கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந்திருப்பார் ஒருவர். அவர், "எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!"என்றபடியே இருப்பார்.ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும்,"நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை கூட்டிகிட்டுப் போயிடுறேன்.என்ன சொல்றே?"கேட்டார் சந்நியாசி.
"நானும் இதைத்தான் நினைச்சேன்.ஆனா வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப,எப்படி விட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா,
அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்"என்றார் ஆசாமி.சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.ஆண்டுகள் ஓடின! ஒருநாள் கோயிலுக்கு வந்தார் அதே சந்நியாசி,அதே பெட்டிக்கடை,அதே ஆசாமி!"எனக்கு ஆசையே இல்லை.பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன்.ஆனா,இன்னும் அதற்கான வேளை வரலை"-அதே புலம்பல்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு,சந்நியாசி வந்தார்."எனக்கு ஆசையே இல்லை"வழக்கம்போல் கேட்டது குரல்."இப்போதாவது வருகிறாயா?''-இது சந்நியாசி. "கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.
ஆண்டுகள் பல கழிந்தன.மீண்டும் வந்தார் சந்நியாசி.ஆனால், அந்த ஆசாமியைக் காணோம்.கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.கடையில் இருந்தவர்,"சாமி எங்க அப்பாதான் அவரு.எல்லா பந்தங்களையும் விட்டு, உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு.போன வருஷம் ஒருநாள்...
நெஞ்சு வலின்னவரு,பொட்டுனு போயிட்டாரு.அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா,நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ" எனக் கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.இதைக் கேட்ட சந்நியாசி, "உங்க அப்பன் எங்கேயும் போயிடலே.இங்கதான் இருக்கான்.அதோ அங்கே பார், அதென்ன?"
"அது நாய்.இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு."
"அதான் உங்க அப்பன். இப்பப் பாரு" என்றவர் கையைத் தட்டினார். அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார். உடனே அது, "எனக்கு ஆசையே இல்லே..." என பேசத் துவங்கியது.
"அடேய் என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார்.
"சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன்.பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க.கடையை சரியா பூட்டாமே போயிடறாங்க.அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!". இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வென சிரித்தார் சந்நியாசி.
"பற்றை விடுவது எளிதல்ல"
படித்ததில் பிடித்தது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்",கிருஷ்ணனை சபித்த காந்தாரி,தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.
எனினும்,அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின்,இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.திடீரென எதோ சப்தம் கேட்க,தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.
கிருஷ்ணன் கையில் குழல்,துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க,
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை.நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
ஒரு குரு,நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒருமுறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையைக் காண முடிவுசெய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார்.
தவத்தின் பயனாக,மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார்.
மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம்,முன்வினைக் காரணமாக, இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.தனது சீடர்களில் ப்ரியமானவனை அழைத்து,தன் நிலையைச் சொல்லி,அவன் கையில் ஒரு வாளைக் கொடுத்து இப்போதே புறப்படு,
இன்னும் ஐந்து வருடங்களில் இந்த ஊரில் நான் பன்றியாக பிறந்திருப்பேன்.என்னைக் கண்டவுடன்,அந்த பன்றியுருவத்தின் நெற்றியில் என் உருவம் உனக்கு மட்டும் தெரியும்.அதைக் கண்டவுடன் “என்னை வெட்டிவிடு” என்று மிக உருக்கமாக அவனிடம் கேட்டுக்கொண்டார்.
திரேதா யுகத்தில்,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது,அவருக்கு உதவி செய்வதற்காக அவதரித்த அனுமனை,ஒருமுறை பீடிக்க சனி பகவான் முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக,கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன்,அங்கதன்,அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.வானரங்கள்,தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில்
வீசிக்கொண்டிருந்தன. ராம,லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக,மன அழுக்கு இன்றி இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே.மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.
எல்லா குற்றங்களும்,அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின்தான், வாக்கும் செயலும் அதை செயல்படுத்துகிறது.எனவே,மனதில் மாசு, அதாவது குற்றம் இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.
ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள்.நீர என்றால் தன்மை உடைய என்று பொருள்.பிற என்றால் மற்றவை.ஒருவன்
மனதில் குற்றத்தை வைத்துக்கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக்குற்றத்தை மறைக்க செய்ததாகும்.ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம்,பகட்டு,விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14ம் நாள் போர் தொடங்க இருந்தது.அதற்காக பஞ்சப் பாண்டவர்கள் ஐவரும்,போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.
அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்."கிருஷ்ணா!நீ அனைத்தும் அறிந்தவன்.உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீயே,வீழ்பவனும் நீயே.எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.அது யாதெனில்..
இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?”. அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,"இன்றைய போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இன்றையப் போரில்,இந்த உலகத்தில் மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்”என்றார்.