பூமி உள்ளவரை... மக்களின் மனங்களில்...: இன்று ஜெயலலிதா நினைவு தினம்
சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. இவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர்.
சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார்.
1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
எம்.ஜி.ஆர். வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலர், 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1984 டிசம்பரில் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., - கூட்டணி வெற்றி பெற்றது. இதில் ஜெ., யின் பங்கு முக்கியமானது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1987ல் ஜெ.,- ஜானகி அணிகள் என அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.
1989 சட்டசபை தேர்தலில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெ., தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க.,வை ஜெ., ஒன்றிணைத்தார்.
ஆறு முறை முதல்வர்
அ.தி.மு.க, கூட்டணி 1991 சட்டசபை தேர்தலில் 225 தொகுதிகளில் வென்றது. ஜெயலலிதா முதன்முறை முதல்வரானார். பின் 2001, 2011ல் முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆருக்குப்பின், தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி சாதித்தார்.
2016 செப்., 22ல் உடல்நலம் பாதிக்கப்பட, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.,5ல் காலமானார்.
இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலர்,
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண்மணி என பல சிறப்புகளை பெற்றவர். தேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். ஐந்து பல்கலைகளில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரஜினி யாருடன் கூட்டு? இன்னும் 2 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் உண்டாகும் குழப்பம் - துக்ளக் குருமூர்த்தி பளிச்!
பிரபல ஆங்கில ஊடகத்துடன் நடந்த பிரத்யேக உரையாடலில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்று கணித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் ஒரு நட்பு மையத்தை உருவாக்க விரும்புவார் என்று அரசியல் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மாநிலத்தின் அரசியல் அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் 20 ஏக்கர் நிலம் பிள்ளைகளுக்கு கிடையாது. மோடிஜிக்கு கொடுக்கப்போகிறேன். - 85 வயது அதிசய பாட்டி.!
தன் நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதில்லை மோடிஜிக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி பிடிவாதம் பிடித்த அதிசயம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச்சேர்ந்தவர் பிட்டன் தேவி. இவருக்கு 85 வயதாகிறது. இவர் தன்னிடம் உள்ள ஒரே சொத்தான நிலத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பிட்டன் தேவி என்ற அந்த பாட்டி தள்ளாடும் இந்த வயதிலும் கிருஷ்ணா பிரதாப் சிங் என்ற வக்கிலை சென்று பார்த்தார்.அவரிடம் தனக்கு சொந்தமான 12 பிக்ஹா நிலத்தை அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். 🇮🇳🙏1
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🙏2
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. 🇮🇳🙏3
“அடித்துத் துவைத்த பாஜக, காணாமல் போன காங்கிரஸ்- ஹைதராபாத் பெருநகர் மன்ற தேர்தல்:
ஹைதராபாத் பெருநகர்மன்ற தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை
கடந்த முறை இதையே பெருநகர் மன்ற தேர்தலின் போது நான்கு சீட்டுக்கள் மட்டுமே வெல்ல முடிந்த பாஜக இம்முறை 48 சீட்டுக்கள் வென்றுள்ளது.
வெறும் உள்ளாட்சித் தேர்தல் தானே என்று பாஜகவின் மத்திய தலைமை இதனை விட்டுவிடாமல் அமீத் ஷாவே நேரடியாக களமிறங்கினார்.
இந்தியாவின் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத் களமிறங்கி வார்டு கவுன்சிலராக போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது: கிஷண் ரெட்டி சவால்
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.