மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையோ சுற்றிலும் நீர் வலம் செய்து
உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப்படுபவர்
அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்
உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல
வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவிச் செல்வார்கள்
அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து
கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )
ஏன் இப்படிச் செய்யவேண்டும்?
நீராடி = உடலில் உள்ள அழுக்கு போனபின், புத்துணர்வோடு உண்பது ஒரு சுகம்.
கால் கழுவி = ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்னால் நீராட முடியாது. குறைந்த பட்சம் கால் கழுவவேண்டும்.கண்ட இடத்திலும் நடப்பதால், காலில் அசுத்தங்கள் ஒட்டி இருக்கலாம்.
அவை உணவோடு சேர்ந்து உள்ளே போகாமல் இருக்க கால் கழுவி.
வாய் பூசி = உண்பதற்கு முன்னால் வேறு எதையாவது குடித்திருப்போம்(காப்பி, டீ ).அது நாவில் ஒட்டி இருக்கும். உணவின் சுவையை அறியவிடாது.வாய் கழவிவிட்டால்,உணவின் சுவை நன்றாகத் தெரியும்.
நீர் வலம் செய்து = நீர் சுற்றிலும் இருந்தால்,எறும்பு போன்ற ஜந்துக்கள் உணவை நாடி வராது.அதை விட முக்கியமானது, பசி அவசரத்தில் பக்கத்தில் நீர் எடுத்து வைக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால், திடீரென்று விக்கல் வந்தால் நீர் இல்லாமல் சிரமப் படுவோம்.
முதலிலேயே நீர் வலம் செய்வதால், நம்மருகில் நீர் இருக்கமல்லவா?
அப்படி எல்லாம் செய்யவில்லை என்றால் அரக்கன் வந்து உங்கள் உணவைக்கொண்டு போய்விடுவான் என்று பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டுவிட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது.
"என் தந்தை சத்தியவான்.செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர்புரிந்தார்.ஆனால் அவரைப் பாண்டவர்கள்,நான் இறந்ததாக பொய்சொல்லி,அநியாயமாக கொன்றுவிட்டனர்.என் தந்தை செய்த தவறு என்ன" என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்.ஒருநாள்,கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான்.
கிருஷ்ணன் மீது அவனுக்குக்கோபம் இருந்தது.அதனால், அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தைக்கேட்டான். "என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றதற்கு நீதானே காரணம்.அவர்
செய்த தவறு என்ன?".கிருஷ்ணர் சிரித்துவிட்டு,"செய்த பாவத்துக்கு, யாராக இருந்தாலும்,தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்"
ஒருநாள் அக்பரின் அரசவையில், அக்பரும் பீர்பாலும் பேசிக் கொண்டிருக்கும் போது அக்பர் கேட்டார். "பீர்பால்! இந்துமதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே,அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா?". உடனே பீர்பால்,"அரசே!அவருக்கு ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள்.ஏன் கேட்கிறீர்கள்?"
அக்பர்,"இல்லை ஒரு சாதாரண யானையின் காலை,ஒரு முதலை பிடித்ததற்கா உங்கள் திருமால்,கருடன் மீது ஏறி,சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையைக் காக்கவேண்டும்.நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே.அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி,அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?
அதை விட்டு விட்டு அவரே ஏன் நேரில் வந்து,அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?" இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.அதைப்பார்த்ததும் அக்பருக்கு ஒரே சந்தோஷம்.பீர்பாலே பதில் சொல்லமுடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று.ஒரிரு நாட்கள் சென்றன.
குருக்ஷேத்திர போர்க்களம்.உக்கிரமான மகாபாரதப்போர் நடைபெற்றது.சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்தப்போர்.அன்று உக்கிரப்போர் புரிந்தவன் மாவீரன் கர்ணன். தன் நண்பன் துரியோதனனிடம் வாக்குக் கொடுத்து வந்திருந்தான்.
போர்க்களத்தில் பாண்டவரை வீழ்த்திக்காட்டுவேன் என்பது அவனது தீர்மானம்.அந்த எண்ணத்தால் உக்கிரப்போர் புரிந்தான்.முதலில் வந்தது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர்.பாண்டவர் சேனைக்குத் தலைவர் என்பதால்,அவரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன்.அவனது வில் திறமைக்கு முன்னால்,
தர்மரின் போர்த்திறம் பலம் குன்றியது.கர்ணனின் அம்பு மழையில் தர்மர் நினைவிழந்தார்.பதறியது கிருஷ்ணரின் உள்ளம். "பாண்டவர்கள் என் உயிர் போன்றவர்கள்,அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்"என்று சொன்ன கண்ணனுக்கு,இப்போது தர்மரின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.வேறு என்ன செய்வது?
ஒரு ஊரில் பெரிய பஞ்சம்.மழையே இல்லை.பூமி வறண்டு,மக்கள் தவித்துப் போனார்கள்.அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை என்ன செய்வது என்று முறையிட்டார்கள்.அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்"
என்று கூறி,அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார்.
ஒரு வாரம் யாகம் நடந்தது.கடைசி நாள் யாகம் முடிந்தவுடன்,மழை "சோ" என்று பெய்தது.மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
அந்தத் துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள்,அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது அவர் சொன்னார்,"இந்த மழை என்னாலோ,இந்த யாகத்தாலோ,உங்களாலோ வரவில்லை.அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே,அந்தச்சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது"என்றார்.அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். ஒருவர் கூட குடைக் கொண்டு வரவில்லை,துறவியும் சேர்த்து.
ஒரு ஊரில் குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி வில்வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச்சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர்.
இதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.அது கற்றுக்கொடுத்த குருவையே, அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.
"இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே.இன்னும் கூட அதிகமாக கற்றுக் கொள்ள எனக்கு இளமையும்,வயதும் இருக்கிறது.இனி நான்தான் குரு.பழைய குருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான்.