சியான் விக்ரம். இந்த மனுசனை புடிக்காதுன்னு சொல்லுறவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?
யாரையுமே கடிந்து பேசாம, fans கூட அவ்ளோ அன்பு, versatality acting, சக நடிகர்களோட ego இல்லாம பழகுறதுனு சொல்லிட்டே போகலாம்.
100 years of indian சினிமா விழாவில், 'தலைவா' பட பிரச்சனையால தளபதிக்கு கடைசி வரிசைல இருக்க இடம் குடுத்து ரொம்ப insult பண்ணாங்க. அப்போ தளபதி கூட இருந்து தன்னோட நட்பை காட்டியிருப்பார்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இயக்குனர் பாலா எழுதின "இவன்தான் பாலா" biographyல விக்ரம் பற்றி நிறைய சொல்லி இருப்பார். சேது படத்திற்க்காக உடல் எடையை குறைச்சிட்டு இருக்கிறப்போ பாலா கேட்ட கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில், அந்த ஓர்மம். அதுதாங்க விக்ரம்.
இந்த படங்களில எல்லாம் விக்ரமோட நடிப்பை பார்த்து மிரண்டிருக்கேன். கண்கள் பனிக்க படம் பார்த்திருக்கேன். என்ன மனுசன்யா இந்தாளு என்று வியந்திருக்கேன்.
Commercial படங்களில கூட விதம் விதமா நடிச்சிருப்பார். சாதாரண சீன்ல கூட அசால்ட்டா மாஸ் பண்ணியிருப்பார். கதைத்தேர்வுகள் எல்லாம் தேடி தேடி எடுத்த மாதிரி ஒவ்வொண்ணும் எத்தின தடவை பார்த்தாலும் அலுக்காது.
அடுத்தது முக்கியமான இடம். இந்த படங்களை பார்த்தப்போ,
'வித்தியாசமான நடிப்பு, getups , உடலை வருத்தி transformation' னு கதையில கோட்டை விட்டுட்டாரோ என்றுதான் எனக்கு தோணிச்சு. KKலாம் Point blank படத்தோட remake. ஆன அவ்வளவு சொதப்பல்.
I எல்லாம் விக்கிரமின் உழைப்புக்கு worth இல்லை.
அடுத்தது Cobra, துருவநட்சத்திரம் படங்கள் ரிலீசுக்கு காத்திட்டு இருக்கு. பழைய விக்ரமா எல்லாம் சொல்லி அடிக்கணும். COBRA TEASER நாளைக்கு வருது, I am waiting.😍.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழ் பயங்கரவாதம்' என்று அரசியல் செய்யும் நிலை தற்போது இலங்கையில் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படியொரு பிம்பத்தை கட்டமைத்தால்தான், அவர்களின் கையாலாகாத்தனங்களை மூடி மறைக்க முடியும். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது சதுரங்கத்தின் முதல் நகர்வு
இனிமேல்தான் காய்கள் கவனமாக நகர்த்தப்படவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படாது நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை அகற்றியதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.
ஆனால் இரவோடு இரவாக, ராணுவத்தினரின் பாதுகாப்போடு இடிக்க வேண்டிய தேவை என்ன?
அந்த தூபி அனுமதி பெறப்படாது கட்டப்பட்டது என்றால், முறையாக மாணவர் ஒன்றியத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டமொன்றில் அதற்கான தீர்வினை ஆலோசித்திருக்க வேண்டும்.
"Galileo" என்ற ஜப்பானிய துப்பறியும் தொடர் ஒன்றின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். The Devotion of Suspect X என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ஒரு கொலையை மறைத்து குற்றவாளி தப்பிக்கிறதுதான்" படத்தோட கதை.
இதை adopt பண்ணி நிறைய படங்கள் வந்திருக்கு. 1. Perfect Number (2012/Korean) 2. Drishyam (2013/Malayalam) 3. பாபநாசம் (2015) 4. கொலைகாரன் (2019)
The Other Me (2016/Greek)
இதுவும் கொலைகளை துப்பறியும் படம்தான்.கொலைகளில் தடையங்களா 220 எண்ணை கொலையாளி விட்டுட்டு போறான். "ஏன் அப்டி செய்யிறான்? , யார் கொலையாளி?" என்று கண்டுபிடிக்கிறதுலாம் செமையா இருக்கும். முக்கியமா cinematograohy வேற லெவல்ல இருக்கும்.
#BiggBoss4Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread.
#The_plague
Albert Camus இன் 'The Plague' நாவலை 'கொள்ளை நோய்' என்று தமிழில் 'ச. மதனகல்யாணி' மொழிபெயர்த்துள்ளார்.
அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ஒரு சாதாரண நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.
#அவமானம்
என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது.
-சாதத் ஹசன்
இது காலம் காலமா நடந்துட்டு வருதுன்னாலும், இப்போ கட்டுபாட்டில இருக்கு என்றாலும், ஒரே வருசத்துல எல்லாம் நடக்குதேனு நினைச்சா பீடை வருசம்னு தான் சொல்ல தோணுது. BlackLivesMatter சம்பவம்லாம் சரித்திரம் திரும்புதானுதான் நினைக்க தோணுது. Humanityலாம் கிலோ என்ன விலைனு கேட்பானுங்க போல.
Hurricane, Windstorm, Floods, Earthquake, Cycloneனு மொத்தமா வச்சு செஞ்சிருக்கு. ஒருத்தன் அடிச்சா பரவாயில்லை, 5 பேரு கதற கதற அடிச்சுட்டு ஆட்டோல coronaட ஏத்தி விட்ட வடிவேலு கதைதான். இதுக்கு இல்லையா சார் ஒரு endடு. Global warming & Climate change ரொம்ப சீரியஸ் விசயம். Think about it
சிவா முத்தொகுதி - அமிஷ்
1.மெலுஹாவின் அமரர்கள்
2.நாகர்களின் இரகசியம்
3.வாயுபுத்ரர் வாக்கு
சிவன் பழங்குடி இனமொன்றின் தலைவனாக இருந்து கடவுளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து புனையப்பட்டதே இந்த நாவல்.
விதிமுறைகளையும்,கொள்கைகளையும் மீறாது கடைப்பிடிக்கும் மெலுஹா ராச்சியம், அவரவர் விருப்பப்படி எந்தவித விதிமுறைகளோ கொள்கைகளோ இல்லாத ஸ்வத்வீப ராச்சியம்,எது தேவையோ அதை மட்டுமே ஏற்று வாழும் நாகர்கள் என வாழ்க்கை முறையின் பல கட்டமைப்புகளை ஒவ்வொரு வகையான ராச்சியங்கள் மூலம் விவரித்துள்ளார்
சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார்; காதலிக்கிறார்; திருமணம் செய்கிறார்; போர் செய்கிறார். தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக கஞ்சா புகைக்கிறார்.
Aamis (Assamese/2019)
அஸாமிஸ் மொழியில Aamis என்றால் இறைச்சி.
சுமோன் என்பவன் மானுடவியல் (Anthropology) துறையில் ஒரு ஆராய்ச்சியாளன். வட கிழக்கு இந்தியாவின் மக்களின் இறைச்சி உண்ணும் மரபுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்து வருகிறான்.
தன் நண்பர்களுடன் ஒரு 'meat club' வைத்திருக்கிறான். அதன் மூலமாக இறைச்சிகளை நேரடியாக உயிருள்ளவற்றை வாங்கி, வெட்டி, சுத்தம் செய்து, சமைத்து உண்ணுதலை ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளான். அவனுக்கு குழந்தைநல மருத்துவர் நிர்மாலியுடன் பழக்கம் ஏற்படுகிறது.
சுமோன் நிர்மாலியை அவள் ருசித்திராத சுவையுடைய இறைச்சி வகைகளை அறிமுகப்படுத்தி சாப்பிட வைக்கிறான். சுமோனுக்கு நிர்மாலியுடனான ஈர்ப்பு அவனை யாருமே செய்யாதா ஒரு காரியம் செய்ய வைக்கிறது. அது அவர்களை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அது என்னன்னு படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.