*திருவண்ணாமலையை பற்றி நமக்கு தெரியாத ஒரு அபூர்வம்*
சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்
முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.
இக்கதை சமீபத்தில் தான் நண்பர் மூலமாக அறிந்துகொண்டேன். திருவண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
நந்தி கால் மாற்றிய வரலாறு:
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.
அரசன் "நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?"
அதற்கு அந்த ஐவர் "எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்" என்றனர்.
அதற்கு அரசன் "உம் சிவன் இந்த அண்ணாமலையார் உன்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்" என்று கூறி வெட்டிவிட்டான்.
உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக் கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார்
உடனே அந்த சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் 15 வயது பாலகனை கண்டனர்.
ஐவரும் "இச்சிறு பாலகனா பக்தன்" என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான்.
ஐவரும் நடந்ததை கூறி அச்சிறு பாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்களை அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். உடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர் பெறச்செய்தார்.
அதை நம்ப மறுத்த முகலாய அரசன் "நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய்" எனக்கூறி நம்ப மறுத்தான்.
"சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன்" என கூறினான்.
அதற்கும் சளைக்காத அச்சிவபாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.
அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர்.
அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.
இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து" இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடத்து வைத்து உட்கார்ந்து விட்டால்
உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.
உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர்.
கருணைக்கடல் அல்லவா நம் அண்ணாமலையார் உடனே நம் பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் நம் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார்.
அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான்
அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார்.
அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. இக்கதைக்கான ஆதாரங்களை இக்கிராமத்திற்கு சென்றால் காணலாம்.
பகிர்வு 🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாரதியாரின் எழுச்சியை இந்தியாவில் பார்க்கிறேன்: பிரதமர் மோடி
சென்னை: பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
மகாகவி பாரதியின் தேசிய உணர்வுகளை முன்னிறுத்தும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பாரதியார் புகழை உலகம் போற்றும் வகையில் பன்னாட்டு பாரதி திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருப்பதாக வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி தெரிவித்திருந்தார்.
ரூ.2 கோடி துருக்கி கரன்சி பறிமுதல்: தூத்துக்குடியில் 5 இளைஞர்கள் கைது
தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளுடன் நின்ற 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற கோவை பேரூர் சரோஜினி நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜீவா (23), நெல்லை மாவட்டம் சுரண்டை பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயமாணிக்கம் (22), கடையநல்லூர் நத்தகர் பள்ளிவாசல் பேட்டையைச் சேர்ந்த செய்யது மகதூம் மகன் முகமது புகாரி (22),
ராணுவ வீரர்களுக்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு படையினரின் உபயோகத்துக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் வகையில் அந்த துப்பாக்கியை டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது. துப்பாக்கி கான்பூர் ஆயுத தொழிற்சாலையிலும், குண்டுகள் புனே வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் இறுதி கட்டப் பரிசோதனை கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
3 கிலோ எடைகொண்ட துப்பாக்கி, 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை சுடும் திறன் கொண்டதாகும்.
கட்டுக்கட்டாகக் கிடைத்த கணக்கில் வராத பணம்.. சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி..!
நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 62 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த நிவேதா அரிசி ஆலை உரிமையாளர் தனது ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
உரிமத்தை புதுப்பித்துத் தர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆலை உரிமையாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்தார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மே.வங்க கவர்னர்: தலைமை செயலர், டிஜிபி.,க்கு சம்மன்
புதுடில்லி: மே.வங்கத்தில் பா.ஜ., தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மே.வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மே.வங்க மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையடுத்து, அங்கு பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கோல்கட்டா சென்றார்.
தெற்கு 24 பராகனாஸ் மாவட்டத்தில் உள்ள, ‛டைமண்ட் ஹார்பர்' என்ற இடத்தில் நடந்த கூட்டத்திற்கு நட்டா காரில் சென்றார்.அவரது காருக்கு முன்னும் பின்னும் பா.ஜ.,தலைவர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கார்கள் அணிவகுத்து சென்றன.
இனி வாகனங்களுக்கும் நாமினி: வந்தது சட்டத்திருத்தம்
சொத்துக்களுக்கு வாரிசுதாரரை நியமிப்பதுபோல, வாகனங்களுக்கும் 'நாமினி'யை நியமிக்கும் வகையில், மோட்டார் வாகனச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிகமான சாலை வாகனப்போக்குவரத்து உள்ள நாடுகளில், உலகில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. நாடு முழுவதும், 25 கோடி வாகனங்கள் வலம் வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், இரண்டு கோடி வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், விபத்துகளும் அதிகமாகி வருகின்றன. கடந்த ஆண்டு, நாட்டில் நான்கு லட்சத்து 37 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன; அவற்றில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.