"என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்.தேவையானவருக்கு,தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்” என்றவர் மகான் ஸ்ரீராகவேந்திரர். வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்கள் புரிந்த அம்மகான்,இறந்த பின்னரும், ஏன் இன்றும் கூட பல அற்புதங்கள் செய்து வருகிறார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம்.இது ஆந்திராவில்,துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே, பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.
கி.பி.1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தின் மூலம்,கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால்,அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தது.
அந்த சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம், முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.ஆனால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான்(ஒரு தனிக்கதை), ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை,
அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு,அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையை சரி செய்யச்சொல்லி உத்தரவிட்டது.மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார்.
ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும், தொப்பியையும் கழற்றிவிட்டு பிருந்தாவனத்தை நோக்கிச்சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ,யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார்.
அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை.
காரணம்,அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல,சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி, அதை தானமாக அளித்தது பற்றி, ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம்,
அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.அவர் யாரிடம் பேசுகிறார்,எதற்குப் பேசுகிறார், ஒருவேளை சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர், ஒன்றுமே புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தனர்.
சர் தாமஸ் மன்றோ வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக்கொண்டு,தங்கள் ஆங்கிலேயப் பாணியில்,அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார்.
அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டனர்.
அதற்கு மன்றோ, ”பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளிவீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன்.அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி,மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார்.
இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும்,அவரது கம்பீரக்குரல் பற்றியும், செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர், ”ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா?”என்று கேட்டார்,குழுவினரைப் பார்த்து.
தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள்,மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ராகவேந்திரர்தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.கடந்த நூற்றாண்டில் காலமான மகான்,தன் முன் நேரில் தோன்றி அதுவும் தன் பாஷையான ஆங்கிலத்திலேயே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு,
பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ.தனக்குக்கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார்.அரசுக்கும்,ஆளுநருக்கும்,அந்த இடம் மடத்துக்கு சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன்,அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார்.
விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராக பொறுப்பேற்கும் நிலை வர,அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு,மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான்.இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக்குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஆன்மீக பூமி. சித்தர்களும், மகான்களும், முனிவர்களும், யோகிகளும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழும் மண்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந்திருப்பார் ஒருவர். அவர், "எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!"என்றபடியே இருப்பார்.ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும்,"நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை கூட்டிகிட்டுப் போயிடுறேன்.என்ன சொல்றே?"கேட்டார் சந்நியாசி.
"நானும் இதைத்தான் நினைச்சேன்.ஆனா வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப,எப்படி விட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா,
அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்"என்றார் ஆசாமி.சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.ஆண்டுகள் ஓடின! ஒருநாள் கோயிலுக்கு வந்தார் அதே சந்நியாசி,அதே பெட்டிக்கடை,அதே ஆசாமி!"எனக்கு ஆசையே இல்லை.பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன்.ஆனா,இன்னும் அதற்கான வேளை வரலை"-அதே புலம்பல்.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை.நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
ஒரு குரு,நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒருமுறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையைக் காண முடிவுசெய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார்.
தவத்தின் பயனாக,மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார்.
மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம்,முன்வினைக் காரணமாக, இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.தனது சீடர்களில் ப்ரியமானவனை அழைத்து,தன் நிலையைச் சொல்லி,அவன் கையில் ஒரு வாளைக் கொடுத்து இப்போதே புறப்படு,
இன்னும் ஐந்து வருடங்களில் இந்த ஊரில் நான் பன்றியாக பிறந்திருப்பேன்.என்னைக் கண்டவுடன்,அந்த பன்றியுருவத்தின் நெற்றியில் என் உருவம் உனக்கு மட்டும் தெரியும்.அதைக் கண்டவுடன் “என்னை வெட்டிவிடு” என்று மிக உருக்கமாக அவனிடம் கேட்டுக்கொண்டார்.
திரேதா யுகத்தில்,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது,அவருக்கு உதவி செய்வதற்காக அவதரித்த அனுமனை,ஒருமுறை பீடிக்க சனி பகவான் முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக,கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன்,அங்கதன்,அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.வானரங்கள்,தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில்
வீசிக்கொண்டிருந்தன. ராம,லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக,மன அழுக்கு இன்றி இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே.மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.
எல்லா குற்றங்களும்,அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின்தான், வாக்கும் செயலும் அதை செயல்படுத்துகிறது.எனவே,மனதில் மாசு, அதாவது குற்றம் இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.
ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள்.நீர என்றால் தன்மை உடைய என்று பொருள்.பிற என்றால் மற்றவை.ஒருவன்
மனதில் குற்றத்தை வைத்துக்கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக்குற்றத்தை மறைக்க செய்ததாகும்.ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம்,பகட்டு,விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14ம் நாள் போர் தொடங்க இருந்தது.அதற்காக பஞ்சப் பாண்டவர்கள் ஐவரும்,போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.
அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்."கிருஷ்ணா!நீ அனைத்தும் அறிந்தவன்.உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீயே,வீழ்பவனும் நீயே.எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.அது யாதெனில்..
இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?”. அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,"இன்றைய போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இன்றையப் போரில்,இந்த உலகத்தில் மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்”என்றார்.