#thread தி.மு.க. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு 1967. இப்போது - 2020 - அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து, திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டு கால ஆட்சி முடிந்து விட்டது என குறிப்பிடப்படுகிறது
உண்மையில் திராவிட இயக்கத்தின் சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால் நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே சொல்ல வேண்டும். திராவிட இயக்க ஆட்சிகளின் சாதனையைச் சொல்லும்போது இரு பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்: முதல் பகுப்பில் நீதிக்கட்சி 17 ஆண்டுகளும் தி.மு.க. 21 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கும்
இரண்டாவது பகுப்பில் அதிமுக
இருக்கும். இக்கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர். பத்து ஆண்டுகளும் அதற்குப் பிறகு ஜெயலலிதா 15ஆண்டுகளும் 2016க்குப் பிறகு ஒரு ஆண்டு என மொத்தமாக 26 ஆண்டுகள் அக்கட்சியின் ஆட்சி நடைபெற்றிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை அ.தி.மு.கவை திராவிடக் கட்சியாகக் கருதுவதில்லை
திராவிடக் கட்சிகள் என்று நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. ஆகியவற்றை மட்டுமே கூறமுடியும்.
இக்கட்சிகள் தங்கள் கொள்கை அறிக்கைகளை வெளியிட்டு, ஒவ்வொரு கொள்கைக்கும் பொருத்தமான காரணங்களைக் கூறியிருக்கின்றன
ஒரு நோக்கம் ஒரு கொள்கை ஒரு குறிக்கோளினை அடையவேண்டும்
என்ற கட்டுப்பாடுடனும் அதன் முறைகளோடு இயங்கினர், கட்சிகளை நடத்தினர்.
அ.தி.மு.க. இந்த வகைப்பாட்டிற்குள் வராத கட்சி. இதன் நிறுவனரான எம்.ஜி.ஆர். தி.மு.கவி்ல் 19 ஆண்டுகள் இருந்தது மட்டுமே அவர் அரசியல் கட்சியைத் துவங்குவதற்கான தகுதியாக அமைந்தது. குறிக்கோள், லட்சியம் என்று ஏதும் இல்லை
இப்போது திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று நாம் பேசப்போவது, அவற்றின் கொள்கை அடிப்படையிலான சாதனைகளை மட்டுமே. நலத்திட்டங்களை அல்ல.
` #சாதனைகள்_எளிதானவை_அல்ல`
நீதிக்கட்சி, தி.மு.க. ஆகியவை தங்களது ஆட்சியில் பின்வரும் சாதனைகளைச் செய்திருக்கின்றன
1. சமூக நீதியை நீதிக் கட்சி அறிமுகப்படுத்தியது
2. இந்து சமய அறநிலைய பாதுகாப்புச் சட்டம்
3. தேவதாசி ஒழிப்புச் சட்டம், 4. பார்ப்பனர் அல்லாதார் கல்வி கற்க ஏற்பாடு
5. அதிகார மையங்களில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வாய்ப்புகளைப் பெறுதல்
6. உயர்கல்வி, அரசுப் பதவிகளில்
பார்ப்பனர்
அல்லாதாருக்கு வாய்ப்பு 7. சமஸ்கிருதம் இந்திக்கு எதிரான உணர்வை ஊட்டுதல்
8. மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர்சூட்டியது
9.சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்
10. இருமொழித் திட்டம்,
11. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம்
12பெண்களுக்கு சொத்துரிமை வழங்கச் சட்டம்
13. நீதிக் கட்சிக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை,
14. பலதாரத் தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தி.மு.க. துணை நின்றது,
15. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது,
16. தமிழில் அர்ச்சனை,
17. தமிழை ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரை படிக்க சட்டம்,
18. கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழியாக அறிமுகப்படுத்தியது, 19. பொருளாதார இடஒதுக்கீடு என்பதைத் தகர்த்தது, 20. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடுகளில் இஸ்லாமியருக்கும் அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடுகள்.
மேலே சொன்ன சாதனைகள் எதுவும் எளிதாக நிறைவேறிவிடவில்லை.
மற்ற இந்திய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு தனித்தன்மை உடையது என்பதை இந்த சாதனைகள் நிலைநிறுத்திக் காட்டுகின்றன.
அடுத்ததாக அ.தி.மு.கவைப் பற்றிப் பார்ப்போம். எம்மைப் பொறுத்தவரை அ.தி.மு.கவை திராவிடக் கட்சியாக ஏற்பதில்லை
என்றாலும் அக்கட்சி கொடியில் உள்ள கருப்பு சிவப்பு வண்ணங்களும்
அண்ணாவின் உருவமும் ஒரு திராவிட இயக்கம் என்ற மாயையை உருவாக்கி விடுகின்றனஇருந்தபோதும், அ.தி.மு.கவின் சாதனைகளாக சொல்லப்படுவதை கீழ்க்காணும்படி வரிசைப்படுத்தலாம்:
: 1. 69 சதவீத இட ஒதுக்கீடு, 2. தமிழில் பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, 3. கிருஷ்ணா நதி நீரை
சென்னைக்குக் கொண்டுவந்தது, 4. முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம்.
இச்சாதனைகள் எல்லாம் அக்கட்சி சிந்தித்து செயல்பட்ட கொள்கைவயப்பட்ட சாதனைகள் அல்ல. 69 சதவீத இடஒதுக்கீடு சாதனை என்பது எம்.ஜி.ஆர். பொருளாதார அளவுகோலைக் கொண்டு இடஒதுக்கீடு அமைய வேண்டும் என்று அறிவித்ததால் ஏற்பட்டதாகும்
அதாவது அப்படி ஒரு அறிவிப்பைச் செய்து அவர் மாட்டிக்கொண்டார்.
போராட்டம் வெடித்தது. அதனால் இடஒதுக்கீடு சதவீதத்தை மாற்றி உயர்த்தி அமைக்க வேண்டியதாயிற்று.
`புரிதல் இல்லாமல் செய்த எம்.ஜி.ஆர்`
எஸ். முத்தையா முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராசர், கருணாநிதி ஆகியோர் முதல்வராக
இருந்தபோது இடஒதுக்கீடு சதவீதம் படிப்படியாக உயர்ந்ததற்கும் எம்.ஜி.ஆர் காலத்தில் ஒரேயடியாக உயர்ந்ததற்கும் வேறுபாடு இருக்கிறது.
எம்.ஜிஆர். சமூக நீதி, இடஒதுக்கீடு குறித்து சிறந்த புரிதல் இல்லாமல் இவற்றைச் செய்தார். அது லாபமாகிவிட்டது.
பெரியார் நூற்றாண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்
இடம்பெற்றது. ஏதாவது அவர் செய்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோதுதான் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அவர் வாழ்க்கை வரலாற்றையும் ஒலி - ஒளியாக அமைத்துக் காட்டினார்.
கிருஷ்ணா நதி நீரைச் சென்னைக்குக் கொண்டுவந்த திட்டம் என்பது அ.பொ. அரசு சென்னையின் மேயராக
இருந்தபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானம். 1963ல் நாவலர் நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறபோது கிருஷ்ணா நதி நீர் பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். அந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் என்.டி.ஆர். பங்கேற்புடன் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
1959லிருந்து தொடர்ந்து அதற்குரிய பணிகள் நடைபெற்றன. எம்.ஜி.ஆரே தொடங்கி, முடித்துவைத்த திட்டமல்ல கிருஷ்ணா நதி நீர் திட்டம்.
நலத்திட்டங்கள்
முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் என்பது, எம்.ஜிஆரால் விரிவுபடுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் முதலில் சென்னை நகராட்சிப் பள்ளிக்கூடங்களில்
பிட்டி. தியாகராயரால் அறிமுகப்படுத்தப்பட்டது பிறகு காமராஜர் முதல்வரான காலத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நண்பகல் உணவு அளிக்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார். அதற்குச் சத்துணவுத் திட்டம் என்ற பெயரும் வைக்கப்பட்டது
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ திராவிட இயக்கத்தின் எந்த மூலக் கொள்கைகளையும் அவர்களாகவே முன்வந்து அவர்களின் ஆட்சியின்போது சாதனைகளாக நிகழ்த்திக்காட்டவில்லை.
தி.மு.க. திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கைகளைத் தாமாகவே முன்வந்து நிறைவேற்றிக்காட்டியது.
அது குறித்து வழக்குகளைச் சந்தித்தது.
நலத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. சென்னையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டன. தி.மு.கவின் அரசியல் எதிரிகளால் குடிசைகள் கொளுத்தப்பட்டன. பிறகு அவை குடிசை மாற்று வாரிய வீடுகளாக மாற்றம்பெற்றன. குடிசைகள் ஒழிக்கப்பட்டன
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 29 அணைகள் கட்டப்பட்டன. நீர் பாசனக் கால்வாய்கள், குடிநீரேற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆட்சியில் நிர்வாகக் குறைகள் இருப்பது இயல்பு. தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிர்வாகச் சீர்கேடே ஆட்சியாக இல்லை என்பதே முக்கியமானது.
நம்மைப் பொறுத்தவரை, நீதிக்கட்சியும் தி.மு.கவுமே திராவிட இயக்கம் என கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். அக்கட்சிகள் திராவிட இயக்கக் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டன என சொல்லமுடியாது. முடிந்தவரை நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், பொத்தாம்பொதுவாக அ.தி.மு.கவோடு தி.மு.கவையும் இணைத்து
ஆனால், பொத்தாம்பொதுவாக அ.தி.மு.கவோடு தி.மு.கவையும் இணைத்து 'திராவிட இயக்கம்' என்று சொல்வது அனுசரணையாகுமே தவிர மெய்யாகாது
#thread
தமிழம் மதத்தின் நிறுவனரும், வீர சைவ மத பிரச்சாரகரும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக அடியாள் படையான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகிய சீமான் அவர்களை இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்...
இவர்களை ஒரு பயலும் வந்து சந்திக்கப் போவதில்லை,இவர்கள்தான் ஒவ்வொருத்தர்
வீட்டு கதவையும் தட்டுவார்கள். விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் CAA NRC NPR சட்டங்களுக்கு எதிராக உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் போது ராமதாஸ் வீட்டு கதவை தட்டி மகிழ்ச்சியடைவார்கள்.
இவர்களுடைய அரசியல் அறிவை கண்டு உலக அரசியலில் ஆராய்ச்சியாளர்களே மிரண்டு போய் இருக்கிறார்கள்
எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது.. ஏன் இந்த தலைவர்கள் (?) இன்னும் சீமானை சந்திக்கவில்லை என்ன காரணம்.?யார் செய்த தாமதம்.?
சமுதாய அமைப்புகளில் மாணவரணி வர்த்தக அணி, விவசாய அணி இருப்பதைப்போல "சீமான் நலப்பேரவை" ஒன்றை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ஹீமாயுன் கபீர்களுக்கு.....
முருகனையும் சிவனையும் ஏற்றுக்கொண்டுதான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திலிருந்து எங்கள் கட்சியில் சேருகிறார்கள் என சீமானே வெளிப்படையாக அறிவித்து விட்ட பிறகு (பார்க்க தந்தி டிவி காணொளி
"நானே ஒரு புது மதத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன்
அந்த மதத்திற்கு பெயர் தமிழம், எங்கள் கடவுள் முப்பாட்டன் முருகனும் சிவனும், எங்கள் வேதநூல் திருக்குறள் இன்னும் 10 ஆண்டுகளில் மொத்த தமிழனும் அந்த மதத்தில் தான் இருப்பான்" என்று மதத்தின் நிறுவனர் சீமானே வெளிப்படையாக அறிவித்து விட்ட பிறகு....
( பார்க்க 2014 மேடைப்பேச்சு காணொளி)
முஸ்லீம் இளைஞரின் திருமணம் விடயமாக ஹிமாயூன் கபீர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசி அது தனிமனித விவகாரம் அந்த தனி மனிதன் செய்த தவறுக்கு சீமான் எப்படி பொறுப்பேற்க முடியும் என பேசுவதோடு சமுதாயத்தையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது பச்சையான அயோக்கியத்தனம்...