பால்யப் பருவத்திலிருந்தே உத்தவர் கிருஷ்ணருக்கு தேரோட்டியாகவும்,மற்றும் பல சேவைகளையும் செய்து வந்தார். அவர் கிருஷ்ணரிடம் யாதொரு வரமும் கேட்டதில்லை. தன் அவதாரத்தின் நோக்கம் முடிவடையும் சமயத்தில்,கிருஷ்ணர் உத்தவரை அழைத்து
"உத்தவா,இந்த அவதாரத்தில் பலரும் பலவித ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டு,வரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர்.ஆனால் நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை.இப்பொழுதாவது உனக்கு என்ன வேண்டுமோ கேள்,நான் தருகிறேன்.உனக்கும் ஏதேனும் செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேன்.” என்றார்.
உத்தவர் தனக்காக எதுவும் கேட்காவிட்டாலும்,சிறுவயது முதல் கிருஷ்ணரை கவனித்து வந்தவர்.கிருஷ்ணரின் சொற்களுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இல்லாததைக் கண்டு,உத்தவர் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.இதற்கான காரணத்தை அறிய விரும்பினார்.ஆதலால் அவர் கிருஷ்ணரிடம்,
நீங்கள் எனக்கு ஒரு விதமான வாழ்வு முறையை கற்றுக் கொடுத்தீர்கள்.ஆனால் நீங்களோ வேறுவிதமாக நடந்து கொள்கிறீர்கள்.மகாபாரத நாடகத்தில் நீங்கள் நடித்த பாத்திரத்தில், உங்களுடைய செயல்கள் பற்றி எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு உண்டான காரணங்களை அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.
என் ஆவலை பூர்த்தி செய்வீர்களா?"எனக் கேட்டார்.
அதற்குக் கிருஷ்ணர் வேடிக்கையாக,"குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனனுக்கு நான் உரைத்தது பகவத் கீதை,ஆனால் உனக்கு இப்பொழுது உரைக்கப் போவது உத்தவ கீதை.ஆதலால் தயக்கம் எதுவுமின்றி நீ கேட்க நினைத்ததைக் கேள்”எனக்கூறினார்.
உத்தவர் – "கிருஷ்ணா, உண்மையான தோழன் யார்?"
கிருஷ்ணர் – "அழைக்காமலேயே தக்க சமயத்தில் உதவும் தோழனே உண்மையான தோழன்."
உத்தவர் – "நீங்கள் பாண்டவர்களின் பிரியமான தோழன்.அவர்கள் உங்களையே “ஆபத்பாந்தவன்” என நம்பி இருந்தனர்.உங்களுக்கு நடந்தது என்ன என்பதும் தெரியும்,
நடக்கப் போவது என்ன என்பதும் தெரியும்.நீங்கள் சிறந்த ஞானி. சற்றுமுன் “உண்மையான தோழன்” என்ற பதத்திற்கு விளக்கம் கூறினீர்கள்.ஆனால் நீங்கள் அதற்குத் தகுந்தவாறு நடந்து கொண்டீர்களா? யுதிஷ்டிரனை சூதாட்டம் ஆடுவதிலிருந்து ஏன் தடுக்கவில்லை?
அதுதான் ஆயிற்று என்றால் சூதாட்டத்தில் வெற்றியை,ஏன் அவர் பக்கம் திருப்பவில்லை?அவ்வாறு செய்திருந்தால் தர்மம் வென்றிருக்குமே.அதையும் நீங்கள் செய்யவில்லையே.எந்த ஆட்டத்தில் தர்மர் தன் சொத்து,வீடு,செல்வம் அனைத்தையும் தொலைத்தாரோ,அப்போதாவது அவரை சூதாடுவதிலிருந்து தடுத்திருக்கலாம்.
சூதாட்ட தண்டனையிலிருந்து அவரைக்காப்பாற்றி இருக்கலாமே?அல்லது தன் தம்பிகளை பணயம் வைக்கும் போதாவது நீங்கள், சூதாட்டம் நடந்த அறையில் நுழைந்திருக்கலாமே?அதுவும் செய்யவில்லை.துரியோதனன் தருமரிடம்,திரௌபதியை விட்டுக் கொடுத்தால் எல்லா சொத்து சுகங்களையும் திருப்பித்தந்து விடுவதாகக் கூறினான்.
அப்பொழுதாவது நீங்கள் தலையிட்டு,தங்கள் தெய்வீக சக்தியால், சூதாட்டக் காய்களை மாற்றி,தர்மராஜன் வெற்றி பெறுமாறு செய்திருக்கலாம?திரௌபதியின் மானபங்க காட்சிக்குப்பிறகே நீங்கள் தலையிட்டீர்கள்.ஆடைகள் கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றியதாக பெருமைப்படுகிறீர்கள்.
பலர் முன்னிலையில் ஒரு ஆண் மகனால் இழுத்து வரப்பட்டு, மானபங்கம் செய்யத் துணிந்தபோது மௌனம் காத்தீர்கள்.இதற்கு மேல் ஒரு பெண்ணுக்கு என்ன அவமானம் வேண்டும்?நீங்கள் எதைக் காப்பாற்றினீர்கள்?ஆபத்தில் உதவுபவனே “ஆபத்பாந்தவன்”. உங்களை எப்படி ஆபத்பாந்தவன் என அழைப்பது? இது நியாயமா, தர்மமா?"
கண்களில் கண்ணீருடன் உத்தவர் மேற்கண்ட கேள்விகளை கிருஷ்ணரிடம் கேட்டார்.இக்கேள்விகள் அவரது மட்டும் அன்று.மகாபாரதம் படித்த நம் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.எல்லோர் சார்பாகவும் உத்தவர் கிருஷ்ணரைக் கேட்டார்.
இதற்கு பதிலாக கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே,”உத்தவா, இப்பூவுலகத்தில் விவேகமாக,பகுத்தறிவுடன் நடந்து கொள்பவனே வெற்றி பெறுவான்.துரியோதனனிடம் இருந்த விவேகம் தர்மரிடம் இல்லை.அதனால்தான் தோல்வி அடைந்தார்”எனக் கூறினார்.
இதைக் கேட்ட உத்தவருக்கு குழப்பமாக இருந்தது.
துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது."பணயம்" நான் வைக்கிறேன்,என் மாமா சகுனி,பகடையை உருட்டிச்
சூதாடுவார்"என்றான் துரியோதனன்.அது விவேகம்.தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,நானும் பணயம் வைக்கிறேன்.
எனக்கெதிராக சகுனி ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியுமா? நான் கேட்ட எண்களை அவனால் போட முடியுமா? என்னை அழைக்கவில்லை, ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற விஷயத்தை நான் மன்னித்து விடுகிறேன்.ஆனால் விவேகம் இல்லாத மற்றொரு செயலையும் தர்மர் செய்தார்.
நான் விளையாடும் இடத்திற்கு வருவதையோ அல்லது சூதாடும் விஷயத்தை அறிவதையோ கூட தர்மர் விரும்பவில்லை.தன் துரதிர்ஷ்டத்தால் தர்மர் இந்த ஆட்டத்தை ஆட கட்டாயப் படுத்தப்பட்டார்.தன் பிரார்த்தனைகளால் என்னைக் கட்டிப்போட்டு, ஆடும் இடத்திற்கு நான் வராதவாறு செய்தார்.
நான் அறைக்கு வெளியே காத்திருந்தேன். பீமன்,அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களும் கூட துரியோதனனை கடிந்து கொண்டு, தங்கள் துரதிர்ஷ்டத்தை நொந்து கொண்டனர்.என்னை அழைக்க மறந்துவிட்டனர்.தன் சகோதரரின் உத்தரவை பின்பற்றி, துச்சாதனன் திரௌபதியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்த போது,
முதலில் திரௌபதியும் என்னை நினைக்கவில்லை.தன் திறமைக்குத் தகுந்தவாறு அவளும் வாக்குவாதம் செய்தாள்.கடைசியாக துச்சாதனன் ஆடைகளை இழுத்து மானபங்கம் செய்ய ஆரம்பித்த போது திரௌபதிக்கு உணர்வு வந்தது.தான் சக்தியற்றவள் என அப்பொழுது “ஹரி, ஹரி, அபயம் கிருஷ்ணா, அபயம்” என அபயக்குரல் கொடுத்தாள்.
திரௌபதியின் மானத்தைக் காக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்தவுடன்,நான் அவள் மானத்தைக் காப்பாற்றினேன்.இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தவறு என்ன?”எனக்கேட்டார்.
“அழகான விளக்கம் கண்ணா!என் மனம் கவர்ந்தீர்கள்.இருந்தாலும் நான் ஏமாற விரும்பவில்லை. தங்களிடம் மற்றுமொரு கேள்வி கேட்க அனுமதி வேண்டும்”
என உத்தவர் கூறினார். “அப்படியானால் கூப்பிட்ட குரலுக்குத்தான் நீங்கள் வருவீர்களா?ஆபத்தில் உதவ,நியாயத்தை நிலை நாட்ட தாங்களே ஓடிவர மாட்டீர்களா”என உத்தவர் கேட்டார்.
புன்னகைத்தான் கண்ணன்."உத்தவா,மனித வாழ்க்கை அவரவர்
கர்மவினைப்படி அமைகிறது.நான் அதை நடத்துவதும் இல்லை.
அதில் குறுக்கிடுவதும் இல்லை.நான் வெறும் 'சாட்சி பூதம்' மட்டுமே.நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனேஅது தான் தெய்வ தர்மம்"என்றார்.
"உத்தவரே!நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக உணர்ந்து பாருங்கள்.நான் உன் அருகே உள்ளபோது, நீ எவ்வாறு தீயச் செயல்களை செய்வாய்?உன்னால் அது முடியாதது. நான் அறியாமல் உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள். தர்மரின் அறியாமை யாதெனில்,எனக்குத் தெரியாமலேயே தான்
விளையாட முடியும் என நினைத்தார்.நான் எல்லோரிடத்திலும் "சாட்சி” ரூபமாக இருக்கிறேன் என்பதை தர்மர் உணர்ந்திருந்தால் சூதாட்டம் வேறு விதமாக முடிந்திருக்காதா?” என்றார் கிருஷ்ணன். மனப்பூர்வமாக என்னை உணரும்போது மட்டும்தான் உங்களால் தவறுகளையோ,தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
உத்தவர் வாயடைத்து, பக்திப்பரவசத்தில் ஆழ்ந்தார்.எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்.
பகவானைப் பூஜிப்பதும்,பிரார்த்தனை செய்வதும்,அவனைஉதவிக்கு அழைப்பதும்,ஓர் உணர்வுதானே."அவனின்றி ஓர் அணுவும் அசையாது"என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது,
அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை,
எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச்செயலாற்ற முடியும் ?இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
மொத்தத்தில் இறைவன் நமக்கு உணர்த்துவது யாதெனில் என்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதுதான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே!"
என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும்,"ஏலாப்பொய்கள் உரைப்பானை...'' என்று சாடி விட்டாள்.ஆம் இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான்.இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள்.
கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான்.ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாக சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள்,"ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா
என பார்க்கத்தானே!உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே!
பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார்.
கோயில் தக்கார் என்றால் கோயிலுக்குத் தக்கவர், மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.
தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி,மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும், குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு,
பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிகா. மகனுக்கு தாயே பயிற்சி அளித்து,சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள். சிவ பெருமான் பார்பாரிகாவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.
முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்கை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்துவிடும்.மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்துவிட்டு திரும்பிவிடும்.
இதுதவிர அக்னிபகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக்காண ஆவலுற்றான்.
"எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்",கிருஷ்ணனை சபித்த காந்தாரி,தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.
எனினும்,அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின்,இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.திடீரென எதோ சப்தம் கேட்க,தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.
கிருஷ்ணன் கையில் குழல்,துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க,
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந்திருப்பார் ஒருவர். அவர், "எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!"என்றபடியே இருப்பார்.ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும்,"நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை கூட்டிகிட்டுப் போயிடுறேன்.என்ன சொல்றே?"கேட்டார் சந்நியாசி.
"நானும் இதைத்தான் நினைச்சேன்.ஆனா வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப,எப்படி விட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா,
அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்"என்றார் ஆசாமி.சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.ஆண்டுகள் ஓடின! ஒருநாள் கோயிலுக்கு வந்தார் அதே சந்நியாசி,அதே பெட்டிக்கடை,அதே ஆசாமி!"எனக்கு ஆசையே இல்லை.பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன்.ஆனா,இன்னும் அதற்கான வேளை வரலை"-அதே புலம்பல்.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை.நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.