உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா?அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா?வந்த கோபம் இன்னும் உள்ளதா?யோசித்துப் பாருங்கள்.
இந்த கல்லு இருக்கிறதே.அது ஒருமுறை உடைந்துவிட்டால்,பின் ஒட்டவே ஒட்டாது.என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும்.
பொன் இருக்கிறதே,அதில் கொஞ்சம் பிளவு வந்துவிட்டால் உருக்கி ஒட்ட வைத்துவிடலாம்.ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.
இந்தத் தண்ணீரின் மேல் அம்பைவிட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப்பொழுதில் மீண்டும் சேர்ந்துக்கொள்ளும். அம்புபட்ட தடம் கூட இருக்காது.
கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால்,வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள்.நமக்கு எப்படி மறுதீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள்.இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல.
நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால்,கொஞ்சநாள் மனதில் வைத்து இருப்பார்கள்,பின் மறந்து விடுவார்கள் - பொன் மேல் பிளவு போல.
ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே,அவர்களுக்கு நாம் ஏதாவது தீமை செய்துவிட்டால்,உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள் - நீர் மேல் பிளவு போல.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒருநாள் தெருவில் உலவிக் கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி."ஆஹா!இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே." என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார்.
இதை கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை அந்த முதியவரிடம் இருந்து பறித்துச்சென்றுவிட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லைக்கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டுசென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்துவிட்டார். இதை அறியாத அவரது மனைவி, பரணிலிருந்த பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கச்சென்றாள். பானையை கழுவும்போது உள்ளிருந்த கல்,
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப்பார்த்த குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்,
எனக்கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனைப்பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள்.
உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக்கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும், நக்கலாக அவன் சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனை குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக்கூறி சிரித்தான்.
குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டுவிட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது.
"என் தந்தை சத்தியவான்.செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர்புரிந்தார்.ஆனால் அவரைப் பாண்டவர்கள்,நான் இறந்ததாக பொய்சொல்லி,அநியாயமாக கொன்றுவிட்டனர்.என் தந்தை செய்த தவறு என்ன" என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்.ஒருநாள்,கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான்.
கிருஷ்ணன் மீது அவனுக்குக்கோபம் இருந்தது.அதனால், அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தைக்கேட்டான். "என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றதற்கு நீதானே காரணம்.அவர்
செய்த தவறு என்ன?".கிருஷ்ணர் சிரித்துவிட்டு,"செய்த பாவத்துக்கு, யாராக இருந்தாலும்,தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்"
ஒருநாள் அக்பரின் அரசவையில், அக்பரும் பீர்பாலும் பேசிக் கொண்டிருக்கும் போது அக்பர் கேட்டார். "பீர்பால்! இந்துமதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே,அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா?". உடனே பீர்பால்,"அரசே!அவருக்கு ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள்.ஏன் கேட்கிறீர்கள்?"
அக்பர்,"இல்லை ஒரு சாதாரண யானையின் காலை,ஒரு முதலை பிடித்ததற்கா உங்கள் திருமால்,கருடன் மீது ஏறி,சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையைக் காக்கவேண்டும்.நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே.அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி,அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?
அதை விட்டு விட்டு அவரே ஏன் நேரில் வந்து,அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?" இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.அதைப்பார்த்ததும் அக்பருக்கு ஒரே சந்தோஷம்.பீர்பாலே பதில் சொல்லமுடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று.ஒரிரு நாட்கள் சென்றன.