்டாய மதமாற்றம் செய்வோரை தண்டிக்கும் வகையில், 'மத சுதந்திர சட்டம்' என்ற சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.