ஒரு குரு,நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒருமுறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையைக் காண முடிவுசெய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார்.
தவத்தின் பயனாக,மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார்.
மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம்,முன்வினைக் காரணமாக, இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.தனது சீடர்களில் ப்ரியமானவனை அழைத்து,தன் நிலையைச் சொல்லி,அவன் கையில் ஒரு வாளைக் கொடுத்து இப்போதே புறப்படு,
இன்னும் ஐந்து வருடங்களில் இந்த ஊரில் நான் பன்றியாக பிறந்திருப்பேன்.என்னைக் கண்டவுடன்,அந்த பன்றியுருவத்தின் நெற்றியில் என் உருவம் உனக்கு மட்டும் தெரியும்.அதைக் கண்டவுடன் “என்னை வெட்டிவிடு” என்று மிக உருக்கமாக அவனிடம் கேட்டுக்கொண்டார்.
அதனைக் கேட்ட சீடனும் சரி என்று சொல்லி புறப்பட்டு போனான்.
கால் நடையாகத்தானே போகவேண்டும்.சுற்றி அலைந்து,குருநாதர் சொன்ன ஊருக்கு வந்து சேர்ந்தான் சீடன்.அந்த ஊரில் உள்ள பன்றிகளை ஒவ்வொன்றாக நெற்றியை பார்த்தவாறே அலைந்தான். ஆனால் அந்த பன்றியைக் காணவில்லை.
அந்த ஊர்க்காரர்களிடம் இங்கே பன்றிகள் எங்கே அதிகம் இருக்கும் என்று கேட்டான்.அவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு,ஊரின் எல்லை தாண்டி ஒரு மலக்குவியல் உள்ள இடம் உண்டு.அங்கே நிறைய பன்றிகள் இருக்கும்.ஆனால் அங்கே போகமுடியாது.துர்நாற்றம் வீசும் என்றார்கள்.
சரி என்று சொல்லிவிட்டு அந்த இடம் நோக்கி நடந்தான் சீடன். நெருங்கநெருங்கவே இந்த இடம் இருப்பது தெரிந்துவிட்டது சீடனுக்கு.அந்த அளவு துர்நாற்றம்.மூக்கை பிடித்துக்கொண்டு குருநாதரைத் தேடினான்.ஒரு இடத்தில் பெரியப் பன்றி ஒன்று, தனது குட்டிகளுடன்,
ஒரு பெரிய மலக்குழியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தான்.அதன் நெற்றியில் குருநாதர் உருவம் தோன்றி மறைந்தது.உடனே வாளை உருவி,"குருவே" என்று கூவியபடி பாய்ந்தான்.சடாரென்று திரும்பிய அந்தப் பன்றி,
ஒரு நொடியில் அவன் கையை எட்டிப்பிடித்து,"சீடா!இந்த வாழ்வில் நான் ஆனந்தமாக உள்ளேன் கெடுத்து விடாதே” என்று கெஞ்சியது. விக்கித்து நின்றான் சீடன்.
"மாயை"! யாராலும் வெல்ல முடியாத ஒன்று. இதைத்தாண்ட கடவுளின் கால்களை இறுக பற்றிக்கொள்ள வேண்டும்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந்திருப்பார் ஒருவர். அவர், "எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!"என்றபடியே இருப்பார்.ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும்,"நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை கூட்டிகிட்டுப் போயிடுறேன்.என்ன சொல்றே?"கேட்டார் சந்நியாசி.
"நானும் இதைத்தான் நினைச்சேன்.ஆனா வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப,எப்படி விட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா,
அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்"என்றார் ஆசாமி.சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.ஆண்டுகள் ஓடின! ஒருநாள் கோயிலுக்கு வந்தார் அதே சந்நியாசி,அதே பெட்டிக்கடை,அதே ஆசாமி!"எனக்கு ஆசையே இல்லை.பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன்.ஆனா,இன்னும் அதற்கான வேளை வரலை"-அதே புலம்பல்.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை.நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
திரேதா யுகத்தில்,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது,அவருக்கு உதவி செய்வதற்காக அவதரித்த அனுமனை,ஒருமுறை பீடிக்க சனி பகவான் முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக,கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன்,அங்கதன்,அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.வானரங்கள்,தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில்
வீசிக்கொண்டிருந்தன. ராம,லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக,மன அழுக்கு இன்றி இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே.மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.
எல்லா குற்றங்களும்,அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின்தான், வாக்கும் செயலும் அதை செயல்படுத்துகிறது.எனவே,மனதில் மாசு, அதாவது குற்றம் இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.
ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள்.நீர என்றால் தன்மை உடைய என்று பொருள்.பிற என்றால் மற்றவை.ஒருவன்
மனதில் குற்றத்தை வைத்துக்கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக்குற்றத்தை மறைக்க செய்ததாகும்.ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம்,பகட்டு,விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14ம் நாள் போர் தொடங்க இருந்தது.அதற்காக பஞ்சப் பாண்டவர்கள் ஐவரும்,போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.
அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்."கிருஷ்ணா!நீ அனைத்தும் அறிந்தவன்.உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீயே,வீழ்பவனும் நீயே.எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.அது யாதெனில்..
இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?”. அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,"இன்றைய போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இன்றையப் போரில்,இந்த உலகத்தில் மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்”என்றார்.
அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது."இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”
“அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.
"என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
“நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான்.
"அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!”