#அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்.

தொடர்கிறது....1

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும்
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

*மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்* எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
*'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’* என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், *'க்ரீன் சட்னின்னா என்ன தெரியுமா?’* எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், *சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை.
இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!*

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து புரோட்டின், கலோரி, விட்டமின் பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,

*'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;*

*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*

*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*

*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்*

என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம்
தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?

*லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட் வீ-கேர்ட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் அம்மா,
'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது
*வயிறு உப்புசமா இருக்கா... மாந்தமாயிருக்கும்....

கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.
*ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.*
'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே? குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல ஆராய்ச்சி எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.
ஆனால், #வசம்பைச்_சுட்டுக்_கருக்கும்போது_அந்த_அசரோன்_காணாமல்_போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.
*பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர்* என்ன தெரியுமா?

#பிள்ளை_வளர்ப்பான்’!

தொடரும்

@MalolaNarasimha @aarjeekaykannan @naturaize @raaga31280 @par_the_nomad

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

31 Dec
#அன்புக்கு_விலையேது

தனியாக கதை சொல்லி கொஞ்ச நாள் ஆகிவிட்டதோ? இதோ ஒரு கதை... அந்த கதை ஞாபகம் வந்ததன் பின்னணி....

போனவாரம் என் மனைவி எங்கள் பேரனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். என் பேரனும் போய் குடிதண்ணீர் எடுத்து வராமல்
டம்ளரில் குழாய் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தான். அதை அப்படியே குடித்து விட்டு "சமத்துடா கொழந்த... அடுத்த வாட்டி யாராவது குடிக்க தண்ணீர் கேட்டால் அதோ அந்த குடத்தில் இருந்து தான் எடுத்து கொடுக்கணும். சரியா?" என்று சொன்னாள்.
இதைப் பார்த்து என் மகள், "ஏம்மா... அந்த தண்ணிய குடிச்ச?" என்று கொஞ்சம் கடிந்து கொண்டாள்.

"கொழந்த ஶ்ரீராம் எவ்வளவு பாசமா... ஆசையா கொண்டு வந்தான் தெரியுமா? அவனை disappoint பண்ணக்கூடாது. அதுக்கு தான் ஒண்ணும் சொல்லாமல் குடிச்சேன்" என்றாள்.
Read 17 tweets
29 Dec
#அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்

தொடர்கிறது...2

சளி பிடிச்சிருக்கா?

*மதியம், கொத்தமல்லி ரசத்தில் கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க*

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?

*ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்து வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க*
*சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கணகணனு பசி எடுத்துச் சாப்பிடும்*
*வாய் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க*

*பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்*

*மூட்டு வலிக்க முடக்கத்தான் அடை*

*மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி*

*குழந்தை கால்வலிக்கு ராகிப்புட்டு*
Read 9 tweets
29 Dec
#அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்

இது நீள்பதிவு. தொடராக வரும்

*ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

*'வானம் வடக்கே கருக்கலா இருக்கு,
மழை வர மாதிரி இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’* என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

*ஆடிப் பட்டம் தேடி விதை* என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை
*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய *தேரன் சித்தர்* எந்த *மைக்ரோபயாலஜி* தேர்வுகளில் தேறியது இல்லை.

*செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும்
Read 5 tweets
28 Dec
#BELIEF_TRUST

A person started to walk on a rope tied between two tall towers. He was slowly walking balancing a long stick in his hands. He has his son sitting on his shoulders.

Every one from the ground were watching him in bated breath and were very tensed.
When he slowly reached the second tower every one clapped, whistled and welcomed him. They shook hands and toll selfies.

He asked the crowd “do you all think I can walk back on the same rope now from this side to that side?”

Crowed shouted in one voice “Yes,Yes,you can”
Do you trust me he asked.

They said yes, yes, we are ready to bet on you.

He said okay, can any one of you sit on my shoulder; I will take you to the other side safely.

There was stunned silence. Every one bacame quiet

#Belief is different. #Trust is different.*
Read 5 tweets
28 Dec
Dr Raghvendra Rao from Bangalore has sent a useful post, regarding coming Vaccination ... answering all possible Questions we might’ve. You may like to check it out, if you have any:
~~~~~~~~~~~~

FAQ’s on Covid Vaccines:
1. When is the Corona vaccine likely to be available?
Probably the Government will get it by January and the private market by March.

2. _Do we all need to take it?_
Yes, all should take it.

3. _Who will get it first?_
It will be prioritised. First frontline workers and first
responders like paramedical staff, civil servants, police, army, politicians and their relatives will get it first. People more than 50 years of age and those with co-morbidities like diabetes, HT, transplant and chemotherapy patients will get it next.
Read 41 tweets
27 Dec
#ROUGH_NOTE - Its SIGNIFICANCE

In a school bag, the Rough Book will have the worst condition because it bears the load and responsibilities of all other subjects.

*Only because of the presence of Rough Book,............*
*Fair Books of all subjects are found very neat and tidy, well maintained and decorated.*

*In our family also..*

*Because of presence of one rough book, who bears responsibilities for many subjects, individual fair books are enjoying their convenience.*
*Hats Off... to this rough book...*

#Who_is_the_rough_book_in_your_family? Have you ever acknowledged their presence.

Please do it before the rough book gets over.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!