சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா?
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்று தான் தோன்றுகிறது.
கடந்த ஓராண்டாக உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சீன வைரஸ் என்பது வூஹான் வைரஸ் மட்டுமல்ல.
மற்ற நாடுகளின் தகவல் திருட்டில் ஈடுபடும் கணினி மற்றும் மென்பொருள் வைரஸ் மட்டுமல்ல.
அதற்கும் மேலாக மனித வைரஸ்களும் சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள செய்தி திடுக்கிடவைக்கிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீன குடிமக்கள் மேற்கொண்டுள்ள ஊடுருவலின் அளவை ‘தி ஆஸ்திரேலியன்’ என்கிற சஞ்சிகை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிய விவரங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் உறுப்பினர்கள் அதாவது இருப்பது லட்சம் பேர்கள், உலகம் முழுவதும் பரவி உளவு வேலை செய்கிறார்கள் என்பது புதிய தரவுக் கசிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வெடிக்கும் தரவுக் கசிவு
மேற்சொன்ன 20 லட்சம் சீனர்கள் உலக நாடுகளின் பாதுகாப்பு அமைப்புக்கள், வங்கிகள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள் போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சிலவற்றில் ஊடுருவியுள்ளதாக
தி ஆஸ்திரேலியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. தரவுக் கசிவுகளின்படி, சீன மக்கள் கட்சி (சிபிசி) உறுப்பினர்கள் பல இந்திய பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் ஊடுருவியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தி ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் குறைந்தபட்சம் ஒரு சிபிசி உறுப்பினராவது பணியமர்த்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு சீனக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2014 நடுப்பகுதியில் இருந்து 2017 நடுப்பகுதி வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்று அந்த தகவல் கூறுகிறது.
மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) ஏழு துணை நிறுவனங்களுக்கும் இந்தியாஉடனான இணைப்பு உள்ளது என்று தெரிகிறது.
கிடைத்திருக்கும் தரவுத்தொகுப்புகளின் படி, குறைந்தது ஏழு சிபிசி கிளைகளுக்கு இந்தியா இணைப்பு இருப்பதையும்,
ஒட்டுமொத்தமாக இந்த ஏழு துணை நிறுவனங்களும் சிபிசி-யைச் சேர்ந்த 91 கட்சி உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்பதையும் வெளிப்படுத்துகிறது.
அதிர வைக்கும் இந்திய இணைப்பு
31 உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் மின்சார ஆலை பொறியியல் கழகத்தின் இந்தியா திட்ட கிளைக் குழு,
17 உறுப்பினர்களுடன் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் கூட்டு கிளை,
13 உறுப்பினர்களுடன் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை கிளை,
11 உறுப்பினர்களுடன் சிட்டி இந்தியா பத்தாவது தொழிற்சாலை கிளை
10 சிபிசி உறுப்பினர்கள் சிபிசி ஷாங்காய் நகர கட்டுமான சர்வதேச பொறியியல் நிறுவனம், இந்திய பிராந்திய மைய கிளைக் குழுக்கள்,
சிசிபி ஷாங்காய் சில்லிங் இந்தியா கிளையின் குழு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது
மற்றும் புது தில்லி விற்பனைத் துறை கட்சி கிளையில் 3 சிபிசி உறுப்பினர்கள் உள்ளனர்.
‘ஆஸ்திரேலிய’ செய்தித்தாள் பெற்ற தரவு கசிவு.
சீன கம்யூனிஸ்ட் கட்சி குறைந்தது 30 அயல்நாட்டு தூதரகங்களுக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கசிந்த தரவுத்தொகுப்புகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மற்றும் உறுப்பினர் கட்டமைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டின. சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது மற்றும் கட்சி குழுக்கள் பெரும்பாலான பெரிய நிறுவனங்களில் உள்ளன.
கிழக்கு சீன பெருநகரமான ஷாங்காயில் குறைந்தது 30 அயல்நாட்டு தூதரகங்களுக்குள் சிபிசி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சிபிசி உறுப்பினர்கள் மூத்த அரசியல் மற்றும் அரசாங்க விவகார வல்லுநர்கள், எழுத்தர்கள், பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் நிர்வாக உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வெளிநாட்டு தூதரகங்களுக்கான அணுகல்(ஊடுருவலின் மென்மையான வார்த்தை பிரயோகம்) ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சீன மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கும் வெற்றிகரமான ஒருங்கிணைந்த முயற்சி என்று அழைக்கப்படுகிறது.
இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதரகங்கள் அடங்கும்.
சீனாவின் ஆளும் சீன மக்கள் கட்சி ஷாங்காயில் உள்ள ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தூதரகங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக கசிவு குற்றம் சாட்டியுள்ளது..
வெளியுறவுத் துறை மற்றும் உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக சீன அரசாங்க நிறுவனமான ஷாங்காய் வெளியுறவு சேவைத் துறையைப் பயன்படுத்தி வர்த்தகம். சிபிசி உறுப்பினர்கள் பாதுகாப்பு, வங்கி போன்றவற்றில் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இந்தத் தரவு கசிவுகள் மூலம் சீன மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் வங்கி, பாதுகாப்பு மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் எவ்வாறு ஊடுருவியுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன.
நீ இல்லாத இடமே இல்லை.
சீன மக்களால் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவல் மேற்கொண்ட மருந்து மற்றும் நிதித் துறைகள்.
நிதி நிறுவனங்களில் ஏஎன்இசட், எச்எஸ்பிசி, போன்றவை.
மருந்து நிறுவனங்களில் ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா போன்றவை. இவை கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் என்பது குறிப்பிடாத தக்கது..
உலகப்புகழ் வாய்ந்த வோக்ஸ்வாகன் மற்றும் போயிங் விமானக் கம்பெனிகள் இவற்றில் அடங்கும்.
இது மட்டுமின்றி, சீன மக்கள் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ள 79,000 கிளைகளை பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
அவற்றில் பல நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தரவுக் கசிவு கிட்டத்தட்ட 2 மில்லியன் விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
ஷாங்காய் சேவையகத்திலிருந்து விசில்-ப்ளோயர்களால் தரவு வெளியான பிறகு மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
‘தி ஆஸ்திரேலியன்’ இதழ் கூறுகையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவின் மிக உயர்ந்த பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு அணுகலைப் பெற்றது மற்றும் அதன் ஆராய்ச்சித் துறைகளில் ஊடுருவியது குறித்து நாங்கள் ஆய்வு செய்தொம்.
அது மட்டுமல்லாமல், சீனா தனது தேசிய வளர்ச்சிக்கு முக்கியமானது என்று கருதும் தொடர்புடைய ஆராய்ச்சி திட்டங்களுக்கான அணுகலைப் பெறுவதற்காக அமெரிக்காவின் உயர்மட்ட பல்கலைக்கழகங்களுக்குள் ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருகிறது என்பதையும் கண்டறிந்தோம்” என்கிறது.
நீரில் மிதக்கும் பனிமலையின் ஒரு முனையைத் தான் நாம் கண்டிருக்கிறோம். நமது நாட்டிலும் அர்பன் நக்சல்கள் ஊடுருவாத இடமே இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயல்படுவதில் இருந்ததே சீனாவின் நச்சுக் கரங்கள் எத்தனை ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை அறியலாம்.
பத்திரிக்கைத் துறை, நீதித் துறை, என்ஜிஓ அமைப்புக்கள், மீடியாவின் அனைத்து துறைகளும், திரைப்படத் துறை, அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் பெரிய தேசீய காட்சிகள்,
ஆயிரக்கணக்கிலான சிறிய அமைப்புக்கள் என எதிரிகள் நம்முடனே அமர்ந்தது தேநீர் அருந்திக் கொண்டே, நமது பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டு நம்முடன் ஒரு ஜோக்கை பகிர்ந்து கொண்டே, நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நமது வாக்குகளை பெற்றே நமது
நாட்டுக்கு துரோகம் செய்ப்பவர்களை நம்மை அறியாமலேயே நாம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஊடுருவியுள்ளார்கள்.
இவர்களால் ஆட்சி மாற்றங்களை உலகளாவிய அளவில் ஏற்படுத்த முடியும், வெகுஜன அபிப்பிராயங்களை மாற்ற முடியும். பெருவாரியான வாக்குகளைப்பெற்று ஆட்சி பீடத்தில் உள்ள அரசுகளை மக்கள் அபிப்பிராயத்தை மூலம் மாற்றிவிடமுடியும் என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி தான். !!!!
அமெரிக்காவின் அரசியல் ஆகட்டும்; இந்தியாவின் ஷாகின் பாக் கலவரங்கள் தொடங்கி இன்றைய போலி விவசாயிகள் போராட்டங்கள் ஆகட்டும் எல்லாவற்றிலும் சீனாவின் கொடிய நச்சுக் கரங்கள் இல்லாமலில்லை என்று எண்ணவைக்கின்றன சீன மக்கள் கட்சியின் உலகளாவிய ஊடுருவல்.
பகிர்வு.சஞ்சிகை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்
திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. 🙏🇮🇳1
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
🙏🇮🇳2
அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடம்,
'பள்ளிகொண்ட அனுமான்' கோயில்.
🇮🇳🙏1
இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும்
நாக்பூர் வரை செல்ல வேண்டும்.
பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க 'சாம்வலி' எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின்
மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.
🇮🇳🙏2
இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம - இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார்
இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!
ஐம்பது வருடம், நூறு வருடம் எல்லாம் அந்த கால கட்டத்தில் வாழும் நமக்கு நீண்ட நாட்களாக தெரியலாம். ஆனால் மனித குல வரலாற்றில் பார்த்தால் இதெல்லாம் மிக மிக சொற்ப காலம்.
ராவணன் பல்லாண்டு காலம் ஆட்சி செய்தான். தேவர்களை, முனிவர்களை, ஸாதுக்களை கொடுமைப்படுத்தினான். எத்தனையோ பெண்களை பலவந்தமாக கவர்ந்து வந்து துன்புறுத்தினான். இவன் கொடுமை எல்லாம் தீரவே தீராது, காலா காலத்துக்கும் நிலைத்து இருக்குமோ என்று தான் அன்று பலரும் நினைத்து இருப்பர்.
ஆனால் அவனுக்கும் அழிவு வந்தது. அவன் குலத்துக்கும் அழிவு வந்தது. அந்த கொடுமையான காலகட்டமும் முடிவடைந்தது.
கலியுகத்தில் ஔரங்கசீப். நீண்ட நெடுங்காலம் இம்மண்ணில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தானே? சத்ரபதி சிவாஜி காலம் முடிந்த பின்னரும் அந்த கொடுமை இம்மண்ணில் நிகழ்ந்ததா இல்லையா?