இறைவியார் திருப்பெயர் : பிரஹந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், ஆதிசேஷன்,
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,
🙏🇮🇳1
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 90 வது தேவாரத்தலம் ஆகும்.
🙏🇮🇳2
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான்.
🙏🇮🇳3
ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் உருதியை தருவதாக உறுதியளித்தார்.
🙏🇮🇳4
பரிபூரணதி பெற்ற ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
🙏🇮🇳5
ஒரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம் என போற்றப்பட்டது.
🙏🇮🇳6
அவ்விடத்தில் இக்கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் , பாதாள பீஜநாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. மடந்தை பாகர், செல்வபிரான் என்றும் சுவாமிக்கு பெயர்கள் உண்டு.
🙏🇮🇳7
கோவில் அமைப்பு:
கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் நாகேஸ்வரன் கோவில் என்ற பெயரில் எல்லோராலும் அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாகும்.
🙏🇮🇳8
கிழக்கு கோபுர வாயில் வழியாக உள் நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சிங்கமுக தீர்த்தக்கிணறு உள்ளது. படிகள் இறங்கிச் செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது.
🙏🇮🇳9
வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. தெற்கிலுள்ள போபுர வாயில் வழியாகவும் இந்த வெளிப் பிரகாரத்திற்கு வரலாம்.
அடுத்துள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் இடதுபுறம் பதினாறுகால் மண்டபமும் வலதுபுறம் நடராசசபையும் உள்ளன.
🙏🇮🇳10
இந்த நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத் தக்கவையாகும்.
🙏🇮🇳11
குதிரைகளும், யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது.
அடுத்துள்ள வாழில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. உயரமான ஆவுடையார் மீது மிகவும் குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார்.
🙏🇮🇳12
கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். கருவறைச் சுற்றில் கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலை மீது கை ஊன்றி நிற்கும் நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
🙏🇮🇳13
இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலத்திலுள்ள மற்ற சந்நிதிகள் - பிரளயகாலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள், வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
🙏🇮🇳14
இத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு சித்திக்கும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னதியும் உள்ளன.
🙏🇮🇳15
இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும்.
இக்கோயிலின் சிறப்பம்சமே இந்த பிரளயகால ருத்திரர் சன்னதிதான். சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன.
🙏🇮🇳16
இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது.
🙏🇮🇳17
ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.
சிறப்புக்கள் :
இந்தச் சன்னதியில் ஞாயிறு மாலை 4.30 - 6.00க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்தால் சகலநோய்களும் நீங்கும்.
இறுதிக்காலத்தில் உண்டாகும் மரண துன்பம் அறவே இல்லாமல் போகும்.
அனுபவம்: முதல்வர் - 15 ஆண்டுகள், பிரதமர் - கிட்டதட்ட 7ஆண்டுகள்!
விடுமுறை: இல்லை!
ஊழல்: இல்லை!
சொத்து: காந்தி நகரில், 2001 இல் ரூபாய் ஒரு லட்சத்தில் வாங்கிய, 900 சதுர அடி வீட்டைத் தவிர வேறொன்றும் இல்லை!
வங்கி இருப்பு ₹11லக்ஷம்!
₹1.5 கோடி ஃபிக்செட் டெபாசிட்!
ஐந்து லக்ஷம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரம்!
சொந்த வாகனம்: எதுவுமில்லை!
பதவியை வைத்து ஆதாயம் அடைந்த குடும்பத்தினர்: ஒருவருமில்லை!
சுமார் இருபதாண்டுகள் உயரிய பதவியிலிருந்துக்கொண்டு, இதைவிட குறைவான சொத்துப் பட்டியல் வைத்திருக்கும் ஒரேயொரு அரசியல்வாதியையாவது, மோடி எதிர்ப்பாளர்கள் காட்டட்டும்! நாளையிலிருந்து நான் மோடியை எதிர்த்து பதிவிடுவதுடன், அந்தத் தலைவனை சகட்டுமேனிக்கு புகழ்ந்தும் எழுதுகிறேன்!
இன்று சனிபகவானும் குருவும் நெருக்கமாக சந்திக்கும் நாள்
397 ஆண்டுகளுக்கு பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; இன்று நிகழவிருக்கும் வானியல் அதிசயம்!
சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. இந்த கோள்கள் கடைசியாக கடந்த 1623 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொண்டன.
சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அரிய நிகழ்வு விண்வெளி ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளாது.
நாளை இந்த இருகோள்களும் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் சந்தித்துக்கொள்ளவுள்ளன.
ஆலயங்கள் அமைத்து, அங்கு தெய்வ திருவுருவச் சிலைகளை எழுந்தருளச் செய்து அவற்றை வழிபடுவதன் மூலம் ஆத்ம ஈடேற்றமும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யும் வழிமுறைகளை ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர்.🙏1
அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.
🇮🇳🙏2
”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை.
*அருள்மிகு ஸ்ரீ தேவி பூ தேவி சமேத பரமஸ்வாமி திருக்கோவில்*
அழகர் கோவில்
மதுரை மாவட்டம்
ஒரு சமயம் எமதர்மராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தைப் போக்க பூலோகத்தில் தற்சமயம் கோவில் இருக்கும் அழகர் மலை ( விருசுபகிரி ) என்னும் இம்மலையில் தவம் செய்கிறார். இம்மலை ஏழு மலைகளை கொண்டது.🙏1
எமதர்மராஜனின் தபசை மெச்சி பெருமான் காட்சி தந்தார். இறைவனின் கருனையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமானிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகினும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். 🇮🇳🙏2
அதன் படி பெருமாளும் வரம் மர இன்றும் இக்கோவிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜனே நடத்துவதாக ஐதீகம்.
எல்லா மக்களுக்கும் அருள்தருரமாறு எமதர்மராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் ( வட்ட வடிவ ) உள்ள கோவில் கட்டப்பட்டது.
கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'