கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது.
பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான்
என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது.
சில நிமிடங்கள் கண்ணதாசன் நிறுத்தினார். பின்பு ஆரம்பித்தார்.
வெறும் மண்ணை தின்னப் போகும் உன் சடலத்திற்கே இத்தனை பெயர் வைத்து அழைக்கும் போது, "யாதுமாகி நின்று, எங்கெங்கும் நின்று உலகையே கட்டிக் காக்கும் என் அப்பன் பரம் பொருளை எத்தனை பெயர்களால் அழைத்தால் என்ன..??
அவன் எதற்குள்ளும் அடங்காதவன், எதற்குள்ளும் இருப்பவன். உன்னுள்ளும் இருப்பவன், என்னுள்ளும் இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே, என்னை அழைத்தாலும் அவனே." என முத்தாய்ப்பாக முடித்தார்..
சிலிர்ப்பைத் தவிர சிறிதும் இல்லை அங்கு சலனம் !.
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அனுபவம்: முதல்வர் - 15 ஆண்டுகள், பிரதமர் - கிட்டதட்ட 7ஆண்டுகள்!
விடுமுறை: இல்லை!
ஊழல்: இல்லை!
சொத்து: காந்தி நகரில், 2001 இல் ரூபாய் ஒரு லட்சத்தில் வாங்கிய, 900 சதுர அடி வீட்டைத் தவிர வேறொன்றும் இல்லை!
வங்கி இருப்பு ₹11லக்ஷம்!
₹1.5 கோடி ஃபிக்செட் டெபாசிட்!
ஐந்து லக்ஷம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரம்!
சொந்த வாகனம்: எதுவுமில்லை!
பதவியை வைத்து ஆதாயம் அடைந்த குடும்பத்தினர்: ஒருவருமில்லை!
சுமார் இருபதாண்டுகள் உயரிய பதவியிலிருந்துக்கொண்டு, இதைவிட குறைவான சொத்துப் பட்டியல் வைத்திருக்கும் ஒரேயொரு அரசியல்வாதியையாவது, மோடி எதிர்ப்பாளர்கள் காட்டட்டும்! நாளையிலிருந்து நான் மோடியை எதிர்த்து பதிவிடுவதுடன், அந்தத் தலைவனை சகட்டுமேனிக்கு புகழ்ந்தும் எழுதுகிறேன்!
இன்று சனிபகவானும் குருவும் நெருக்கமாக சந்திக்கும் நாள்
397 ஆண்டுகளுக்கு பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; இன்று நிகழவிருக்கும் வானியல் அதிசயம்!
சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. இந்த கோள்கள் கடைசியாக கடந்த 1623 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொண்டன.
சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அரிய நிகழ்வு விண்வெளி ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளாது.
நாளை இந்த இருகோள்களும் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் சந்தித்துக்கொள்ளவுள்ளன.
ஆலயங்கள் அமைத்து, அங்கு தெய்வ திருவுருவச் சிலைகளை எழுந்தருளச் செய்து அவற்றை வழிபடுவதன் மூலம் ஆத்ம ஈடேற்றமும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யும் வழிமுறைகளை ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர்.🙏1
அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.
🇮🇳🙏2
”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை.
*அருள்மிகு ஸ்ரீ தேவி பூ தேவி சமேத பரமஸ்வாமி திருக்கோவில்*
அழகர் கோவில்
மதுரை மாவட்டம்
ஒரு சமயம் எமதர்மராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தைப் போக்க பூலோகத்தில் தற்சமயம் கோவில் இருக்கும் அழகர் மலை ( விருசுபகிரி ) என்னும் இம்மலையில் தவம் செய்கிறார். இம்மலை ஏழு மலைகளை கொண்டது.🙏1
எமதர்மராஜனின் தபசை மெச்சி பெருமான் காட்சி தந்தார். இறைவனின் கருனையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமானிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகினும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். 🇮🇳🙏2
அதன் படி பெருமாளும் வரம் மர இன்றும் இக்கோவிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜனே நடத்துவதாக ஐதீகம்.
எல்லா மக்களுக்கும் அருள்தருரமாறு எமதர்மராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் ( வட்ட வடிவ ) உள்ள கோவில் கட்டப்பட்டது.
இறைவியார் திருப்பெயர் : பிரஹந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், ஆதிசேஷன்,
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,
🙏🇮🇳1
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 90 வது தேவாரத்தலம் ஆகும்.
🙏🇮🇳2
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான்.