வாரி வழங்குவதிலே கர்ணனுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். இதன் காரணமாக யாருக்கும் இல்லாத புகழ் கர்ணனுக்கு இருந்தது.கர்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே சென்றது. ஒருநாள் துரியோதனனின் அமைச்சர், துரியோதனனிடம், "கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தான் ஆள்கிறார்.
அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள்தான்.ஆனால் கர்ணனின் புகழ் தான்,ஓங்கி இருக்கிறது.இது சரிதானா?"என்று குதர்க்கமாக கேட்டார்.துரியோதனனுக்கு அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது.அவன் உடனே அமைச்சரைப் பார்த்து, "நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்" என்று கேட்டார்.
"மகாப்பிரபுவே தாங்களும் கர்ணனைப்போல் கொடை கொடுக்கத் துவங்கிவிடுங்கள்.பின்னர் தங்களுக்கு ‘கொடை வள்ளல்' என்ற பெயர் கிடைக்கும்"என்றார் அமைச்சர்.துரியோதனனும் "சரி அப்படியே செய்கிறேன்" என்றான். உடனே அமைச்சர், "அருமையான யோசனை சொன்ன எனக்கு,ஏதாவது பரிசு தரக் கூடாதா?" என்று கேட்டார்.
அதற்கு துரியோதனன்,"அதற்குத் தான் சம்பளம் தருகிறேனே" என்று கூறினார்.மறுநாள்,"துரியோதன மகாராசாவும் கொடை கொடுப்பார்",என்று அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன்,பகவான் கிருஷ்ணர் தள்ளாத முதியவர் வேடத்தில், துரியோதனனிடம் வந்து,"அய்யா,எனக்கு ஒரு பொருள், தானமாக வேண்டும்",
என்று கேட்டார்.உடனே துரியோதனன்,"என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்"என்று கூறினார்.அதற்கு அந்த முதியவர், "இன்னும் ஒரு மாதம் கழித்து இதேநாளில் வந்து நான் விரும்பும் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன்"என்று கூறினார்.பின் பகவான் கிருஷ்ணர்,வருண பகவானை அழைத்து,
"இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து மழை பெய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தினார். நல்ல அடைமழை பெய்தது. மீண்டும் கிருஷ்ணர்,முதியவர் வேடத்தில் துரியோதனனைப் பார்த்து,"நான் உங்களை முன்பே சந்தித்து எனக்குக் கொடையாக ஒரு பொருளைத் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
தாங்களும், தருவதாக சொன்னீர்கள். நினைவு இருக்கிறதா?" என்று கேட்டார்.அதற்கு துரியோதனன்,"தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்" என்று கேட்டார்.கிருஷ்ணர், "கொடை வள்ளலே என் மகளின் திருமணத்திற்காக எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்" என்று கேட்டார்.
இதற்கு துரியோதனன், "ஒரு மாதமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாங்களே விறகு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். விறகு மட்டும் கேட்காதீர். வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேளுங்கள்," என்று சினத்துடன் கூறினார்.
"தாங்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்னாவது?" என்று பகவான் கேட்டார்.அதற்கு துரியோதனன், "வாக்காவது,போக்காவது" என்று கூறினார்.முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் அங்கிருந்து புறப்பட்டு கர்ணன் அரண்மனைக்கு சென்றார்.முதியவரைப் பார்த்த கர்ணன், முதியவருக்கு உடுத்திக் கொள்ள மாற்று உடையும்,
துவட்டிக்கொள்ள துண்டும் அளிக்குமாறு உத்தரவிட்டார். முதியவரும் உலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார். அவருக்கு சூடான பாலும் கொடுக்கப்பட்டது.சற்று இளைப்பாறிய முதியவர், "அய்யா, என் மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்.
அதை கொடையாகக் கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன்." என்றார்.உடனே கர்ணன்,"நம் நாட்டில் உள்ள பாழடைந்த அரண்மனையில் நிறைய தூண்களும் உத்திரங்களும் உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை வண்டியில் ஏற்றி, அவை நனையாமல் இருக்க, அவற்றின் மேல் ஓலைகளை கூரை போல் வேய்ந்து,
முதியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கர்ணன் உத்தரவுப்படி விறகினை பெற்றுக் கொண்ட முதியவர், துரியோதனன் மாளிகை வழியாக சென்றார்."பெரியவரே காய்ந்த விறகு கிடைத்து விட்டதா?" என்று வினவினார் அமைச்சர்.
அதற்கு,"கொடைவள்ளல் கர்ணன் தான் கொடுத்தார்" என்று கூறினார்,அந்த முதியவர்.கொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது.கொடை உள்ளமும்,கூர்ந்த அறிவும் வேண்டும் என்னும் உண்மை துரியோதனனுடைய அமைச்சருக்கு புரிந்தது.
கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திரேதா யுகத்தில்,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது,அவருக்கு உதவி செய்வதற்காக அவதரித்த அனுமனை,ஒருமுறை பீடிக்க சனி பகவான் முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக,கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன்,அங்கதன்,அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.வானரங்கள்,தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில்
வீசிக்கொண்டிருந்தன. ராம,லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக,மன அழுக்கு இன்றி இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே.மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.
எல்லா குற்றங்களும்,அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின்தான், வாக்கும் செயலும் அதை செயல்படுத்துகிறது.எனவே,மனதில் மாசு, அதாவது குற்றம் இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.
ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள்.நீர என்றால் தன்மை உடைய என்று பொருள்.பிற என்றால் மற்றவை.ஒருவன்
மனதில் குற்றத்தை வைத்துக்கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக்குற்றத்தை மறைக்க செய்ததாகும்.ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம்,பகட்டு,விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14ம் நாள் போர் தொடங்க இருந்தது.அதற்காக பஞ்சப் பாண்டவர்கள் ஐவரும்,போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.
அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்."கிருஷ்ணா!நீ அனைத்தும் அறிந்தவன்.உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீயே,வீழ்பவனும் நீயே.எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.அது யாதெனில்..
இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?”. அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,"இன்றைய போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இன்றையப் போரில்,இந்த உலகத்தில் மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்”என்றார்.
அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது."இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”
“அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.
"என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
“நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான்.
"அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!”
"என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்.தேவையானவருக்கு,தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்” என்றவர் மகான் ஸ்ரீராகவேந்திரர். வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்கள் புரிந்த அம்மகான்,இறந்த பின்னரும், ஏன் இன்றும் கூட பல அற்புதங்கள் செய்து வருகிறார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம்.இது ஆந்திராவில்,துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே, பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.
கி.பி.1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தின் மூலம்,கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால்,அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தது.
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்,"எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.