புதிதாக அரசியல்வாதி வேடம் போட்டவர்களுக்கு கொள்கையை கேட்டால் பதட்டம் வருகிறது. கொள்கையே இல்லாமல் கட்சியை ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நாம் அவர்களை உடனடியாக முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டுமாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக, தேர்தல் அறி்க்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஆரம்பிக்கும். அந்தக்குழுவிற்கு தலைவர் இருப்பார். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும், ஊர் வாரியாக அலசி, அந்த அறிக்கையை தயாரிப்பார்கள். அதுமட்டுமல்லாது, முத்தாய்ப்பான சில அறிவிப்புகளை திமுக வெளியிடும்.
அந்த அறிவிப்புகள், தேர்தலின் போக்கையே மாற்றும். ஏனெனில், திமுக இன்று அறிவித்தால், நாளை அது அரசாணையாகும் என்பதை மக்கள் அறிவார்கள்.
இந்த வரிகட்டாத, வாடகை தராத நடிகர்கள் இலவசத்திட்டம் என எள்ளி நகையாடும்,மக்கள் நல சமூகநீதி திட்டங்களை திமுக இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் அறிவிக்கும்.
அது ஒரு அதிர்வலையை உருவாக்கும். அது மட்டுமில்லாமல், வெளிப்படையாக “மதுவிலக்கை” ஆதரிக்கிறோம், “சாதி மறுப்பு திருமணங்களுக்கு” உதவித்தொகை என கூறும் திராணி உள்ள பெரிய கட்சி திமுக தான்.
ஆனால், அதிமுக என்ன செய்யுமென்றால், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் வரை காத்திருந்து,
ஓரிரு நாளில் அவர்களது அறிக்கையை பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடும். ஆமாம், கமல் படம் போல காப்பியடித்து வெளியிடும்.
ஒரு தேர்தல் அறிக்கையையே இத்தனை சிரத்தை எடுத்து வெளியிடும் கட்சியான திமுக, கொள்கையை எந்தளவுக்கு வைத்திருக்கும்?
திமுக தொண்டனுக்கு வாசிப்பு இல்லை. கொள்கை தெரியாது என தமிழருவி மணியன்கள் வன்மத்தை கொட்டிவிட்டு ரஜினி ரசிகர்களிடம் போய் நின்று விடுவார்கள். ஒரு கட்சியின் கொள்கையை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றால், எப்படியும் கொண்டு சேர்த்துவிடுவார்கள். நிறைய திமுக காரன் அதிகமாக பேசுவான்.
ஏனெனில், அவன் இந்த கொள்கையும், அரசியலையும் உள்வாங்கியவனாக இருப்பான். அதிகம் பேசாத திமுக காரனிடம் போய் நீங்கள் திமுகவின் கொள்கை யாது எனக்கேட்டாலும், கீழ்காணும் ஏதோ ஒன்றை அவன் சொல்வான்.
கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு.
மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி.
ஒன்றே குலம்,ஒருவனே தேவன்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம்..
இந்த ஒவ்வொரு வரிகளிலும் திமுகவின் கொள்கை இருக்கிறது. இந்த முழக்கங்களை அண்ணா, கலைஞர், ஸ்டாலின் என திமுகவின் தலைவர்கள் முழங்கியும், முன்னெடுத்தும் செல்கிறார்கள்.
இந்த கொள்கைகளை யார் வேண்டுமானாலும், காப்பியடித்து செயல்படுத்தலாம். ஏனெனில், இது திமுகவின் கொள்கை என்பதை தாண்டி, தமிழர் நலம் சார்ந்த கொள்கைகள். இதை யார் முன்னெடுத்து சென்றாலும், திமுக அதை வரவேற்கும் ஜனநாயகத்தை கொண்ட கட்சி!
மக்களாட்சியில் கொள்கையை கூட வெளிப்படையாக கூற முடியாதவன், பிராடு என்றறிக!
- ராஜராஜன் ஆர்.ஜெ
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கலைஞர் இல்லாததை இவர்கள் வெற்றிடமாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அப்படி கட்டமைக்க பார்க்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு புரியாத ஒன்று. கலைஞர் என்பது ஒரு பிம்பம் அல்ல. அதாவது எம்ஜிஆரை போல அல்ல.
கலைஞர் என்பது கொள்கை.
கலைஞர் என்பது திராவிட இயக்கம்.
கலைஞர் என்பது உழைப்பு!
அதாவது, யாரெல்லாம் கொள்கையை முன்னெடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திமுகவில் உழைக்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
புத்தரின் கொள்கையான “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இயங்கியல் விதியின் நவீன எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்ற கழகம். இந்த இயக்கம், ஆதிக்கவாதிகள் இருக்கும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும். தலைவர்கள் மாறுவார்கள். இயக்கம் அப்படியே இருக்கும்!
2021 தேர்தலின் ஜெயசூர்யாவாக அண்ணன் ஆ.ராசா களமிறங்கிவிட்டார். சும்மா இருந்த அவரை முதலமைச்சர் பழனிச்சாமி தொட்டு விட்டார். தப்பு பண்ணிட்ட சிங்காரம்,தப்பு பண்ணிட்ட என வேட்டையாட கிளம்பிட்டார் அண்ணன் ஆ.ராசா.இதுவரை திமுக தலைவர் கூட ஜெயலலிதா மரணத்திற்கான நீதியை திமுக ஆட்சி பெற்றுத்தரும்
என்று தான் சொல்லியிருந்தார். அவரது டார்கெட் ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழ்நாட்டை நாசம் செய்யும் இந்த அடிமை கூட்டத்தை ஒழிப்பதாகவே இருந்தது. இன்னொன்று, திமுக தலைவர், தொடர்ச்சியாக இந்த அடிமை அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு வெகுநாளாக பதில் சொல்லமுடியாமல் இருந்த பழனிசாமிக்கு யாரோ, வாட்சாப் பார்வெர்டில் சர்காரியா, 2ஜி என அனுப்ப, அதையே அவர் பேச... ஆ.ராசா வாடா வா, இதுக்கு தான் காத்திருக்கிறேன் என தனது ஜெயசூரியா மட்டையை சுழற்ற ஆரம்பித்து இருக்கிறார்.
திமுகவில் ஏன் அனைவரும் நாத்திகர்களாக இல்லை?
திமுகவில் ஏன் அனைவரும் சாதி,மத மறுப்பாளர்களாக இல்லை?
கொள்கையை திணிக்க முடியாது. உண்மையை சொல்லப்போனால் பலதரப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தான் திமுக இருக்கிறது. அதில் சாதி வெறியனும் இருக்கிறான், சாதி மறுப்பாளனும் இருக்கிறான்.
மத வெறியனும் இருக்கிறான். மத மறுப்பாளனும் இருக்கிறான். கடவுள் நம்பிக்கையாளனும் இருக்கிறான். கடவுள் மறுப்பாளனும் இருக்கிறான். இந்த பன்மைத்துவம் தான் கட்சியின் பலம், பலவீனம் இரண்டுமே!
திமுகவை நாத்திக கட்சி என்று சொல்வோர் உண்டு. ஆனால், எல்லா திமுக காரணும் நாத்திகன் இல்லை.
கலைஞர் நாத்திகராக இருந்ததால் அப்படி பெயர் வந்து இருக்கலாம்.
திமுகவை பள்ளர் பறையர் கட்சி என்பார்கள். இன்றோ, அதையும் உடைக்க தலித் இயக்கங்கள் பாடுப்பட்டு கொண்டு இருக்கிறது!
திமுகவின் பாதை.. நீண்ட பாதை.. மக்களாட்சி பாதை... அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து...
ஏன் கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று சொல்லுகிறோம்?
தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகள் அதிமுகவும் திமுகவும் தான். 2016 சட்டசபை தேர்தலில், அதிமுக 40 சதவிகிதமும், திமுக 31 சதவிகிதமும் வாக்குகளாக பெற்றது. அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டதும்,
திமுக கூட்டணிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்து போட்டியிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த தேர்தலில் மாற்று அரசியல் என்று சொல்லி போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சி (1.09), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (2.41), பாமக (5). இதில் பாமகவின் வாக்கு வங்கி
எது என்று தெரியும். இவர்கள் மாற்று என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றில் பெரும்பான்மை வன்னியர் சாதி ஓட்டுகள் மட்டும் தான். அதுவும் 2019 தேர்தலில், பாமகவுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மாற்று அரசியல் பேசிய மற்ற கட்சிகள் இன்று திமுக கூட்டணியில் இருப்பதால்
Why one should read Babasaheb Ambedkar? 1. To know the real history of india 2. To know what is a religion 3. To know how the Caste system originates and how it works 4. To know what is democracy 5. To know Buddha, Buddhism and Indian Politics
6. To know how to annihilate Caste 7. To know the meaning of Freedom, Fraternity & equality 8. To know the myths we have in our heads in the name of culture, practices & beliefs 9. To know what is rationalism 10. To know how & why to stand and fight for the Oppressed classes.
பாபாசாகேப் அம்பேத்கரை ஏன் படிக்க வேண்டும்? 1. உண்மையான இந்திய வரலாறை அறிந்துக்கொள்ள 2. மதம் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள 3. சாதி எப்படி உருவாகியது, சாதி எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துக்கொள்ள 4. மக்களாட்சி என்றால் என்னவென்று புரிந்துக்கொள்ள
தோழர் மதிமாறன் தொடர்ந்து ஒரு விசயத்தை சொல்லி வருகிறார். ஒடுக்கப்படுவதாக நினைக்கும் அனைவரும், குறிப்பாக மாணவர்கள் தலைவர் அம்பேத்கரின் “வாழ்க்கை வரலாறை” கட்டாயம் படிக்க வேண்டும். அவரது வாழ்க்கையை படித்தால், இன்று நாம் படும் அல்லல்களும், அவமானங்களும் ஒன்றுமே இல்லை எனத்தோன்றும்.
அந்த அவமானங்களை எல்லாம் கடந்து அவர் எப்படி மிகப்பெரிய மக்கள் தலைவர் ஆனார் என்றுப்படிக்கும் போது, நமக்கு, தற்கொலை எண்ணங்கள் வராது என்று மதிமாறன் குறிப்பிடுவார்.
இங்கே ஒடுக்கப்படுவோர் என்பதில் தலித்துகள் மட்டுமல்ல. சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் கூட வருவார்கள்.
“வெமுலாவின் கனவு” என்ற என் கதையில், கடைசியில் அம்பேத்கரின் கண்களைப்பார்த்து ரோகித் வெமுலா நம்பிக்கை கொள்வதாக எழுதி இருப்பேன். அது மேற்சொன்ன கருத்தின் தாக்கம் தான்!
அண்ணல் அம்பேத்கரை வெமுலாக்கள் மட்டுமல்ல, பாத்திமாக்களும், திருப்பூர் சரவணன்களும் வாசிக்க வேண்டும்.