"நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் "
ஓம் மஹா பெரியவா திருவடிகளுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் ஓம் மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய
பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!
"திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’-பெரியவாளின் கேள்வி-இது,
(‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்,
புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்).-
(தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!)
மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.
அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ?’
உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.
ஒரே குரலில்,‘தெரியாது’ என்று பதில் வந்தது.
‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’
இரண்டு நிமிஷ நடை.
‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’
‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும்?..’
பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !
அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..
‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!
திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை
.
பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.
மார்கழி மாதம் வந்தது.
பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.
‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?
‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்,
புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.
அப்புறம் கேட்பானேன்!
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!
தூய்மை இந்தியா திட்டம்: கிராமப்புற இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம்
தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமப்புற இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம் என்ன?
பிரதமர் மோடி தனது கனவுத் திட்டமாக ஸ்வச் பாரத் மிஷன் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2, 2014 அன்று துவக்கி வைத்தார். 2019 அக்டோபருக்குள் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்க்க இந்தியா முழுவதிலும் இலவசமாக கழிப்பறைகளை கட்டித் தருவதாக அறிவித்தார்.
இந்த கழிப்பறை வசதிகளை பெற்றபின் கிராமப்புற இந்தியாவில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.53,000 (727 அமெரிக்க டாலர்கள்) க்கும் அதிகமான மதிப்பிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.
கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.
அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.
(கணித உலகம் ஒரு உண்மையினை ஒப்புகொள்கின்றது, அன்றே இந்த நுண்கணிதம் இருந்திருந்தால் ஐன்ஸ்டீனை நெருங்கும் ஆய்வுகளை ராமானுஜர் கொடுத்திருப்பார் என்கின்றது..)
அற்புதங்கள் !..
பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..
1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
🙏🇮🇳1
2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
🙏🇮🇳2
3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநி என்ற இசை வருகிறது.
🙏🇮🇳3
அனுபவம்: முதல்வர் - 15 ஆண்டுகள், பிரதமர் - கிட்டதட்ட 7ஆண்டுகள்!
விடுமுறை: இல்லை!
ஊழல்: இல்லை!
சொத்து: காந்தி நகரில், 2001 இல் ரூபாய் ஒரு லட்சத்தில் வாங்கிய, 900 சதுர அடி வீட்டைத் தவிர வேறொன்றும் இல்லை!
வங்கி இருப்பு ₹11லக்ஷம்!
₹1.5 கோடி ஃபிக்செட் டெபாசிட்!
ஐந்து லக்ஷம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரம்!
சொந்த வாகனம்: எதுவுமில்லை!
பதவியை வைத்து ஆதாயம் அடைந்த குடும்பத்தினர்: ஒருவருமில்லை!
சுமார் இருபதாண்டுகள் உயரிய பதவியிலிருந்துக்கொண்டு, இதைவிட குறைவான சொத்துப் பட்டியல் வைத்திருக்கும் ஒரேயொரு அரசியல்வாதியையாவது, மோடி எதிர்ப்பாளர்கள் காட்டட்டும்! நாளையிலிருந்து நான் மோடியை எதிர்த்து பதிவிடுவதுடன், அந்தத் தலைவனை சகட்டுமேனிக்கு புகழ்ந்தும் எழுதுகிறேன்!
இன்று சனிபகவானும் குருவும் நெருக்கமாக சந்திக்கும் நாள்
397 ஆண்டுகளுக்கு பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; இன்று நிகழவிருக்கும் வானியல் அதிசயம்!
சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. இந்த கோள்கள் கடைசியாக கடந்த 1623 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொண்டன.
சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அரிய நிகழ்வு விண்வெளி ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளாது.
நாளை இந்த இருகோள்களும் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் சந்தித்துக்கொள்ளவுள்ளன.