பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார்.
கோயில் தக்கார் என்றால் கோயிலுக்குத் தக்கவர், மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.
தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி,மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும், குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு,
அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனைப் பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகிப் போயிருக்கும்.
பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.
மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்துப் போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள்.தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்தக் கலெக்டரை,ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரைப் பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.
ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்தக் காற்றுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.நள்ளிரவாகிவிட்டது.
பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்குக் கேட்டது.எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்துப் போனாள்.
சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம்,அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது.மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்லத் தேடினார்.சிறுமியைக் காணவில்லை.
பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்று கொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார்.
அவை தான் மேலே சொன்ன அந்தக் காணிக்கைக் காலணிகள்.
நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).இதுபோக 412 சிவப்பு கற்கள்,72 மரகதங்கள்,80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள்,
சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன.
அத்துடன் விட்டாரா?அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரைச்சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும்.
விழாக் காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன்,சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமப்படுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.
இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள்
தன்மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி,
அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுதச் சொல்லிவிட்டார்.பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சிப் பட்டிணத்திலேயே கழித்தார்.
மதுரையிலேயே காலமான அவர், மதுரைமேலாவணு மூல வீதி்
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.
கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.அந்த தங்கக் காலணிக்கு பீட்டர் ரோஷின் காணிக்கை என சொல்லிக் கொடுத்தார். அது நாளடைவில், ரோஷ் பாண்டியனின் காணிக்கை என மாறிவிட்டது.
மீனாட்சி காட்சிக் கொடுத்ததால் அவர் பாண்டியனாக சிவாச்சாரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது ஒரு செவி வழிக் கதை. எவ்வாறு இருப்பினும், உள்ளூர்காரர், அயல்நாட்டவர் வரை தன்னை வணங்கியவருக்கு அருளையும், ஆசியையும் அருளுவதில் மீனாட்சிக்கு நிகர் மீனாட்சி தான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே!"
என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும்,"ஏலாப்பொய்கள் உரைப்பானை...'' என்று சாடி விட்டாள்.ஆம் இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான்.இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள்.
கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான்.ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாக சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள்,"ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா
என பார்க்கத்தானே!உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே!
பால்யப் பருவத்திலிருந்தே உத்தவர் கிருஷ்ணருக்கு தேரோட்டியாகவும்,மற்றும் பல சேவைகளையும் செய்து வந்தார். அவர் கிருஷ்ணரிடம் யாதொரு வரமும் கேட்டதில்லை. தன் அவதாரத்தின் நோக்கம் முடிவடையும் சமயத்தில்,கிருஷ்ணர் உத்தவரை அழைத்து
"உத்தவா,இந்த அவதாரத்தில் பலரும் பலவித ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டு,வரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர்.ஆனால் நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை.இப்பொழுதாவது உனக்கு என்ன வேண்டுமோ கேள்,நான் தருகிறேன்.உனக்கும் ஏதேனும் செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேன்.” என்றார்.
உத்தவர் தனக்காக எதுவும் கேட்காவிட்டாலும்,சிறுவயது முதல் கிருஷ்ணரை கவனித்து வந்தவர்.கிருஷ்ணரின் சொற்களுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இல்லாததைக் கண்டு,உத்தவர் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.இதற்கான காரணத்தை அறிய விரும்பினார்.ஆதலால் அவர் கிருஷ்ணரிடம்,
பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிகா. மகனுக்கு தாயே பயிற்சி அளித்து,சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள். சிவ பெருமான் பார்பாரிகாவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.
முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்கை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்துவிடும்.மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்துவிட்டு திரும்பிவிடும்.
இதுதவிர அக்னிபகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக்காண ஆவலுற்றான்.
"எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்",கிருஷ்ணனை சபித்த காந்தாரி,தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.
எனினும்,அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின்,இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.திடீரென எதோ சப்தம் கேட்க,தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.
கிருஷ்ணன் கையில் குழல்,துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க,
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந்திருப்பார் ஒருவர். அவர், "எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!"என்றபடியே இருப்பார்.ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும்,"நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை கூட்டிகிட்டுப் போயிடுறேன்.என்ன சொல்றே?"கேட்டார் சந்நியாசி.
"நானும் இதைத்தான் நினைச்சேன்.ஆனா வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப,எப்படி விட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா,
அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்"என்றார் ஆசாமி.சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.ஆண்டுகள் ஓடின! ஒருநாள் கோயிலுக்கு வந்தார் அதே சந்நியாசி,அதே பெட்டிக்கடை,அதே ஆசாமி!"எனக்கு ஆசையே இல்லை.பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன்.ஆனா,இன்னும் அதற்கான வேளை வரலை"-அதே புலம்பல்.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை.நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.