அதிமுக அரசின் நிலக்கரி ஊழல் - சிஏஜி அறிக்கையிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் 6,000 Kcal/Kg இருக்க வேண்டும் என்பது டென்டர் விதிமுறை.
அதற்கு குறைவான தரத்தில் இருந்தால் தகுந்த அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், தரக்குறைவான நிலக்கரியை அப்படியே வாங்கினார்கள்!
நிலக்கரியின் தரத்தை யார் உறுதி செய்வது?
TNPL, NTECL போன்ற நிறுவனங்கள் அவர்களே sample தேர்ந்தெடுத்து பரிசோதனைக்காக அனுப்புவார்கள். testing agency தேர்ந்தெடுப்பதும் அவர்கள்தான்
ஆனால் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில்(TANGEDCO) பரிசோதனை sample தேர்ந்தெடுப்பது தனியார் நிறுவனம்!
தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் என்ன?
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தை வரி விதிப்பதற்காக சுங்க வரித்துறை சோதனை செய்யும். விலை உயர்ந்த நிலக்கரியை விலை குறைவானது என்று யாரும் இறக்குமதி செய்யக்கூடாது என்பதற்காக. அங்கேதான் அதிமுக அரசு சிக்கியது!
சுங்க வரித்துறையிடம் இருந்த தரப்பரிசோதனை ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்ததில் 121 இடங்களில் நிலக்கரியின் தரம் டென்டரில் குறிப்பிட்ட தரத்தை விட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முறையாக செயல்பட்டிருந்தால் அதற்கு 813 கோடி அபராதம் விதித்திருக்க வேண்டும்.
இது 2016-17 ஆண்டுக்கான கணக்கு மட்டுமே.
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் தரப்பரிசோதனையை ஒழுங்காக செய்யாததால் ஏற்பட்ட இழப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டலாம்!
ஈஷா பவுண்டேஷன் கட்டிய கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.
எஸ்.பி. வேலுமணியின் LED தெருவிளக்கு ஊழல் பற்றிய தரவுகள்
Manufacturer அல்லது authorized dealer மட்டுமே ஏலத்தில் பங்கெடுக்கலாம் என்ற விதியை மீறி KCP Engineers போன்ற பினாமி நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கப்பட்டது
மக்களவையில் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்தான் அந்த புள்ளி விவரம்.
தமிழகத்திலிருந்து பலரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்
தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் அல்லது சுயமரியாதை திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் அவர்களது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப் பட்டது என்ற விவரம் நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது
இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டுமாம்!
ஆண்டுக்கு 24% வட்டியோடு நவம்பர் 30, 2009க்குள் திருப்பி அளித்து விடுவோம் என்று எழுத்து மூலமாக லதா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்திருந்தும் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.
கொரோனா டைம்ல தான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங் நடத்த முடியுமாம். ஆனா நீதிமன்றம் உத்தரவு போட்ட படி இடத்தை காலி பண்ண முடியாதாம்.
அதுவும் எப்படி? ஏப்ரல் 2020க்கு முன்னாடி காலி பண்ணனும்னு ஆகஸ்ட் 2018ல போட்ட உத்தரவு! மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிச்சதாலதான் எல்லாம் கெட்டுப்போச்சாம்!
இது ஒண்ணும் இதுங்களுக்கு புதுசு இல்ல.
2017ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோட கட்டிடத்துல கடைய போட்டுட்டு, வாடகையை மாநகராட்சி உயர்த்தும் போது, அதை எதிர்த்து கோர்ட்டுல வழக்கு போட்டவங்கதான்.
கோர்ட்டு காதை பிடிச்சு திருகி வெளியே போக சொல்லிச்சு!
கோச்சடையான் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத வழக்கில், 3 மாதத்துக்குள் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று குற்றவாளி லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு