தூய்மை இந்தியா திட்டம்: கிராமப்புற இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம்
தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமப்புற இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம் என்ன?
பிரதமர் மோடி தனது கனவுத் திட்டமாக ஸ்வச் பாரத் மிஷன் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2, 2014 அன்று துவக்கி வைத்தார். 2019 அக்டோபருக்குள் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்க்க இந்தியா முழுவதிலும் இலவசமாக கழிப்பறைகளை கட்டித் தருவதாக அறிவித்தார்.
இந்த கழிப்பறை வசதிகளை பெற்றபின் கிராமப்புற இந்தியாவில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.53,000 (727 அமெரிக்க டாலர்கள்) க்கும் அதிகமான மதிப்பிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.
பொது இடங்களில் மலம் கழிப்பதால் ஏற்படும் தொற்றுக்கள் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்றும் பொது இடங்களை மாசுபடுத்துதல் குறைந்திருப்பதும், மக்களுக்கு கிட்டிய நேர சேமிப்பு உள்ளிட்டவை பல ஆதாயங்கள் கிட்டியதாக ஒரு சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வச் பாரத் மிஷன்-கிராமின் (கிளீன் இந்தியா மிஷன்-ரூரல்) பற்றிய ஆய்வில், இதன் மூலம் ஒரு வீட்டிற்கு ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.53,000 வரை ஆதாயம் பெற்றிருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த திட்டத்தின் முதல் பொருளாதாரப் பகுப்பாய்வாக எடுத்து செய்த உலகளாவிய தகவல் பகுப்பாய்வு நிறுவனமான எல்சேவியரின் சயின்ஸ் டைரக்ட் இதழின் சமீபத்திய அக்டோபர் 2020 இதழில் (October 2020 issue of ScienceDirect journal of global information analytics major Elsevier,)
வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2017 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை 10,051 கிராமப்புற குடும்பங்களை இந்த கணக்கெடுப்பு நடத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 2, 2014 அன்று ஸ்வச் பாரத் மிஷனைத் தொடங்கினார், அதே நேரத்தில் 2019 அக்டோபருக்குள் இந்தியா திறந்த மலம் கழித்தலில் இருந்து விடுவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இது 2019 அக்டோபர் 2 ஆம் தேதி 100 சதவீத இலக்கை எட்டியது.
அதாவது இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 10 கோடிக்கும் அதிகமான வீட்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
“வீடுகளுக்கான நிதிச் செலவுகளுக்காக சராசரியாக 257 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 19,000) மற்றும் ஆண்டு பராமரிப்பிற்காக 37 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 2,700),
அதே நேரத்தில் மருத்துவ செலவினங்களை ஆண்டுக்கு 123 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9,000) என ஒவ்வொரு குடும்பமும் கிட்டத் தட்ட 10 ஆண்டுகளாக செலவழித்து வருகின்றன.
“வீடுகளுக்கான நிதி மற்றும் நிதி அல்லாத கடமைகள் முதலீட்டிற்கு சராசரியாக 268 அமெரிக்க டாலர் (ரூ. 19,700) மற்றும் வருடாந்திர பாராமரிப்புச் செலவுக்கு 131 அமெரிக்க டாலர் (ரூ .9,600), அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 727 அமெரிக்க டாலர் பொருளாதார நன்மைகளை அனுபவித்து வருகின்றன,
சராசரியாக ஆண்டு 599 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 44,000) பொருளாதார வருவாய், “என்று அது கூறியது.
எதிர்பாராத தொற்றுக்களால் நோய்வாய்ப்படுவதால் ஏற்படும் அகால மரணங்கள் தவிர்க்கப்பட்டதின் விளைவாக ஒரு வீட்டிற்கு ஆண்டுக்கு 249 அமெரிக்க டாலர்
(சுமார் ரூ .18,000) மதிப்புள்ள சுகாதார நன்மைகள் கிடைத்தன என்றும் அது கண்டறிந்துள்ளது.
“வீட்டு கழிப்பறை இல்லாத அல்லது பயன்படுத்தாதவர்களால் வீட்டிற்கு வெளியே சுகாதாரத்தை அணுகுவதில் குறிப்பிடத்தக்க நேரம் செலவிடப்படுகிறது.
அனைத்து உறுப்பினர்களும் கழிப்பறையைப் பயன்படுத்தும் ஒரு வீட்டிற்கான நேர சேமிப்பின் மதிப்பு மட்டுமே ஆண்டுக்கு ஒரு வீட்டிற்கு சராசரியாக 325 அமெரிக்க டாலர் (ரூ. 24,000)”என்று ஆய்வு கூறியது.
ஆய்வுகள் குறிப்பிடும் வரவு செலவுகளை, லாபங்களை நேரடியாக பணஆதாயமாக பார்க்காமல் தரமான வாழ்க்கையின் பெறுமதியாக பார்த்தலை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நல்ல தரமுள்ள வாழ்வின் மதிப்பை பணத்தால் அளவிட முடியாது.
அதிலும் குறிப்பாக தூய்மை இந்தியா திட்டத்தை (ஸ்வச் பாரத்) நம்மால் பண அடிப்படையில் அளவிட முடியாது. ஆனால் இதன் மூலம் கிராமப் புறங்களில் வாழும் மக்களுக்கு அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுயமரியாதை,
திருப்தி, நல்ல சுகாதாரம் போன்றவற்றின் மதிப்பு தந்திருக்கும் நன்மை ஒரு கிராமத்தின் வாழ்க்கையில் விலைமதிப்பற்றது என்பதுதான் இந்தத் திட்டத்தின் உள்ளார்ந்த மதிப்பீடு ஆகும். அதனை பணத்தால் அளவீடு செய்யவே முடியாது. அதற்கு விலைமதிப்பு என்பதே இல்லை என்பது தான் நிதரிசனமான உண்மை.
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்
திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. 🙏🇮🇳1
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
🙏🇮🇳2
அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடம்,
'பள்ளிகொண்ட அனுமான்' கோயில்.
🇮🇳🙏1
இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும்
நாக்பூர் வரை செல்ல வேண்டும்.
பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க 'சாம்வலி' எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின்
மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.
🇮🇳🙏2
இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம - இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார்
இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா?
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்று தான் தோன்றுகிறது.
கடந்த ஓராண்டாக உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சீன வைரஸ் என்பது வூஹான் வைரஸ் மட்டுமல்ல.
மற்ற நாடுகளின் தகவல் திருட்டில் ஈடுபடும் கணினி மற்றும் மென்பொருள் வைரஸ் மட்டுமல்ல.
அதற்கும் மேலாக மனித வைரஸ்களும் சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள செய்தி திடுக்கிடவைக்கிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீன குடிமக்கள் மேற்கொண்டுள்ள ஊடுருவலின் அளவை ‘தி ஆஸ்திரேலியன்’ என்கிற சஞ்சிகை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிய விவரங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கியுள்ளது.