மோதி எதிர்ப்பா? தேச எதிர்ப்பா?

போராட்டங்கள்! போராட்டங்கள்! போராட்டங்கள்!

யாரை எதிர்த்து இந்தப் போராட்டங்கள்?

அவர்கள் எதிர்ப்பது மோதியையா? பாஜகவையா? இல்லை, இல்லவே இல்லை. அவர்கள் எதிர்ப்பது என்னையும், உங்களையும், நம் போன்ற சாதாரண மக்களையே.
மண்டிகள் என்ற பெயரில் ஏழை, நடுத்தர விவசாயிகளை சுரண்டி கொழுத்த தரகு கும்பலின் பல்லாண்டு சுரண்டலை முடிவுக்கு கொண்டு வருகிறது விவசாய சீர்திருத்த சட்டங்கள். அதனை எதிர்ப்பதன் மூலம் மோதியைத் தானே எதிர்க்கிறார்கள் என்று கேட்கலாம் நீங்கள்.
மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால் உண்மைகள் வேறானவை. இங்கே காலம் காலமாக நடைமுறை நிலை (status quo) நிலவி வந்தது. விவசாயம் என்று மட்டுமில்லை, அனைத்து துறைகளிலும் ஒருவிதமான வேரூன்றிய சமநிலைத்தன்மை (established equilibrium) நிலவி வந்தது.
பாகிஸ்தானில் உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் இந்திய கரன்சி தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தேசிய புலனாய்வு முகமை (NIA)  2013ம் வருடத்தில் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்திருந்தது.
எத்தனை ஆயிரம் (லட்சம்?) கோடிகள் புழக்கத்தில் வந்தனவோ சர்வேஸ்வரனுக்கு மட்டுமே வெளிச்சம். உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அவற்றிற்கு சமாதி கட்டினார் மோதி.
காங்கிரஸின் ராகுல் காந்தி, திமுகவின் ஸ்டாலின் முதற்கொண்டு SDPI உள்ளிட்ட உதிரிகள் வரை இதனை கடுமையாக எதிர்த்ததை நினைவுகூர்தல்  நலம்.
விளைபொருட்களை தரகு வியாபாரிகள் வாங்கி பதுக்கி வைத்து பண்டிகைகள் போன்ற தேவைப்படும் காலங்களில் கண்டபடி விலையை உயர்த்தி வைத்து கொழுத்த லாபம் சம்பாதித்து வந்தார்கள். ஜிஎஸ்டி மூலம் அதை முடிவுக்குக் கொண்டு வந்தார் மோதி.
மிகவும் இறுக்கமான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி நடைமுறையிலேயே போலி பில்கள் மூலம் இத்தனை ஆயிரம் கோடிகள், அத்தனை ஆயிரம் கோடிகள் மோசடி என்று அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்லைன் அமைப்புகள் உள்ளதால் இந்த மோசடிகள் அம்பலத்திற்கு வருகின்றன.
இது எதுவுமே இல்லாத பழைய முறையில் எவ்வளவு ஆயிரக்கணக்கான கோடிகள் அரசு பணம் விழுங்கப்பட்டு ஏப்பம் விடப்பட்டதோ, பெருமாளுக்கு மட்டுமே வெளிச்சம். 

மருத்துவப் படிப்பு என்பது ஒருவகையில் பண்டைய வரிவசூல் உரிமை போல இருந்த காலம் இருந்தது.
தலைமுறை தலைமுறைகளாக அந்த உரிமம் பெற்றிருந்தவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் உள்ளே கால் வைக்க முடியும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெருந்தனக்கார குடும்பங்களில் பிறந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான விதி எண் 1.
உறுதியாக நின்று உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தினார் மோதி. விளைவு? பாமரன் வீட்டுக் குழந்தையும் தனது திறமை, உழைப்பின் மூலம் படித்து   தலைமுறைகளின் கனவை நனவாக்கிக் கொண்டது. வருடாவருடம் ஆயிரக்கணக்கான கோடிகளை கல்லா கட்டிய வியாரிகள் அவ்வளவு எளிதில் விட்டு விடுவார்களா?
பல தற்கொலைகள் நிகழ்ந்தன, ஊடகங்கள் என்ற பெயரில் இயங்கும் ஓநாய்கள் ஓலமிட்டன. நாடகங்களையும் இயக்குபவர்களையும் நன்கறிந்த பிரதமர் அசையாமல் நின்றார். சாதாரண மனிதன் வீட்டுக் குழந்தையும் மருத்துவராகும் கனவு வசப்பட்டது.
மருந்துகளிலும் இதையேதான் செய்தார். ஜன் ஔஷதி எனப்படும் மக்கள் மருந்தகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு கிடைக்கும் மருந்துகளை சில நூறுகளில் கிடைக்கச் செய்தார்.
இதய அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட்களில் நடந்து கொண்டிருந்த உலகக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வந்தார். கந்து வட்டிக்கு கடன் வாங்கி நாசமாகிப் போன கணக்கற்ற சிறு வியாபாரிகளுக்கு முத்ரா திட்டம் மூலம் அபய முத்திரை அளித்துக் காத்தார்.
இவ்வளவும் அவர் யாருக்காக செய்தார்? உங்களுக்காக, எனக்காக, நம் போன்ற பல கோடி சாதாரண மக்களுக்காக.
தலைமுறைகளாக வஞ்சிக்கப்பட்ட நாம் இனியும் தொடர்ந்து சுரண்டப்பட்டு அழியக்கூடாது என்பதற்காக. தாமதமாக இருந்தாலும் நாமும் விழித்துக் கொண்டோம். அவர் பின்னர் ஒன்று திரண்டு அணிவகுத்து நிற்கிறோம்.
இவரது இந்த தொடர் நடவடிக்கைகளால் ஒவ்வொரு துறையிலும் மக்களை சுரண்டி தின்று கொழுத்துக் கொண்டு எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த இடைத்தரகர்கள் கும்பல்கள் கதறி அழுதன. அவர்கள் பிழைப்பில் நிரந்தரமாக மண் விழுந்தது.
அவ்வளவு எளிதில் விடுவார்களா? அவர் மீதான கோபம் ஆத்திரமாக மாறி வன்மமாக மாறியுள்ளது. நாட்டின் சாதாரண மனிதனுக்காக உழைக்கும் அவர் மீதான கோபம் சாமானிய மனிதன் மீதான கோபமாக உருமாறி உள்ளது.
சாமானியன் வீட்டுப் பிள்ளை மருத்துவ கல்லூரியில் சேருவதா? சாமானியன் சில  நூறு ரூபாய் மட்டும் செலவு பண்ணி மருந்து சாப்பிட்டு பன்னாட்டு மருந்து கம்பெனிகள் பாழாய் போவதா? கந்து வட்டிக்கு வாங்காமல் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்வதா?
கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்காமல்   நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிப்பதா? பல லட்சம் செலவாகும் இடத்தில் சில பத்தாயிரம் செலவு செய்து இதய ஆபரேஷன் செய்து கொள்வதா?
விவசாயி விளைச்சலை மண்டியில் கொண்டு வந்து கொட்டி விட்டு தரும் பணத்தை வாங்கிக்கொண்டு செல்லாமல் நேரடியாக விற்று லாபம் சம்பாதிப்பதா?
எவ்வளவு நபர்களின் பிழைப்பு கெடுகிறது, எவ்வளவு சுரண்டல்கள் அழிகின்றன, எவ்வளவு கோட்டைகள் மண்ணோடு மண்ணாய் சரிகின்றன: அனைவரும் ஒன்று திரள்கிறார்கள்.
அவரால் வீழ்த்தப்பட்ட அரசியல் எச்சங்கள் அவர்களின் பின்னர் அணிவகுக்கின்றன. ஊடக ஓநாய்கள் சேர்ந்து கொள்கின்றன. போர் முரசு கொட்டப்படுகின்றது.
எச்சரிக்கை:

அவரைத் தாக்கவில்லை – உங்களை, என்னை, நம்மை தாக்குகிறார்கள். அவரை ஏளனப்படுத்தவில்லை –  உங்களை, என்னை, நம்மை ஏளனப்படுத்துகிறார்கள். அவரை கேலி செய்யவில்லை – உங்களை, என்னை, நம்மை கேலி செய்கிறார்கள்.

சஞ்சிகை பகிர்வு 🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

21 Dec
பெயர்: நரேந்திர மோதி!

அனுபவம்: முதல்வர் - 15 ஆண்டுகள், பிரதமர் - கிட்டதட்ட 7ஆண்டுகள்!

விடுமுறை: இல்லை!

ஊழல்: இல்லை!

சொத்து: காந்தி நகரில், 2001 இல் ரூபாய் ஒரு லட்சத்தில் வாங்கிய, 900 சதுர அடி வீட்டைத் தவிர வேறொன்றும் இல்லை!
வங்கி இருப்பு ₹11லக்ஷம்!
₹1.5 கோடி ஃபிக்செட் டெபாசிட்!
ஐந்து லக்ஷம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரம்!

சொந்த வாகனம்: எதுவுமில்லை!

பதவியை வைத்து ஆதாயம் அடைந்த குடும்பத்தினர்: ஒருவருமில்லை!
சுமார் இருபதாண்டுகள் உயரிய பதவியிலிருந்துக்கொண்டு, இதைவிட குறைவான சொத்துப் பட்டியல் வைத்திருக்கும் ஒரேயொரு அரசியல்வாதியையாவது, மோடி எதிர்ப்பாளர்கள் காட்டட்டும்! நாளையிலிருந்து நான் மோடியை எதிர்த்து பதிவிடுவதுடன், அந்தத் தலைவனை சகட்டுமேனிக்கு புகழ்ந்தும் எழுதுகிறேன்!
Read 6 tweets
21 Dec
இன்று சனிபகவானும் குருவும் நெருக்கமாக சந்திக்கும் நாள்

397 ஆண்டுகளுக்கு பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; இன்று நிகழவிருக்கும் வானியல் அதிசயம்!
சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. இந்த கோள்கள் கடைசியாக கடந்த 1623 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொண்டன.
சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அரிய நிகழ்வு விண்வெளி ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளாது.
நாளை இந்த இருகோள்களும் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் சந்தித்துக்கொள்ளவுள்ளன.
Read 4 tweets
21 Dec
*கோபுர தரிசனம் கோடி புண்ணியம்*

ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம்!

ஆலயங்கள் அமைத்து, அங்கு தெய்வ திருவுருவச் சிலைகளை எழுந்தருளச் செய்து அவற்றை வழிபடுவதன் மூலம் ஆத்ம ஈடேற்றமும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யும் வழிமுறைகளை ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர்.🙏1 Image
அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

🇮🇳🙏2
”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை.

🇮🇳🙏3
Read 26 tweets
21 Dec
*அருள்மிகு ஸ்ரீ தேவி பூ தேவி சமேத பரமஸ்வாமி திருக்கோவில்*

அழகர் கோவில்
மதுரை மாவட்டம்

ஒரு சமயம் எமதர்மராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தைப் போக்க பூலோகத்தில் தற்சமயம் கோவில் இருக்கும் அழகர் மலை ( விருசுபகிரி ) என்னும் இம்மலையில் தவம் செய்கிறார். இம்மலை ஏழு மலைகளை கொண்டது.🙏1 Image
எமதர்மராஜனின் தபசை மெச்சி பெருமான் காட்சி தந்தார். இறைவனின் கருனையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமானிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகினும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். 🇮🇳🙏2
அதன் படி பெருமாளும் வரம் மர இன்றும் இக்கோவிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜனே நடத்துவதாக ஐதீகம்.

எல்லா மக்களுக்கும் அருள்தருரமாறு எமதர்மராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் ( வட்ட வடிவ ) உள்ள கோவில் கட்டப்பட்டது.

🇮🇳🙏3
Read 5 tweets
20 Dec
"நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் "

ஓம் மஹா பெரியவா திருவடிகளுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் ஓம் மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய
பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு! Image
"திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’-பெரியவாளின் கேள்வி-இது,

(‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்,
புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்).-
Read 14 tweets
20 Dec
இறைவர் திருப்பெயர் : நாகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : பிரஹந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், ஆதிசேஷன்,
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,

🙏🇮🇳1 Image
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 90 வது தேவாரத்தலம் ஆகும்.

🙏🇮🇳2
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான்.

🙏🇮🇳3
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!