கட்டாய மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறை; மத்திய பிரதேச அரசும் அதிரடி சட்டம்
போபால்: மத்திய பிரதேசத்தில், கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, சமீப காலமாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதையடுத்து, உ.பி.,யில், சமீபத்தில் அதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய பிரதேசத்திலும், கட்டாய மதமாற்றம் செய்வோரை தண்டிக்கும் வகையில், 'மத சுதந்திர சட்டம்' என்ற சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா, இம்மாதம் துவங்கவுள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது, தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுஉள்ளதாவது:மத சுதந்திர சட்ட மசோதாவின்படி, மதமாற்றத்திற்காக மட்டும் செய்யப்படும் இது போன்ற திருமணங்கள், சட்டப்படி செல்லாது என, அறிவிக்கப்படும்.
இந்த சட்டத்தை மீறி வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். குறிப்பாக, 'மைனர்' சிறுமி அல்லது எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வோருக்கு,
10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். ஒரே நேரத்தில், பலரை மதமாற்ற முயற்சிக்கும் நபர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. பஞ்சாப் இந்தியாவின் மிகக் குறைவான வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்று ... ஒரு ஹெக்டேருக்கு வேளாண் - ஜிடிபி அளவில் பார்த்தால் இந்திய அளவில் பதினோராவது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் .( பார்க்க படம்..) ..
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் , எல்லாவித கட்டுக்கதைகளையும் மீறி 99 % விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்ற பஞ்சாப் விவசாயிகள் தான் இன்னும் மிகப் பழமையான முறையிலேயே விவசாயம் செய்து வருபவர்கள் ....
2. ஆனால் இவ்வளவு திறமையற்றவர்களாக பஞ்சாபி விவசாயிகள் இருந்தபோதிலும் இந்த வருடம் ( 2020 ) ஒவ்வொரு பஞ்சாபி விவசாயக்குடும்பமும் ரூபாய் 1.22 லட்சம் மானியமாகப் பெற்றுள்ளது..
ஸ்டாலின் உட்பட திமுகவினரின் சொத்து பட்டியல் தயாராகிறது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
ஸ்டாலின் உட்பட திமுக தலைவர் களின் சொத்துப் பட்டியலை தயார் செய்து வருகிறோம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரி வித்தார்.
சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில் அதிமுக நிர் வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருணாநிதியின் மறைவுக்குப் பின் அவரை நான் ஒருபோதும் தரக்குறைவாக இதுவரை பேசியது கிடையாது. ஸ்டாலின், ஆ.ராசாதான் எங்கள் தலை வர்களை ஒருமையில் பேசி வருகின்றனர். இதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
31 நாட்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இது வெறும் ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன - அண்ணாமலை சவால்.!
"31 நாட்களில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடைபெற்றது, இது சும்மா ட்ரெய்லர்'தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன தமிழகத்தில் பா.ஜ.க பெரும் மாற்றத்தை ஏற்படுத்த" என தமிழக
பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார்.
தமிழக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை நிறைவு விழா இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
ஏராளமான தொண்டர்கள் வேலுடன் பங்கேற்றனர்.
எல்லை தாண்டி வந்த சகோதரிகள் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைப்பு
ஜம்மு : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு சகோதரிகளும் நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கஹூதா பகுதியை சேர்ந்த லைபா ஜபாயர் 17 சனா ஜபாயர் 13 என்ற இரு சகோதரிகள் நேற்று முன்தினம் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.
எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அந்த இரண்டு மைனர் சிறுமியரையும் பாதுகாப்புப் படையினர் தடுப்பு காவலில் வைத்தனர்.
இந்நிலையில் அந்த இரண்டு சிறுமியரும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
சென்னை : தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி தி.மு.க. விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 23ம்பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.