நவராத்திரி உற்சவம் ஊரெங்கும் திருவிழாக் கோலம். உறவினர்கள் நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவதும் நாம் அவர் வீட்டுக்குச் சென்றும் சந்தோஷம் பரிமாறிக் கொள்ளும் நேரம். இப்படி நான் எனது தோழி வீட்டிற்குச் சென்றேன்.
நவராத்திரி கொலு ரசித்து பாட்டுப் பாடி, சுண்டல் சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பும் முன் தாம்பூலம் தந்தாள் என் தோழி அதிலிருந்த ரிட்டர்ன் கிப்ட் (return gift) புதியதாக இருந்தது அவளிடம் என்னவென்று கேட்டேன், அது பஞ்சகவ்ய விளக்கு என்றாள். மிகவும் விசேஷம் என்றும் கூறினாள்.
என்ன டா இது பஞ்சகவ்ய விளக்கு… பஞ்சகவ்வியம் என்றால் என்ன என்று இன்டெர்நெட்டில் வலை வீசி தேடினேன். அந்த தேடலில் நான் பஞ்சகவ்வியத்தைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் அறிந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
குஜராத்தை சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவில் பிறந்து, பொருளாதாரத்தில் Ph.D பட்டம் பெற்றவர் அமித் வைத்யா. இவர் பொழுதுபோக்கு துறையின் வணிக துறையில் பணியாற்றி வந்தார்.
வாழ்க்கை ஒரு கனவு போல மிக சந்தோஷமாக இருந்தார்.
படிப்பு, பணம், பதவி என்று அழகான அமெரிக்க வாழ்க்கை என்று இருந்த அவருக்கு 27 வயது. அவரது தந்தையாரின் மறைவுக்கு பின் சில மாதங்களில் முதல் கட்ட வயிற்று புற்று நோய் (gastric cancer) என்று கண்டறியப்பட்டது.
சுறுசுறுப்பான வாழ்க்கை, எப்பொழுதும் எத்துறையிலும் ஒரு சாதனையாளராக விளங்கிய அவருக்கு கனவெல்லாம் சுக்குநூறாக சிதறியது போல தோன்றியது. 27 வயதில் நல்ல உயரத்தை எட்டிய எனக்கு அது ஒரு பெரிய வீழ்ச்சி, என்றார் அவர்.
அறுவை சிகிச்சைக்கு பதிலாக அவர் நியுயார்க் நகரத்தில் கீமோ கதிர்வீச்சு சிகிச்சை செய்து கொண்டார். இரண்டு வருடங்களுக்கு பின்னர் நிவாரண மருத்துவமும் எடுத்தார்.
அவர் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்ட இரண்டு மாதங்களில் அவரது தாய்க்கு மூன்றாம் நிலை மூளை கட்டி (stage-3 brain tumour) கண்டறியப்பட்டு அவரையும் இழக்க நேரிட்டது. பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்ததில் அவருக்குப் புற்று நோய் திரும்பியது தெரிந்து மனம் உடைந்து போனார்.
இந்த முறை கல்லீரலில் தோன்றியது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் புற்று நோய் நுரையீரலுக்கும் பரவிற்று.
வெளிநாட்டில் யாரும் இல்லாமல் தனியாக தன் வாழ்க்கையின் கடைசி நாட்களைக் கழிக்க மனமில்லாமல் அவர் இந்தியா செல்ல முடிவெடுத்தார்.
அவரது சொந்தக்காரர் ஒருவர் குஜராத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் பதினொன்று நாட்களில் புற்று நோயைக் குணப் படுத்துவதாகவும், அதுவும் ஒரே ஒரு ரூபாய் கட்டணத்தில் என்றும் கூறினார். சரி அதையும் ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்து அவர் அங்குச் சென்றார்.
அங்கே உள்ள அணுகுமுறை மிக ஒழுக்கமான முறையிலிருந்தது என்று கூறுகிறார். யோகா, தியானம் தவிர பசும் பால், தயிர், நெய், பசுவின் சாணம், கோமியம் கலந்த ஒரு மருந்தை அருந்தக் கொடுத்தார்களாம்.
கீமோவினால் சாப்பாட்டை ரசிக்கும் தன்மையை இழந்ததால் அதை அருந்துவது அவருக்குச் சுலபமாக இருந்ததாகக் கூறுகிறார். அந்த மருந்தில் நம்பிக்கை வைத்து அதை உட்கொண்டதாகக் கூறுகிறார்.
பின்னர் எடுத்த ஸ்கேனில் புற்று நோய் பரவவில்லை என்பதைப் பார்த்து அவர் அதே ஆஸ்பத்திரியில் 40 நாட்கள் சிகிச்சைக்காகச் சென்றார். புற்று நோய் கட்டுப்பாட்டில் வருவதைப் பார்த்து சிகிச்சையைத் தொடர எண்ணினார்.
அதே ஊரில் ஒரு விவசாயி தன் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். சிகிச்சை தொடர்ந்தது, சில மாதங்களில் நடக்க முடிந்தது. இன்னும் சில நாட்களில் ஜாகிங், பின்னர் ஓடவும் முடிந்தது, வெகு நாட்களுக்குப் பின் சந்தோஷத்தை உணர்ந்தார்.
அந்த கிராமத்து மக்கள் அவருடன் இருந்தார்கள், அது அவருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இப்படியாக பதினெட்டு மாதங்களில் அவர் புற்று நோயிலிருந்து முழுமையாக விடுபட்டார்.
இந்த பயணத்தை மக்களுடன் பகிர்ந்து நம்பிக்கையை வளர்க்கத் தொடங்கினார்.
தனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த நாட்டிற்காக நான் சேவை செய்வேன் என்று முடிவெடுத்தார். “ஹோலி கான்சர்- எனது வாழ்க்கையை ஒரு பசு காப்பாற்றியது எப்படி” (Holy Cancer- How a Cow Saved My Life) என்ற புத்தகத்தை எழுதினார்.
healingvaidya.org என்ற இணையதளத்தில் இன்னும் விவரங்கள் கிடைக்கும்.
Holy Cancer- How a Cow Saved My Life புத்தகம் அமேசான் மற்றும் ஃபிலிப் கார்ட்டிலும் (Amazon and Flipkart) கிடைக்கிறது.
அமித் வைத்யா அவர்கள் பரிந்துரைக்கும் ஆஸ்பத்திரி- RM Dhariwal Cancer hospital. ஒரே ஒரு ரூபாயில் பஞ்சகவ்ய சிகிச்சை அளிக்கும் இந்த மருத்தவமனை குஜராத்தில் உள்ள வல்சாத் (Valsad-Gujarat) இல் உள்ளது.
சஞ்சிகை பகிர்வு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரஜினி யாருடன் கூட்டு? இன்னும் 2 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் உண்டாகும் குழப்பம் - துக்ளக் குருமூர்த்தி பளிச்!
பிரபல ஆங்கில ஊடகத்துடன் நடந்த பிரத்யேக உரையாடலில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்று கணித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் ஒரு நட்பு மையத்தை உருவாக்க விரும்புவார் என்று அரசியல் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மாநிலத்தின் அரசியல் அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் 20 ஏக்கர் நிலம் பிள்ளைகளுக்கு கிடையாது. மோடிஜிக்கு கொடுக்கப்போகிறேன். - 85 வயது அதிசய பாட்டி.!
தன் நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதில்லை மோடிஜிக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி பிடிவாதம் பிடித்த அதிசயம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச்சேர்ந்தவர் பிட்டன் தேவி. இவருக்கு 85 வயதாகிறது. இவர் தன்னிடம் உள்ள ஒரே சொத்தான நிலத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பிட்டன் தேவி என்ற அந்த பாட்டி தள்ளாடும் இந்த வயதிலும் கிருஷ்ணா பிரதாப் சிங் என்ற வக்கிலை சென்று பார்த்தார்.அவரிடம் தனக்கு சொந்தமான 12 பிக்ஹா நிலத்தை அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். 🇮🇳🙏1
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🙏2
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. 🇮🇳🙏3
“அடித்துத் துவைத்த பாஜக, காணாமல் போன காங்கிரஸ்- ஹைதராபாத் பெருநகர் மன்ற தேர்தல்:
ஹைதராபாத் பெருநகர்மன்ற தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை
கடந்த முறை இதையே பெருநகர் மன்ற தேர்தலின் போது நான்கு சீட்டுக்கள் மட்டுமே வெல்ல முடிந்த பாஜக இம்முறை 48 சீட்டுக்கள் வென்றுள்ளது.
வெறும் உள்ளாட்சித் தேர்தல் தானே என்று பாஜகவின் மத்திய தலைமை இதனை விட்டுவிடாமல் அமீத் ஷாவே நேரடியாக களமிறங்கினார்.
இந்தியாவின் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத் களமிறங்கி வார்டு கவுன்சிலராக போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது: கிஷண் ரெட்டி சவால்
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.