*அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும் -திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில், சம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற தலம். இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர், இறைவி அபிராமி. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். .*
🙏🇮🇳1
சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. 🙏🇮🇳2
சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும்.
🙏🇮🇳3
இத்தலத்தில் 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும் காரிநாயனார் அருள் பெற்று சிவதொண்டு மேற்கொண்ட தலம் இதுவே. ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 🙏🇮🇳4
மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தல விருட்சகமாக கொண்டுள்ளது.
சித்தர்கள் -அகத்தியர், புலஸ்தியர் , காலாங்கி நாதர் மற்றும் துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். 🙏🇮🇳5
மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.
🙏🇮🇳6
60வது வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், 61வது வயது தொடக்கத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 70வது வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80வது வயதில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்ற தம்பதிகளை இத்தலத்தில் நாம் நிறையப் பார்க்க முடியும். 🙏🇮🇳7
திருக்கடவூர் தலத்தில் இப்படிப்பட்ட சாந்திகள் செய்து கொள்வது காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.
🙏🇮🇳8
தல வரலாறு:
மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 🙏🇮🇳9
16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். 🙏🇮🇳10
அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். 🙏🇮🇳11
அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். 🙏🇮🇳12
எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். 🙏🇮🇳13
பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று.
🙏🇮🇳14
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இவ்விரு கோவில்களும் . மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி.தொலைவில் உள்ளது .
🙏🇮🇳15
பாம்பாட்டி சித்தரின் திருக்கடையூர் மயானம் :
இத்திருத்தலம் திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது....இங்குள்ள இறைவனின் திருநாமம்- பிரம்மபுரீஸ்வரர் ., இறைவியரது திருப்பெயர் மலர்க்குழல் மின்னம்மை. 🙏🇮🇳16
ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பல யுகங்களின் முடிவில் இறைவன் பிரம்மதேவரை எரித்து சாம்பலாக்கி விட்டார். இறைவனால் பிரம்மதேவர் எரிக்கப்பட்ட இடமே கடவூர் மயானமாகும் .🙏🇮🇳17
பிரம்மதேவரை மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் பொருட்டு தேவர்கள் அனைவரும் கடவூர் மயானம் வந்து பிரம்மபுரீஸ்வரரை வேண்டி தவம் புரிந்தனர்.
சிவபெருமான் கருணை உள்ளத்துடன் மனம் இறங்கி சிவஞானத்தை போதித்து, சிறப்பாக படைப்புத் தொழிலை செய்யும்படி பிரம்மனுக்குத் திருவருள் புரிந்தார். 🙏🇮🇳18
பிரம்மன் சிவஞானம் உணர்ந்த இடமே இத்திருக்கடவூர் மயானம். தற்போது திருமெய்ஞானம் என அழைக்கப் படுகிறது.
பக்தி மார்கத்தின் சிறப்பை மனித குலத்திற்கு உணர்த்திய மார்க்கண்டேயர், தினந்தோறும் சிவ பூஜை செய்வதற்காக காசி கங்கா தீர்த்தத்தை வரவழைத்துத் தந்த இடமும் இதுவே. 🙏🇮🇳19
இந்த தீர்த்தம் வந்த நாள் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரம் கூடிய சுபதினம். ஆண்டுதோறும் இந்த தினத்தில் பக்தர்கள் இங்கே புனித நீராடுவர்.
🙏🇮🇳20
அருள்மிகு திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரருக்கும், ஸ்ரீ அபிராமி அம்மையாருக்கும், ஐந்து கால அபிஷேகத்திற்கும் இங்குள்ள காசி தீர்த்தத்தினால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற தீர்த்தங்களினால் அபிஷேகம் கிடையாது. 🙏🇮🇳21
மன்னன் பாகுலேயன், இத்தல காசி தீர்த்தத்தை பிற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று எண்ணி , ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்தார். அதன் காரணமாக, சிவலிங்கத்தின் மீது ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அந்தத் தழும்பு இக்கோயில் சிவலிங்கத்தின் மேல் இப்போதும் காணப்படுகிறது.🙏🇮🇳22
பாம்பாட்டி சித்தர் ஐக்கியம் :
பாம்பாட்டி சித்தர்க்கு சங்கரன் கோவில், மருதமலை மற்றும் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவ சமாதி - ஐக்கிய ஸ்தலம் உள்ளது ..இறுதியாக பாம்பாட்டி சித்தர் சமாதி பெற்றது திருக்கடவூர் -மயானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தான் என்றும் கூறப் படுகிறது ..
🙏🇮🇳23
மூலஸ்தானத்தில் இருந்து நாற்பத்தொன்பதாம் அடியில் பாம்பு புற்று ஓன்றுள்ளது ..இப்போதும் அங்கு பாம்பின் வடிவில் சித்தர் அருளுவதாக நம்பப் படுகிறது..
புற்றுக்கு அருகில் இப்போது புதிதாக பீடம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது ..🙏🇮🇳24
அங்கு அடியார் ஒருவரை சந்தித்தேன் பாம்பு புற்று தான் சித்தரின் சமாதி என்கிறார் ..பாம்பாட்டி சித்தர் இவ்விடத்தில் நடத்தும் அற்புதத்தை அழாகாய் கூறினார் ..
🙏🇮🇳25
பொதுவாக திருக்கடையூர் செல்லும் பக்தர்கள் அனைவரும் கடவூர் மயானத் தலம் என்றால் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலைத்தான் குறிக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்தான் கடவூர் மயானம். 🙏🇮🇳26
இதுபோன்ற பழமையான கோயில்களை கண்டறிந்து அவற்றை சீர்படுத்தி மக்களின் பார்வைக்குக் கொண்டுவருவது இந்து அறநிலையத் துறையின் கடமை. நம்முடைய பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது நமது தலையாய கடமைகளுள் ஒன்று. அருமையான ஸ்தலம் ஒருமுறை சென்று வாருங்கள் .
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*திருவண்ணாமலையை பற்றி நமக்கு தெரியாத ஒரு அபூர்வம்*
சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்
முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.
இக்கதை சமீபத்தில் தான் நண்பர் மூலமாக அறிந்துகொண்டேன். திருவண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
நந்தி கால் மாற்றிய வரலாறு:
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.
பாரதியாரின் எழுச்சியை இந்தியாவில் பார்க்கிறேன்: பிரதமர் மோடி
சென்னை: பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
மகாகவி பாரதியின் தேசிய உணர்வுகளை முன்னிறுத்தும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பாரதியார் புகழை உலகம் போற்றும் வகையில் பன்னாட்டு பாரதி திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருப்பதாக வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி தெரிவித்திருந்தார்.
ரூ.2 கோடி துருக்கி கரன்சி பறிமுதல்: தூத்துக்குடியில் 5 இளைஞர்கள் கைது
தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளுடன் நின்ற 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற கோவை பேரூர் சரோஜினி நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜீவா (23), நெல்லை மாவட்டம் சுரண்டை பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயமாணிக்கம் (22), கடையநல்லூர் நத்தகர் பள்ளிவாசல் பேட்டையைச் சேர்ந்த செய்யது மகதூம் மகன் முகமது புகாரி (22),
ராணுவ வீரர்களுக்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு படையினரின் உபயோகத்துக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் வகையில் அந்த துப்பாக்கியை டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது. துப்பாக்கி கான்பூர் ஆயுத தொழிற்சாலையிலும், குண்டுகள் புனே வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் இறுதி கட்டப் பரிசோதனை கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
3 கிலோ எடைகொண்ட துப்பாக்கி, 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை சுடும் திறன் கொண்டதாகும்.
கட்டுக்கட்டாகக் கிடைத்த கணக்கில் வராத பணம்.. சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி..!
நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 62 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த நிவேதா அரிசி ஆலை உரிமையாளர் தனது ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
உரிமத்தை புதுப்பித்துத் தர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆலை உரிமையாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்தார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மே.வங்க கவர்னர்: தலைமை செயலர், டிஜிபி.,க்கு சம்மன்
புதுடில்லி: மே.வங்கத்தில் பா.ஜ., தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மே.வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மே.வங்க மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையடுத்து, அங்கு பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கோல்கட்டா சென்றார்.
தெற்கு 24 பராகனாஸ் மாவட்டத்தில் உள்ள, ‛டைமண்ட் ஹார்பர்' என்ற இடத்தில் நடந்த கூட்டத்திற்கு நட்டா காரில் சென்றார்.அவரது காருக்கு முன்னும் பின்னும் பா.ஜ.,தலைவர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கார்கள் அணிவகுத்து சென்றன.