கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.
அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.
(கணித உலகம் ஒரு உண்மையினை ஒப்புகொள்கின்றது, அன்றே இந்த நுண்கணிதம் இருந்திருந்தால் ஐன்ஸ்டீனை நெருங்கும் ஆய்வுகளை ராமானுஜர் கொடுத்திருப்பார் என்கின்றது..)
ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் தமிழக பாஜக நிலை, குறிப்பாக ஆங்கிலத்தில் “டெப்பாசிட்” காலி. ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை,” பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு” எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது,
ஆனால் அவர் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார்.
“கொடிது கொடிது இளமையில் வறுமை” என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும்,
அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை
எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும்,
அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.
யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும்,சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார்,
லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை.
எண்களின் விளையாட்டில் வெற்றிபெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர்பணி, ஆனாலும் கணித ஆராய்ச்சி தொடர்ந்தது,
திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது, ஒரு அய்யரின் சிபாரிசில் ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார், தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில கணித ஆசிரியர்.
மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்
“எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்யலாம்”,
கண்கலங்கினான் அந்த அதிகாரி, அவன் என்ன? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.
சொந்த இனம் செய்யா உதவியினை அந்நியன் வெள்ளையன் செய்தான், ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார்.
காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.
நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக என நீங்கள் கற்ற அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.
சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.
படிக்கலாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் “Fellow of the royal Society”
உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன். சொந்த மக்களுக்கு உதாவாக்கரை, முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல்.
அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர்.
(மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.
அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.
5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது,ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.
அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், எப்படிபட்ட கொடுமை இது? பிறகு ஏன் காவேரி வற்றாது?
நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற “மாக் தீட்டா பங்க்சன்ஸ்”,
32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின,
முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை, ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.
புகழுக்குரியவர்களை வாழும் பொழுது ஓடவிரட்டி, தெருப்புழுதிக்கும், சொறிநாய்க்கும் இணையாக வறுமையாலும்,அவமானத்தாலும் வதைத்து, அவன் இறந்த பின் லட்சகணக்கில் செலவு செய்து சிலை வைத்து கொண்டாடும் அறிவார்ந்த சமூகம் இது.
அவன் ஓடி ஓடி கணிதம் போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை , ஆனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல பைபிள்.
பிராமணர் என்பதால் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை. அண்ணாவிற்கும், பெரியாருக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?, கிடையாது.
உண்மையில் சென்னை பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது,
அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் மூச்.
அவன் வளர்ந்த கும்பகோணத்தில் அவனுக்கோர் இடமில்லை, மிக சிறிய அடையாளம் உண்டு. கலாம் அதனை சென்று பார்த்தார். மேதையினை மேதை அறிவார்கள்
தமிழக அநீதி இது, அவமானம் இது
இவ்வளவுதான் ஒரு அறிவாளிக்கு தமிழகம் கொடுக்கும் மரியாதை. இன்று அவரின் நினைவுநாள். பொதுவாக தமிழனின் பெருமை தமிழக அரசினை தவிர மத்திய அரசிற்கு நன்கு புரியும்.
அப்படித்தான் அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.
இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை, கோள்களின் ஆராய்ச்சிக்கான கணக்கீடு முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது
கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் பிறந்த நாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்...
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்
திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. 🙏🇮🇳1
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
🙏🇮🇳2
அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடம்,
'பள்ளிகொண்ட அனுமான்' கோயில்.
🇮🇳🙏1
இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும்
நாக்பூர் வரை செல்ல வேண்டும்.
பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க 'சாம்வலி' எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின்
மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.
🇮🇳🙏2
இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம - இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார்
இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா?
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்று தான் தோன்றுகிறது.
கடந்த ஓராண்டாக உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சீன வைரஸ் என்பது வூஹான் வைரஸ் மட்டுமல்ல.
மற்ற நாடுகளின் தகவல் திருட்டில் ஈடுபடும் கணினி மற்றும் மென்பொருள் வைரஸ் மட்டுமல்ல.
அதற்கும் மேலாக மனித வைரஸ்களும் சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள செய்தி திடுக்கிடவைக்கிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீன குடிமக்கள் மேற்கொண்டுள்ள ஊடுருவலின் அளவை ‘தி ஆஸ்திரேலியன்’ என்கிற சஞ்சிகை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிய விவரங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கியுள்ளது.