பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14ம் நாள் போர் தொடங்க இருந்தது.அதற்காக பஞ்சப் பாண்டவர்கள் ஐவரும்,போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.
அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்."கிருஷ்ணா!நீ அனைத்தும் அறிந்தவன்.உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீயே,வீழ்பவனும் நீயே.எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.அது யாதெனில்..
இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?”. அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,"இன்றைய போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இன்றையப் போரில்,இந்த உலகத்தில் மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்”என்றார்.
கிருஷ்ணன் அவ்வாறு சொன்னதும்,பாண்டவர்களில் நால்வரும்,தன் மூத்த சகோதரனான தர்மனை பார்த்தனர்.அனைவருக்கும் தெரியும்,இந்த உலகத்திலேயே தர்மன் தான் மிகவும் நல்லவன் என்று பெயர் பெற்றவன்.அதனால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். பின்னர் ஒருவாறாக பாண்டவர்கள் ஐவரும் போர்க்களம் புகுந்தனர்.
போர்க்களத்தில் துரியோதனனையும், துச்சாதனனையும் கொல்ல வேண்டும் என்பதே பீமனின் குறிக்கோளாக இருந்தது. அதனால் அவன் தன்னுடைய தேரை,அவர்கள் இருவரையும் நோக்கி செலுத்தினான்.அப்போது அவனது தேருக்கு முன்பாக வந்து நின்றான் விகர்ணன். இவன் துரியோதனனின் தம்பிகளில் ஒருவன்.
அவனைக் கண்டதும், பீமனின் முகத்தில் அன்பு படர்ந்தது. “விகர்ணா.உன்னைக் கொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது உன் மீதான அச்சம் அல்ல..அன்பு.ஏனெனில் அன்று திரவுபதியை துகிலுரித்தபோது, நீ மட்டும்தான் திரவுபதிக்கு ஆதரவாக பேசினாய்.அதனால்தான் உன்னைக் கொல்ல என் மனம் மறுக்கிறது.
பிழைத்துப்போ.. இல்லையெனில் என்னிடம் இன்னொரு யோசனையும் உள்ளது” என்றான்."அது என்ன மற்றொரு யோசனை” என்று கேட்டான்,விகர்ணன்."நீ எங்களுடன் சேர்ந்து விடு. பாண்டவர்கள் ஐவருடன் உன்னையும் ஆறாவதாக சேர்க்கிறோம். போருக்குப் பின் உனக்கும் அரசு வழங்கி முடிசூட்டுகிறோம்.
திரவுபதியின் மானம் காக்க குரல் கொடுத்த உனக்கு முடிசூட்டி பார்க்க நினைக்கிறது என் மனம்.”விகர்ணன் நகைத்தான். “பீமா!நான் அறவழியில் நிற்பவன்.அன்று திரவுபதிக்கு நிகழ்ந்தது அநீதி. பெண்ணின் மானம் சூறையாடப்படும் நேரத்தில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதுதான் அறம்.
அதைத்தான் அன்று நான் செய்தேன்.இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும்,நான் சார்ந்திருக்கும் என் அண்ணனுக்காக போரிடுவதே அறம்.அதைத்தான் இன்றும் செய்கிறேன்.மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்காதே.என்னைத் தாண்டி தான் நீ துரியோதனனை அடைய முடியும்.
உன்னால் முடிந்தால் உன் கதாயுதத்தை என் மீது பிரயோகித்துப்பார்” என்று சவால் விட்டான்.அந்த துடுக்குப் பேச்சு பீமனை ஆவேசப்படுத்தியது.தேரை விட்டு இறங்கி, கதாயுதம் கொண்டு விகர்ணனுடன் போரிட்டான். அந்தப்போர் அவ்வளவு எளிதாக முடியவில்லை.
விகர்ணனை அழிப்பது, தான் நினைத்ததுபோல் சுலபம் இல்லை என்பதை,அவனுடன் மோதிய பிறகே பீமன் அறிந்தான். ஒரு மாபெரும் வீரனுடன் போரிடுவதை அவன் மனம் உணர்ந்தது. அறத்தின் வழி வாழ்பவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே.
ஒரு கட்டத்தில் பீமன் வீசிய கதாயுதம்,விகர்ணனின் நெஞ்சை தாக்கியது.அதை சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்ட விகர்ணன் தரையில் சாய்ந்து இறந்தான்.அதைப் பார்த்து பீமனின் மனம், இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்தது.சூரிய அஸ்தமனம் நிகழ்ந்ததும், போர் நிறுத்தப்பட்டது.
தர்மனுக்கு என்ன ஆனதோ என்று கவலையில் ஆழ்ந்திருந்த திரவுபதி,பாண்டவர்கள் ஐவரும் நலமுடன் வருவதைக்கண்டு ஆனந்தம் அடைந்தாள்.இப்போது அவளுக்குள் பெரும் சந்தேகம். "இன்று எல்லாரைவிடவும் நல்லவன் ஒருவன் இறப்பான் என்று கிருஷ்ணர் சொன்னாரே.என் கணவர் நலமுடன் தானே இருக்கிறார்" என்று நினைத்தவள்,
தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டாள்.கண்ணன் புன்னகைத்தபடியே கூறினார். “திரவுபதி! நல்லவர்களுக்கு மத்தியில் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தவன். உன் மானத்தைக் காப்பதற்காக எதிர் அணியில் இருந்து குரல் கொடுத்தவன்.
இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், அவனுக்காக போரிட்டு தன் உயிரையே கொடுத்திருக்கிறான். அரச பதவி அளிப்பதாக, பீமன் காட்டிய ஆசை கூட அவன் மனதை மாற்றமுடியவில்லை. நான் எங்கு இருக்கிறேனோ அந்த இடத்தில் தர்மம் இருக்கும், நியாயம் இருக்கும் என்பதை விகர்ணன் அறிவான்.
ஆனாலும் கூட அறத்திற்காக தன் அண்ணனுக்காக போரிட்டான்.தான் இறந்துபோவோம் என்று தெரிந்தே அவன் போர்க்களம் வந்தான்.இப்போது சொல்.கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்த,விகர்ணன்தானே உலகத்திலேயே எல்லாரையும் விட நல்லவன்”
அதுவரை அமைதியாக இருந்த தர்மன்,"ஆமாம்.விகர்ணன் எல்லோரிலும் நல்லவன். என்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்.அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் விகர்ணன் நல்லவன் என்பது மட்டும் உண்மை.இந்தப் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்து விட்டதே..”என்று அனைவரும் மனம் கலங்கி நின்றனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திரேதா யுகத்தில்,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது,அவருக்கு உதவி செய்வதற்காக அவதரித்த அனுமனை,ஒருமுறை பீடிக்க சனி பகவான் முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக,கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன்,அங்கதன்,அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.வானரங்கள்,தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில்
வீசிக்கொண்டிருந்தன. ராம,லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக,மன அழுக்கு இன்றி இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே.மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.
எல்லா குற்றங்களும்,அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின்தான், வாக்கும் செயலும் அதை செயல்படுத்துகிறது.எனவே,மனதில் மாசு, அதாவது குற்றம் இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.
ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள்.நீர என்றால் தன்மை உடைய என்று பொருள்.பிற என்றால் மற்றவை.ஒருவன்
மனதில் குற்றத்தை வைத்துக்கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக்குற்றத்தை மறைக்க செய்ததாகும்.ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம்,பகட்டு,விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.
அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது."இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”
“அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.
"என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
“நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான்.
"அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!”
வாரி வழங்குவதிலே கர்ணனுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். இதன் காரணமாக யாருக்கும் இல்லாத புகழ் கர்ணனுக்கு இருந்தது.கர்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே சென்றது. ஒருநாள் துரியோதனனின் அமைச்சர், துரியோதனனிடம், "கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தான் ஆள்கிறார்.
அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள்தான்.ஆனால் கர்ணனின் புகழ் தான்,ஓங்கி இருக்கிறது.இது சரிதானா?"என்று குதர்க்கமாக கேட்டார்.துரியோதனனுக்கு அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது.அவன் உடனே அமைச்சரைப் பார்த்து, "நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்" என்று கேட்டார்.
"மகாப்பிரபுவே தாங்களும் கர்ணனைப்போல் கொடை கொடுக்கத் துவங்கிவிடுங்கள்.பின்னர் தங்களுக்கு ‘கொடை வள்ளல்' என்ற பெயர் கிடைக்கும்"என்றார் அமைச்சர்.துரியோதனனும் "சரி அப்படியே செய்கிறேன்" என்றான். உடனே அமைச்சர், "அருமையான யோசனை சொன்ன எனக்கு,ஏதாவது பரிசு தரக் கூடாதா?" என்று கேட்டார்.
"என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்.தேவையானவருக்கு,தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்” என்றவர் மகான் ஸ்ரீராகவேந்திரர். வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்கள் புரிந்த அம்மகான்,இறந்த பின்னரும், ஏன் இன்றும் கூட பல அற்புதங்கள் செய்து வருகிறார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம்.இது ஆந்திராவில்,துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே, பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.
கி.பி.1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தின் மூலம்,கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால்,அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தது.
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்,"எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.