புதிய பார்லி., கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த, 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது.
பழைய கட்டடத்துக்கு அருகிலேயே, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
1,608 எம்.பி.,க்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்பட உள்ளது. லோக்சபாவில் 888 எம்.பி.,க்கள் அமரும் வகையிலும் ( இதனை 1,224 பேர் வரை அதிகரித்து கொள்ளலாம்) 384 ராஜ்யசபா எம்.பி.,க்கள் அமரும் வகையிலும் கட்டப்பட உள்ளது.
இந்த கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம், 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும், 2022ல், புதிய பார்லி கட்டடம் தயாராகிவிடும் .
இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புரோகிதர்கள் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ், தொழிலதிபர் ரத்தன் டாடா, வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஜெயின், புத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள், விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*திருவண்ணாமலையை பற்றி நமக்கு தெரியாத ஒரு அபூர்வம்*
சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்
முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.
இக்கதை சமீபத்தில் தான் நண்பர் மூலமாக அறிந்துகொண்டேன். திருவண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
நந்தி கால் மாற்றிய வரலாறு:
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.
பாரதியாரின் எழுச்சியை இந்தியாவில் பார்க்கிறேன்: பிரதமர் மோடி
சென்னை: பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
மகாகவி பாரதியின் தேசிய உணர்வுகளை முன்னிறுத்தும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பாரதியார் புகழை உலகம் போற்றும் வகையில் பன்னாட்டு பாரதி திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருப்பதாக வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி தெரிவித்திருந்தார்.
ரூ.2 கோடி துருக்கி கரன்சி பறிமுதல்: தூத்துக்குடியில் 5 இளைஞர்கள் கைது
தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளுடன் நின்ற 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற கோவை பேரூர் சரோஜினி நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜீவா (23), நெல்லை மாவட்டம் சுரண்டை பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயமாணிக்கம் (22), கடையநல்லூர் நத்தகர் பள்ளிவாசல் பேட்டையைச் சேர்ந்த செய்யது மகதூம் மகன் முகமது புகாரி (22),
ராணுவ வீரர்களுக்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு படையினரின் உபயோகத்துக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் வகையில் அந்த துப்பாக்கியை டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது. துப்பாக்கி கான்பூர் ஆயுத தொழிற்சாலையிலும், குண்டுகள் புனே வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் இறுதி கட்டப் பரிசோதனை கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
3 கிலோ எடைகொண்ட துப்பாக்கி, 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை சுடும் திறன் கொண்டதாகும்.
கட்டுக்கட்டாகக் கிடைத்த கணக்கில் வராத பணம்.. சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி..!
நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 62 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த நிவேதா அரிசி ஆலை உரிமையாளர் தனது ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
உரிமத்தை புதுப்பித்துத் தர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆலை உரிமையாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்தார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மே.வங்க கவர்னர்: தலைமை செயலர், டிஜிபி.,க்கு சம்மன்
புதுடில்லி: மே.வங்கத்தில் பா.ஜ., தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மே.வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மே.வங்க மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையடுத்து, அங்கு பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கோல்கட்டா சென்றார்.
தெற்கு 24 பராகனாஸ் மாவட்டத்தில் உள்ள, ‛டைமண்ட் ஹார்பர்' என்ற இடத்தில் நடந்த கூட்டத்திற்கு நட்டா காரில் சென்றார்.அவரது காருக்கு முன்னும் பின்னும் பா.ஜ.,தலைவர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கார்கள் அணிவகுத்து சென்றன.