கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை...! தி.மு.கவை திணறடித்த டாப் 5 ஊழல்கள்! #EndCorruption
``தம்பி வா தலைமையேற்க வா” என அண்ணா அழைத்தது என்னவோ நெடுஞ்செழியனைத்தான். ஆனால், அண்ணாவுக்குப் பிறகு முதல்வராக வாய்ப்பு கிடைத்தது என்னவோ கருணாநிதிக்குத்தான்.
1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதியை அரியணை ஏற்ற முனைந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர், ஆனால், அதே எம்.ஜி.ஆரே பிற்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டதுதான் அரசியல் திருப்பங்களில் அதிமுக்கியமான காட்சி.
அவையே கருணாநிதி பதவியிழந்திருந்த 13 ஆண்டு கால வனவாசத்துக்கும் அடிப்படைக் காரணம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் மூன்று முறை முதல்வரானார் கருணாநிதி. ஒவ்வொரு முறை அவர் முதல்வரானபோதும் ஒவ்வொரு விதமான ஊழல் புகார்களுக்கு உள்ளானார் அவர்.
இறுதிக்காலத்தில் அவரை அரியணை ஏறவிடாமல் தடுத்ததில் 2ஜி ஊழல் புகாருக்கு முக்கியப் பங்குண்டு. தி.மு.க உதயமான காலத்திலிருந்து உதயநிதி இளைஞரணி தலைவரான காலம் வரையிலுமாக தி.மு.கவை உலுக்கிய டாப் 5 ஊழல் குற்றச்சாட்டுகளின் தொகுப்பு...
விஞ்ஞான ஊழல்
1975-ம் ஆண்டு இந்தியா முழுமைக்கும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அந்த வரிசையில் 1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதியினுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 28 ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு மத்திய அரசிடம் வழங்கினார், தி.மு.கவிலிருந்து வெளிவந்து புதிய கட்சி உருவாக்கியிருந்த எம்.ஜி.ஆர்.
அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு செய்த ஊழல்களை விசாரிக்க ஓர் ஆணையத்தை அமைத்தார் இந்திரா காந்தி.
அந்த ஆணையம் வீராணம் ஏரி ஊழல், பூச்சி மருந்து ஊழல், சர்க்கரை ஆலை ஊழல் உள்ளிட்ட 28 ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரித்து அறிக்கையைத் தாக்கல் செய்தது.
வீராணம் ஊழல்
தி.மு.க-வின் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது வீராணம் ஊழல். 1970-களில் சென்னை மாநகரத்தின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து நெய்வேலிக்கு அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 200 கிலோ மீட்டர் தரைவழியாகப் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலமாக சென்னைக்குக் கொண்டு வருவதுதான் திட்டம்.
இந்தத் திட்டத்துக்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்தத் துறையில் முன்னனுபவம் இல்லாத, கருணாநிதி தன்னுடைய மனசாட்சி எனக்கூறிய முரசொலி மாறனுக்கு நெருங்கிய நண்பரான
சத்யநாராயணன் என்பவருடைய நிறுவனத்துக்கு இந்த டெண்டர் இறுதி செய்யப்படவே இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1970-களில் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய்!
பூச்சி மருந்து ஊழல்
தி.மு.க மீது அப்போது வாசிக்கப்பட்ட மற்றொரு முக்கிய ஊழல் பூச்சி மருந்து ஊழல். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் உள்ள விவசாய நிலங்களைப் பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்காக
நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்களுக்குத் தனியார் நிறுவனங்களின் வாயிலாகப் பூச்சி மருத்து அடிக்கும் திட்டத்தை அமல்படுத்தியது.
இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசு இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் திட்ட வரைவு. அதன் அடிப்படையில் பல நிறுவனங்களும் இந்த டெண்டரை எடுக்க விருப்பம் காட்டிய நிலையில், தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவருமான
அன்பில் தர்மலிங்கத்தின் வாயிலாக ஏக்கருக்கு இத்தனை சதவிகிதம் என கமிஷன் பேசப்பட்டது, இறுதியில் கமிஷன் வழங்கிய நிறுவனத்துக்கே திட்டம் உறுதி செய்யப்பட்டது என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பூச்சி மருந்து ஊழல் குறித்தும் விரிவாக தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்தார் சர்க்காரியா.
இவைபோக, கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம், மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், சமயநல்லூர் மின்திட்ட ஊழல், குளோப் திரையரங்கு வாடகை சட்டத்திருத்த ஊழல், சர்க்கரை ஆலை ஊழல் என
28 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தன்னுடைய விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார் சர்க்காரியா.
சர்க்காரியா சமர்ப்பித்த அறிக்கையில், ``ஊழல் நடந்திருக்கிறது , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருப்பதால்
அவற்றை நிரூபிக்கச் சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை ” எனப் பதிவு செய்தார். இதுவே பிற்காலத்தில் தி.மு.க-வுக்கு விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என்ற நிலையான பெயரை வாங்கித்தந்தது.
சர்க்காரியா சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் சி.பி.ஐ வழக்குகளைப் பதிவு செய்தது. ஆயினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் இந்த வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 1980-களில் இந்த வழக்கானது திரும்பப்பெறப்பட்டது.
சர்க்காரியா கமிஷன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டது. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் பிரசார மேடைகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பெரும்பாலும் அ.தி.மு.க-வின் பிரசார மேடைகளில் இன்றும் சர்க்காரியா கமிஷன் என்ற வார்த்தையைச் சத்தியமாய்க் கேட்க முடியும். இப்போதும் தி.மு.க தரப்பில் இருந்து ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது அவர்களை எதிர்த்துத் தொடுக்கப்படும் அடுத்த வார்த்தை
‘ சர்க்காரியா கமிஷன் அறிக்கையில்... ’ என்றுதான் துவங்கும். அதனால் தான் 1976-ல் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனைப் பற்றி, 2018-ல் `சர்க்காரியா கமிஷன் ஒரு சூழ்ச்சி வலை' என்று புத்தகம் எழுதினார் முரசொலி செல்வம்.
காற்றையும் காசாக்கினார்களா?
`கத்தி’ படத்தில் ``2 ஜின்னா என்னய்யா... அலைக்கற்றை... வெறும் காத்தை வச்சு கோடி கோடியா ஊழல் பண்ற ஊருய்யா இது!’’ என்று விஜய் கத்தியபடி பேசும் வசனம் பெரும் சர்ச்சையானது.
அந்த டயலாக்கிற்கு அடிப்படைக் காரணம், 2 ஜி ஊழல் புகார். அதில் மத்திய அரசுக்கு இழப்பு என்று குற்றம்சாட்டப்பட்ட தொகை ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய்.
2010 மே 6-ம் தேதி ஆ.ராசா மற்றும் நீரா ராடியா இடையேயான உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியான நாள்,
இந்திய ஜனநாயகம் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளான தருணம். தொலைபேசி உரையாடலின் வாயிலாக இந்திய அமைச்சரவை கட்டமைக்கப்பட்டதைக் கண்டு இந்திய மக்கள் நொந்து போனார்கள். பின்னாட்களில் அந்த உரையாடலில் ஈடுபட்ட இருவருமே 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குப் புகாரிலும் சிக்கினார்கள்.
இந்திய அரசியலை உலுக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு. 2004 முதல் 2009 வரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி நடைபெற்றது. அப்போது 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்றார் தி.மு.கவைச் சேர்ந்த ஆ.ராசா.
அந்தச் சூழலில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றைகளை நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் கிளம்பின. அதன் அடிப்படையில் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்களின் மீதும் வழக்குகள் தொடர்ந்தது சி.பி.ஐ.
இந்த வழக்கின் பிரமாண்டத்துக்கான காரணங்களில் ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட நஷ்ட கணக்குகள். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் அரசுக்கு 30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்தது சி.பி.ஐ.
அதேவேளையில் 1 லட்சத்து 76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சியான அறிக்கையைத் தாக்கல் செய்தது சி.ஏ.ஜி. இந்த வழக்கின் அடிப்படைச்சாரம் என்பது, கடந்த 2008-ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட டெண்டரில் தனக்கு வேண்டியவர்களுக்கு அதைத் தருவதற்கான மீறல்கள்தான்.
ஒப்பந்த தேதி மாற்றியக்கப்பட்டது, 2001-ம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட அதே நுழைவுத் தொகையின் அடிப்படையில் 2008-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது என்பவை முக்கியக் குற்றச்சாட்டுகள்.
சர்க்காரியா கமிஷன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நடந்த வழக்கைப் போலவே, 2ஜி வழக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓ.பி ஷைனி தலைமையில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது கடந்த 2017 டிசம்பர் 21-ம் தேதி வழங்கப்பட்டது.
தீர்ப்பில் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது நீதிமன்றம். இந்த தீர்ப்பும் தி.மு.கவுக்கு ஒருவிதத்தில் பலமாகவும் மறுவிதத்தில் பலவீனமாகவும் மாறிப்போனது.
ஷைனி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த, ``விடுமுறை நாள்களில் கூட அலுவலகத்தில் சாட்சியத்திற்காக காத்திருந்தேன். ஆனால் ஒரு சாட்சியும் அமல்படுத்தப்படவில்லை” எனப்பதிவிட்டிருந்ததால்,
‘ஊழல் நடந்தது உண்மைதான் சி.பி.ஐ முறையாகச் செயல்படத் தவறி விட்டது’ என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் குற்றம்சாட்டி வருகின்றன. தி.மு.கவை வீழ்த்திய ஊழல் புகார் இது.
மெட்ரோ சிட்டி... ஊழலின் அட்ராசிட்டி
ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருந்த சமயம் சென்னை மாநகரத்தின் ஆணையராக இருந்த பி.வி. ஆச்சாரியாலு 2001 ஜூலை 29-ம் தேதி சென்னையின் மேம்பாலங்களைக் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்தார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்ட தொகை என்னவோ 12 கோடி ரூபாய்தான். ஆனால், இந்தப் புகார் தொடர்பாக நடந்த கருணாநிதியின் கைது இந்த வழக்கைப் பிரபலப்படுத்தியது.
பி.வி. ஆச்சாரியாலுவின் புகார் பெறப்பட்ட சில மணி நேரங்களில் 2001 ஜூலை 30-ம் தேதி அதிகாலை அரங்கேறியது முன்னாள் முதல்வர் கருணாநிதியினுடைய கைது சம்பவம். ஆனால், இந்த வழக்கினுடைய குற்றப்பத்திரிகையானது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 1996 இருந்து 2001 வரை தி.மு.க ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராக இருந்தவர் ஸ்டாலின்.
அப்போது சென்னையில் ஒன்பது புதிய பாலங்கள் கட்டுவதற்கு முறைகேடான முறையில் தமிழக அரசு நிதி ஒதுக்கியதாகவும் இதன் மூலம் அரசுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் 409, 420, 20-பி ஆகிய பிரிவுகளில் கீழ் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி மணி,
முன்னாள் தலைமைச்செயலாளர் நம்பியார் மற்றும் முன்னாள் மேயர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதை நிரூபிப்பதற்கு அ.தி.மு.க அரசே பெரிதாக மெனக்கெடவில்லை. அல்லது எதுவும் தேறவில்லையா என்று தெரியவில்லை.
ஆனாலும் இந்த ஊழல் புகார் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சென்னை என்ற மாநகரத்தைச் செதுக்கியவர் ஸ்டாலின்தான் என அவருடைய கட்சிக்காரர்கள் சொல்லும்போதெல்லாம்,
‘தம்பி அப்படியே அந்த மேம்பால கணக்கு விஷயத்தைப் பற்றி சொல்லேன்’ என்று கொஞ்சம் கிண்டலாய்த்தான் கேட்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
தி.மு.கவை திணறடித்த இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படவில்லை.
அதனால் எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் நாங்கள் யாரும் தண்டனை அனுபவிக்கவில்லை என உடன் பிறப்புகள் உஷ்ணமாகப் பேசினாலும் `நெருப்பில்லாமல் புகையாது’ என்று மக்கள் மனதுக்குள் மருவிக்கொள்வதை யாராலும் மறுக்கவே முடியாது.
வைரமுத்துவின் நயாகரா பற்றிய கவிதையின் வரிகளைப் போல `` உன் பழமொழி பொய்யடா தமிழா,நெருப்பில்லாமலே புகைகிறதே” எனக் காரணம் சொல்லலாம். ஆனால், சில நேரங்களில் வீராணம் ஏரி ஊழல் குற்றச்சாட்டைப் போல புகைவதற்கு நீரும் கூட காரணமாகத்தான் இருக்கிறது.
ஒரு கட்சியின் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தலைமையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை ஆட்சியையே ஆட்டுவித்து விடும். அந்த வகையில் தமிழகத்தில் அதிகமாய் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.கதான்.
விகடன் பகிர்வு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்
திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. 🙏🇮🇳1
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
🙏🇮🇳2
அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடம்,
'பள்ளிகொண்ட அனுமான்' கோயில்.
🇮🇳🙏1
இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும்
நாக்பூர் வரை செல்ல வேண்டும்.
பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க 'சாம்வலி' எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின்
மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.
🇮🇳🙏2
இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம - இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார்
இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா?
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்று தான் தோன்றுகிறது.
கடந்த ஓராண்டாக உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சீன வைரஸ் என்பது வூஹான் வைரஸ் மட்டுமல்ல.
மற்ற நாடுகளின் தகவல் திருட்டில் ஈடுபடும் கணினி மற்றும் மென்பொருள் வைரஸ் மட்டுமல்ல.
அதற்கும் மேலாக மனித வைரஸ்களும் சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள செய்தி திடுக்கிடவைக்கிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீன குடிமக்கள் மேற்கொண்டுள்ள ஊடுருவலின் அளவை ‘தி ஆஸ்திரேலியன்’ என்கிற சஞ்சிகை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிய விவரங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கியுள்ளது.