ஐம்பது வருடம், நூறு வருடம் எல்லாம் அந்த கால கட்டத்தில் வாழும் நமக்கு நீண்ட நாட்களாக தெரியலாம். ஆனால் மனித குல வரலாற்றில் பார்த்தால் இதெல்லாம் மிக மிக சொற்ப காலம்.
ராவணன் பல்லாண்டு காலம் ஆட்சி செய்தான். தேவர்களை, முனிவர்களை, ஸாதுக்களை கொடுமைப்படுத்தினான். எத்தனையோ பெண்களை பலவந்தமாக கவர்ந்து வந்து துன்புறுத்தினான். இவன் கொடுமை எல்லாம் தீரவே தீராது, காலா காலத்துக்கும் நிலைத்து இருக்குமோ என்று தான் அன்று பலரும் நினைத்து இருப்பர்.
ஆனால் அவனுக்கும் அழிவு வந்தது. அவன் குலத்துக்கும் அழிவு வந்தது. அந்த கொடுமையான காலகட்டமும் முடிவடைந்தது.
கலியுகத்தில் ஔரங்கசீப். நீண்ட நெடுங்காலம் இம்மண்ணில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தானே? சத்ரபதி சிவாஜி காலம் முடிந்த பின்னரும் அந்த கொடுமை இம்மண்ணில் நிகழ்ந்ததா இல்லையா?
எப்படி முடிவுக்கு வந்தது? முகலாய வம்சமே எப்படி இல்லாமல் போனது? யாராவது அப்போது நினைத்து பார்த்து இருப்பார்களா? பாபர், ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஆலம்கீர் இவர்களால் ஸ்தாபித்த சாம்ராஜ்யம் அழிந்து போய் விடும் என்று யாராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா?
இல்லை, வெள்ளையர்கள் எனும் கொள்ளையர்கள் இம்மண்ணை அடிமைப்படுத்திய கால கட்டத்தில் எத்தனை பேர் வெள்ளையர்களை துரத்திவிட்டு நாம் அரசாள முடியும் என்று நினைத்து இருப்பார்கள்?
ஆனால் இது எல்லாமே வரலாற்றில் நடந்தது. முதல் சம்பவத்தில் தெய்வம் நேரே வந்து நிறைவேற்றியது. அடுத்ததில் அந்நியர் ரூபத்தில் முடித்து வைத்தது. மூன்றாவதில் அதே அந்நியருக்கு எதிராக நம்மை உத்வேகம் கொண்டு போரிட வைத்தது.
இப்போது,
அதே எதிரிகள் தான். ஆனால் வேறு வடிவில். மேலே சொன்ன மூன்றும் கலந்த வடிவில். நேரடி தாக்குதல், ஆக்கிரமிப்பு, பலாத்காரம் இல்லாமல் மறைமுகமாக. ஆனால் விஷயம் ஒன்று தான், அடிமைப்படுத்துதல்.
ஒரு எழுபது வருடமாக இது நடக்கிறது. இது நமக்கு பெரிய கால கட்டமாக தோன்றலாம். இல்லை, வரலாற்றில் இது அற்ப காலம்.
ஐயோ சபரிமலை புனிதம் போச்சே, இறைவன் இருக்கிறானா இல்லையா? ஏன் இதை எல்லாம் தடுக்கவில்லை? பக்தி, விரதம் எல்லாம் சும்மாவா என்று பலரும் கூக்குரலிடுகிறார்கள்.
இனி சபரிமலைக்கு செல்ல மாட்டேன் என்று சிலர் வேதனைப்படுகிறார்கள். மாலையை கழட்டி எறிந்த பக்தர்கள் என்று செய்திகள் வருகின்றன. இனி சபரிமலைக்கு என்று புனிதம் கிடையாது என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அயோத்தியில் ராம பிரான் கோயிலை இடித்த போதும் இறைவன் தடுக்கவில்லை.
முகமது கஜினி சோமநாதர் கோயிலில் அட்டூழியங்கள் செய்த போதும் இறைவன் தடுக்கவில்லை.
ஈவெரா விநாயகர் சிலைகளை உடைத்த போதும் இறைவன் தடுக்கவில்லை.
அதனால் என்ன ஆகி விட்டது? இறைவன் இல்லை என்றாகி விட்டதா என்ன? நம் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்து போய் விட்டதா என்ன?
மாறாக இவை எல்லாம் நம்மை மேலும் உத்வேகம் கொள்ள செய்தன.
சோமநாதர் ஆலயத்தை மீண்டும் நிர்மாணித்தோம்.
அயோத்தியில் ராமரை திரும்ப பிரதிஷ்டை செய்தோம்.
வீதி தோறும் விநாயகரை கொண்டு வந்தோம்.
இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தன. இறைவன் நம்மோடு இருந்து, நமக்கு உணர்வினை ஊட்டி இவற்றை செய்வித்தான். ஒரு வகையில் பார்த்தால் இவர்களுக்கு எல்லாம் நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
சுரணை இல்லாத இந்துக்களுக்கு கூட இவர்கள் செய்யும் செயலால் ஏதோ கொஞ்சமாவது சுரணை வருகிறதே?
பினராயி விஜயன் ஏதோ இரண்டு பெண்களை அனுப்பி விட்டால் சபரிமலை தன் புகழை இழந்து விடுமா? அதற்காக சபரிமலையை புறக்கணிப்பதா?
தவறிப்போய் சாக்கடையில் காலை விட்டு விட்டால் காலை சுத்தம் செய்து கொள்ள வேண்டுமே தவிர கால்களை வெட்டிக் கொள்வது அபத்தம் அல்லவா?
இதில் வேறு, பினராய் விஜயன் வென்று விட்டார். இந்துக்கள் ஐதீகம் தோற்று விட்டது என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதுகின்றன.
இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து வரும் தலைமுறையினருக்கு பினராய் விஜயன் யார் என்று கேட்டால் ஒருவருக்கும் தெரியாது. நூறு வருடங்களுக்கு பிறகு ஈவெராவை தெரியாது.
ஆனால் இன்னும் ஐயாயிரம் வருடங்களுக்கு பிறகு வரும் தலைமுறையினருக்கு கூட ராமர், கிருஷ்ணர், ஐயப்பன் இவர்கள் எல்லாம் கடவுள்கள் என்று தெரியும்.
சனாதன தர்மம் அழிவில்லாதது. உலகம் தோன்றிய போது தோன்றியது, உலகம் அழியும் போது அழியும். இடையில் வரும் அற்ப பதர்கள் எப்படி நம் தர்மத்தை வெல்ல முடியும்?
எனவே நாம் மனதில் நிறுத்த வேண்டியது ஒன்றுதான்,
இதுவும் கடந்து போகும்!
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்
திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. 🙏🇮🇳1
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
🙏🇮🇳2
அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடம்,
'பள்ளிகொண்ட அனுமான்' கோயில்.
🇮🇳🙏1
இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும்
நாக்பூர் வரை செல்ல வேண்டும்.
பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க 'சாம்வலி' எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின்
மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.
🇮🇳🙏2
இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம - இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார்
இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா?
சீன ஆக்டோபஸின் கொடிய நச்சுக் கரங்களில் உலகமே சிக்கியுள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்று தான் தோன்றுகிறது.
கடந்த ஓராண்டாக உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சீன வைரஸ் என்பது வூஹான் வைரஸ் மட்டுமல்ல.
மற்ற நாடுகளின் தகவல் திருட்டில் ஈடுபடும் கணினி மற்றும் மென்பொருள் வைரஸ் மட்டுமல்ல.
அதற்கும் மேலாக மனித வைரஸ்களும் சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள செய்தி திடுக்கிடவைக்கிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீன குடிமக்கள் மேற்கொண்டுள்ள ஊடுருவலின் அளவை ‘தி ஆஸ்திரேலியன்’ என்கிற சஞ்சிகை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிய விவரங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கியுள்ளது.