முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ₹10 கோடியை குருவாயூர் கோவிலுக்கு திருப்பித் தரவேண்டும் என்று பினராயி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. #இந்துகோவில்நிதிஅரசுநிதிஅல்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவில் அசையும் அசையா சொத்துகளுக்கு சொந்தக்காரர் குருவாயூரப்பன் மட்டுமே.
தேசஸ்வம் போர்ட் அறங்காவலர் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளவர். பக்தர்களின் தேவைகளை-குடிநீர், தங்குமிடம், மருத்துவ வசதிகளை செய்யவும் கோவிலின் கலாச்சாரம் பரவவும், இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும், சமஸ்கிருதம் மலையாள மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடு
படவும் கோவில் நிதியை அறங்காவலர் பயன்படுத்த முடியும். இதர இந்து கோவில்களுக்கு நன்கொடை வழங்கலாம். இவை தான் தேவசம் போர்டின் பணிகளாக இருக்கவேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். மதச்சார்பற்ற அரசு இந்து கோவில் நிதியை மட்டும் தன்னிச்சையாக எடுத்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசும் கோவில் நிதியில் கை வைக்க இருந்தது. ஆனால் இந்து முன்னணியினர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததும் அந்த முடிவை கைவிட்டது. #இந்துகோவில்நிதிஅரசுநிதிஅல்ல
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நீலகண்டதீக்ஷிதர் இவர் ஒரு மகாவித்வான்! பதினெட்டு வயதுக்குள் எல்லா வேத சாஸ்திரங்களையும் படித்து அனைத்து சில்ப சாஸ்திரங்களையும் பயின்று பெரிய மேதையாக விளங்கினார்! அதனால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மகாராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு மந்திரியாக இருந்தார். நீலகண்டதீக்ஷிதர்
மந்திரியாக அபாரமான செயல்களை செய்துள்ளார். இன்றும் நாயக்கர்கள் செய்த சேவை நம் தேசத்துக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறது. ஒரு முறை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தன்னுடைய சிலையும், தன்னுடைய மனைவிமார்கள் சிலையையும் வவைக்க ஆசைப்பட்டார் அரசர். நீலகண்டதீக்ஷிதர் அந்தச்
சிலைகளைச் செய்ய பொறுப்பேற்றுக் கொண்டார். ராணியின் சிலை செய்பவன் சிலையை வடிக்கும்பொழுது முட்டிக்குமேல் ஒரு இடத்தில் சில்லு தட்டிவிடுகிறது. அதை இவரிடம் சிற்பி சொன்னபொழுது நீலகண்டதீக்ஷிதர் ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு அந்த இடத்தில் ராணிக்கு ஒரு மச்சம் இருக்கும் என்று அவர்
இரண்டே வரி ஸ்லோகம் ஆஞ்சநேயர் மீது ஆனால் அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகம்!
புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||
அனுமனை ஸ்மரணை செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது: முதலில் ‘புத்தி’–எல்லாவற்றுக்கும்
முதன்மை தேவை அறிவுதான். அது அறிவு 'பலம்’, அடுத்து உடல் பலம். ‘யசஸ்'- புகழ். ‘தைர்யம்’- வீரம். ‘நிர்பயத்வம்’ – அஞ்சாமை. ‘தைர்யம்’ என்றாலே அஞ்சாமையும்தான் ஆனால் நிர்பயத்வம் என்றும் வருகிறது. காரணம் ‘தைர்யம்’ என்பதற்கு இன்னும் பல பொருள் உள்ளன. மனோதிடம், சாந்தகுணம் முதலியவற்றைக்கூட
‘தைர்யம்’ குறிக்கும். ‘அரோகதா’ என்றால் ஆரோக்யம். ‘அஜாட்யம்’ - ஜடமாக இல்லாத தன்மை என்று பொருள். புத்தி மந்தித்து, சுருசுருப்பில்லாமல், உற்சாகமில்லாமல் சோம்பேறியாக இருப்பது ஜடத்தன்மை.
அனுமன் அஜாட்யம் என்ற பண்பின் ஊற்றாக உள்ளார். ஊக்கத்தை கொடுப்பார். ‘வாக்-படுத்வம்’-வாக்குதன்மை
#குசேலோபாக்கியானம் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இன்று தான் குசேலர் கிருஷ்ணனை துவாரகையில் சந்தித்த நாள். கிருஷ்ணன் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாள். பக்தர்கள் இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை வைத்து வணங்குவது வழக்கம்.
குசேலரும் கிருஷ்ணனும் சாந்தீபனி என்ற முனிவரிடம் ஒரே குருகுலத்தில் 64 நாட்கள் ஒன்றாகப் பயின்றனர். பின் வரும் நாட்களில் கிருஷ்ணன் மதுராவின் அரசரானார். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க என்ன வழி என்று யோசித்த குசேலரின் மனைவிக்கு தன் கணவரின்
பால்ய நண்பரும் துவாரகை மன்னருமான பகவான் கிருஷ்ணரின் நினைவு வந்தது. பகவானை நோக்கி நம்மை வழிப்படுத்துவது குருநாதராக இருப்பார். இங்கே குசேலரின் மனைவி அவரை துவாரகை கண்ணனிடம் அவர் கடவுள் என்று அறியாமலே ஆற்றுப்படுத்தினார். மேலும் கண்ணனுக்குக் கொடுக்க அக்கம்பக்கத்தில் யாசித்துப் பெற்ற
பூஜை பாராயணங்களுக்கு மார்கழி முதல் நாள் இன்றே. மாதம் இன்றிரவு பிறக்கிறது. #திருப்பாவை#ஆண்டாள்திருவடிகளேசரணம் 1. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த
கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள்
இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின்
சிவன் சாருடைய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” புத்தகத்திலிருந்து ஸ்ரீதர ஐயாவாள் என்கிற பகுதி. ஆந்திர தேச ராஜ்யங்களுள் ஒன்றில் அமைச்சராக பணியாற்றி காலகதி அடைந்துவிட்ட தந்தையின் ஸ்தானத்தை ஏற்க அரசன் தனையருக்கு உத்தரவிட்டான். சாஸ்திர கலைகளில் மஹா மேதையாக விளங்கி வந்த தனையர்,
தெய்வீகத்திலேயே ஈடுபட்டு வந்ததினால் அத்தகைய உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இயலாததை அரசனிடம் தெரிவித்துக்கொண்டார். அரசன் மேலும் வற்புறுத்தவில்லை.
இதையடுத்து வேதியர் தன் மனைவியுடன் தென் திசையை நோக்கி க்ஷேத்திர யாத்திரையை மேற்கொள்ளலானார். மேலும் ஆசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு
வந்த பிரம்பு பெட்டியில் அமர்ந்து வந்த பகவானும் தனது யாத்திரையில் அன்றாட பூஜையை தவறாமல் நிரைவேற்றிக் கொண்டார். இவ்வாறு பல க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே சோழ நாட்டை அடைந்தார். சோழ நாட்டின் இயற்கை வளங்களையும், ஏராளமான நதிகளுடன் கூடிய நீர்வளத்தையும், ஆங்காங்கு சோலைகளுக்கிடையே
உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும், வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும்
ஸ்ரீகால பைரவரின் திருமேனியை கண்ணாரத் தரிசிக்கலாம். அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு
மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. காசிக்குச் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில்