#குசேலோபாக்கியானம் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இன்று தான் குசேலர் கிருஷ்ணனை துவாரகையில் சந்தித்த நாள். கிருஷ்ணன் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாள். பக்தர்கள் இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை வைத்து வணங்குவது வழக்கம்.
குசேலரும் கிருஷ்ணனும் சாந்தீபனி என்ற முனிவரிடம் ஒரே குருகுலத்தில் 64 நாட்கள் ஒன்றாகப் பயின்றனர். பின் வரும் நாட்களில் கிருஷ்ணன் மதுராவின் அரசரானார். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க என்ன வழி என்று யோசித்த குசேலரின் மனைவிக்கு தன் கணவரின்
பால்ய நண்பரும் துவாரகை மன்னருமான பகவான் கிருஷ்ணரின் நினைவு வந்தது. பகவானை நோக்கி நம்மை வழிப்படுத்துவது குருநாதராக இருப்பார். இங்கே குசேலரின் மனைவி அவரை துவாரகை கண்ணனிடம் அவர் கடவுள் என்று அறியாமலே ஆற்றுப்படுத்தினார். மேலும் கண்ணனுக்குக் கொடுக்க அக்கம்பக்கத்தில் யாசித்துப் பெற்ற
சிறிது அவலை ஒரு கிழிந்த துணியில் முடிந்து கொடுத்தார். குசேலர் துவாரகை நகருக்கு நடைபயணமாக சென்றார். அங்கு கிருஷ்ணரின் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தார். அரண்மனை வாயிற்காப்பாளர்கள் குசேலர் அரண்மனை வாயிலில் காத்திருக்கும் செய்தியை கிருஷ்ணரிடம் கூறினார்கள். ’குசேலர்’ என்ற பெயரைக்
கேட்டவுடன் தம்மை மறந்த நிலையில் கிரிடம், பட்டுப்பீதாம்பரம், காலணிகள் கூட அணிய மறந்து, ஓடோடிச் சென்று குசேலரைக் காண அரண்மனை வாசலுக்கே வந்து குசேலரை வரவேற்று அரண்மனைக்கு உள்ளே அழைத்து சென்றார். ஸ்ரீகிருஷ்ணர் தனது நண்பர் குசேலரை உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்து, அவரது உடலில் நறும் மணம்
கமழம் சந்தனம் பூசி, நெற்றியில் கஸ்தூரி குங்குமம் இட்டார். அகர்மணம் நிறைந்த தூபம் மற்றும் நெய் தீபம் காட்டிப் பூசை செய்தார். சிறப்பான விருந்து அளித்து, தாம்பூலம் வழங்கினார். கிருஷ்ணரின் மனைவி ருக்மணிதேவி தனது பணிப்பெண்களுடன் வந்து, இரத்தினம் பதித்த பிடி உடைய விசிறியை கையில் ஏந்தி
குசேலருக்கு வீசி குளிர்ச்சி அடையச் செய்தாள். உலகுக்கெல்லாம் படியளக்கும் இறைவன் தன் நண்பனிடம், 'எனக்கு என்ன கொண்டு வந்தாய்?' என்று கேட்டார். நாணத்தோடு கொண்டு வந்த அவலைக் குசேலர் மறைக்க அதைப் பிடுங்கி உண்டான் அந்த மாயவன். அந்தக் கணத்தில் குசேலரின் வறுமை நீங்கி எல்லாச் செல்வங்களும்
சென்று சேர்ந்தது. குசேலர் தன்னுடைய நிஷ்காம்ய பக்தர். அன்புள்ள நண்பர். செல்வம் வேண்டி ஒரு நாளும் என்னை வழிபட்டவர் அல்ல. குழந்தைகள் வறுமையில் வாடுவதால் மனைவியின் அறிவுரைப்படி என்னிடம் வந்திருக்கிறார். ஆகவே இவருக்கு அனைத்து செல்வங்களையும் தருவேன். முக்தியும் அளிப்பேன்.தேவர்களுக்கும்
கிட்டாத அருள்புரிவேன் என்று எண்ணினார் கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு வெறுங்கையுடன் தன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணரின் லீலையால் தனது குடிசை வீடு தங்க மாளிகையாக காட்சி அளித்தது. மனைவி மக்கள் நல்லாடைகளுடன், உயர்ந்த நகைகளுடன் காட்சி அளித்தனர். தம்
மனைவி மக்கள் உயர்ந்த உணவுகளை உண்டு வாழ்ந்த காட்சியைக் கண்ட சுதாமன் என்ற குசேலர் எல்லாம் கிருஷ்ணரின் செயல் என்று உணர்ந்தார். தனக்கு கிருஷ்ணர் இந்த செல்வங்கள் தராமல் இருந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும். செல்வம் ஒரு மனிதனுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யும் என்று
உணர்ந்த குசேலர் பற்று அற்ற மனப்பாங்குடன் கிருஷ்ணரை வழிபடுவதிலே தம் காலம் முழுவதும் கழித்தார். நட்புக்குப் பகவானே முக்கியத்துவம் தந்து சிறப்பித்த இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக குருவாயூர் ஆலயத்தில் 'குசேலர் தினம்' கொண்டாடப்படுகிறது. நாராயணீயத்தின் 87வது தசகமும் ஸ்ரீமத் பாகவதமும்
விசேஷமாக இந்த சந்திப்பை விவரிக்கிறது. இன்று குருவாயூரப்பனுக்கு அவல் பாயசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. நாமும் வீட்டில் கிருஷ்ணனுக்கு அவலும் வெல்லமும் நிவேதனம் செய்து நம் இல்லமும் இலட்சுமி கடாக்ஷத்தால் பொலிவு பெற கிருஷ்ணனின் அருள் வேண்டுவோம்..
ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணமஸ்து🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பூஜை பாராயணங்களுக்கு மார்கழி முதல் நாள் இன்றே. மாதம் இன்றிரவு பிறக்கிறது. #திருப்பாவை#ஆண்டாள்திருவடிகளேசரணம் 1. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த
கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள்
இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின்
சிவன் சாருடைய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” புத்தகத்திலிருந்து ஸ்ரீதர ஐயாவாள் என்கிற பகுதி. ஆந்திர தேச ராஜ்யங்களுள் ஒன்றில் அமைச்சராக பணியாற்றி காலகதி அடைந்துவிட்ட தந்தையின் ஸ்தானத்தை ஏற்க அரசன் தனையருக்கு உத்தரவிட்டான். சாஸ்திர கலைகளில் மஹா மேதையாக விளங்கி வந்த தனையர்,
தெய்வீகத்திலேயே ஈடுபட்டு வந்ததினால் அத்தகைய உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இயலாததை அரசனிடம் தெரிவித்துக்கொண்டார். அரசன் மேலும் வற்புறுத்தவில்லை.
இதையடுத்து வேதியர் தன் மனைவியுடன் தென் திசையை நோக்கி க்ஷேத்திர யாத்திரையை மேற்கொள்ளலானார். மேலும் ஆசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு
வந்த பிரம்பு பெட்டியில் அமர்ந்து வந்த பகவானும் தனது யாத்திரையில் அன்றாட பூஜையை தவறாமல் நிரைவேற்றிக் கொண்டார். இவ்வாறு பல க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே சோழ நாட்டை அடைந்தார். சோழ நாட்டின் இயற்கை வளங்களையும், ஏராளமான நதிகளுடன் கூடிய நீர்வளத்தையும், ஆங்காங்கு சோலைகளுக்கிடையே
உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும், வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும்
ஸ்ரீகால பைரவரின் திருமேனியை கண்ணாரத் தரிசிக்கலாம். அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு
மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. காசிக்குச் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில்
#FarmersProtestDelhi2020#FarmerPolitics#FarmersProtestHijacked உண்மை என்ன?
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிறுவனங்களுக்கும் இடையில் முக்கிய இணைப்பாக இருப்பது ஆர்ஹித்யாகள் (கமிஷன் முகவர்கள்). அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண்
மசோதாக்கள் அவர்கள் வணிகத்தை மோசமாக பாதிக்கிறது என்பதால், மையத்தின் வேளாண் சந்தைப்படுத்தல் கட்டளைகளுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். பஞ்சாப் & ஹரியானாவில் 30,000 த்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கமிஷன் ஏஜண்டுகள் விவசாய சந்தையில் வெகு காலமாக கோலோச்சி வருகின்றனர்.
இவர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் இரு மாநில அரசியலிலும் வலுவான செல்வாக்கை செலுத்தி வருகிறார்கள். இந்த 30,000 பேர், இன்னுமொரு 3,00,000 துணை முகவர்கள் அல்லது அல்லக்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்புடுத்தித் தந்திருக்கின்றனர். இவர்கள் வேறு எந்த வேலை செய்ய லாயக்கில்லாவிட்டாலும் ஒரு பெரிய
#FarmersAgitation#FarmerPolitics#FarmersProtestHijacked Learn the truth.
Arhtiyas (commission agents) who have been the main link between farmers and procurement agencies in the two states of Punjab and Haryana, launched their campaign against the Centre’s agri-marketing
ordinances early as the three bills cleared by Parliament will adversely affect their business. There are over 30,000 registered Arhtiyas in Punjab and Haryana who are deeply entrenched in the system. They exercise a strong influence on agricultural activities and the politics of
both states. These 30,000 employ another 300,000 sub agents or sidekicks or people who would not have made it into doing anything anyplace were it not for the patronage network of these 30,000. But there are only 1500 farming villages in Punjab. 330,000 / 1500 is about 220 people
புராணக் கதைகளை எடுத்துரைப்பவர்களுக்குப் #பௌராணிகர்கள் என்று பெயர். வைசம்பாயனர் தனது குரு வியாசர் எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி ஜனமேஜயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட
உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். நாரத முனிவர் இதைக்கற்று, தேவருக்குக்கூறினார். இவர்களே முதலில் தோன்றிய பௌராணிகர்கள்.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்
(பாகவதம் 7-5-23)
அதாவது கடவுளின் நாமத்தைக் கேட்டல், பக்திப் பரவசத்துடன் பாடுதல், கடவுளின் பெயரை எல்லா நேரமும் நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை அர்ச்சித்தல், அவனை கைகூப்பி வணங்குதல், அவனுக்கு அடிமையாக பணியாற்றுதல்,