சிவா முத்தொகுதி - அமிஷ்
1.மெலுஹாவின் அமரர்கள்
2.நாகர்களின் இரகசியம்
3.வாயுபுத்ரர் வாக்கு
சிவன் பழங்குடி இனமொன்றின் தலைவனாக இருந்து கடவுளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து புனையப்பட்டதே இந்த நாவல்.
விதிமுறைகளையும்,கொள்கைகளையும் மீறாது கடைப்பிடிக்கும் மெலுஹா ராச்சியம், அவரவர் விருப்பப்படி எந்தவித விதிமுறைகளோ கொள்கைகளோ இல்லாத ஸ்வத்வீப ராச்சியம்,எது தேவையோ அதை மட்டுமே ஏற்று வாழும் நாகர்கள் என வாழ்க்கை முறையின் பல கட்டமைப்புகளை ஒவ்வொரு வகையான ராச்சியங்கள் மூலம் விவரித்துள்ளார்
சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார்; காதலிக்கிறார்; திருமணம் செய்கிறார்; போர் செய்கிறார். தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக கஞ்சா புகைக்கிறார்.
காளிக்கு நான்கு கைகள்,கணேஷுக்கு நீள மூக்கு(தும்பிக்கை) போன்றவற்றிற்கான காரணங்கள் எந்தவித fantasyஉம் இல்லாமல் விளக்கப்பட்டுள்ளது.
சோமபணம், தைவி அஸ்திரங்கள், நாகர்கள் என நாவலில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
ஏற்கனவே புராணக்கதைகளில் தெரிந்த விடையங்களை connecting the dots போன்று தனது கற்பனைகளுடன் இணைத்து இருப்பது சுவாரஸ்யமாக உள்ளது.
தீமையும் நன்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
நாவலின் மையக்கரு இதுவே என்று நினைக்கிறேன்.
ஒரே வரியில சொல்லனும்னா,
"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு"
ஆங்கிலத்தில் வெளியான நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு கொஞ்சம் மோசமாக இருந்தாலும்
நாவலின் சுவாரஸ்யம் அதை எல்லாம் மீறி தொடர்ந்து வாசிக்க செய்கின்றது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Aamis (Assamese/2019)
அஸாமிஸ் மொழியில Aamis என்றால் இறைச்சி.
சுமோன் என்பவன் மானுடவியல் (Anthropology) துறையில் ஒரு ஆராய்ச்சியாளன். வட கிழக்கு இந்தியாவின் மக்களின் இறைச்சி உண்ணும் மரபுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்து வருகிறான்.
தன் நண்பர்களுடன் ஒரு 'meat club' வைத்திருக்கிறான். அதன் மூலமாக இறைச்சிகளை நேரடியாக உயிருள்ளவற்றை வாங்கி, வெட்டி, சுத்தம் செய்து, சமைத்து உண்ணுதலை ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளான். அவனுக்கு குழந்தைநல மருத்துவர் நிர்மாலியுடன் பழக்கம் ஏற்படுகிறது.
சுமோன் நிர்மாலியை அவள் ருசித்திராத சுவையுடைய இறைச்சி வகைகளை அறிமுகப்படுத்தி சாப்பிட வைக்கிறான். சுமோனுக்கு நிர்மாலியுடனான ஈர்ப்பு அவனை யாருமே செய்யாதா ஒரு காரியம் செய்ய வைக்கிறது. அது அவர்களை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அது என்னன்னு படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.
ஒரு முன்னுரையை வாசித்து விட்டு அதன் ஞாபகங்களில் உழன்று, அதை தேடி அலைந்திருக்கிறேன்.
அவள் பெயரைத் தவிர அனைத்தும் அத்துப்படியாக இருந்தது. மீண்டும் வசிக்க தேடிய பொழுதுதான், அவள் ஆயிஷா என கண்டுகொண்டேன்.
இரா.நடராஜன் எழுதிய "ஆயிஷா : ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை."
"ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை" என்பதை பார்த்து இது எந்த புத்தகத்தின் முன்னுரை என இணையத்திலும், நூலகங்களிலும், புத்தகக்கடைகளிலும் தேடி அலைந்திருக்கிறேன். நெடு நாட்களின் பின்னர்தான் இது ஒரு குறுநாவல் என்பதை தெரிந்துகொண்டேன்.
இருபது பக்கங்களில் ஒருத்தியை நினைத்து ஆச்சரியம், மகிழ்ச்சி, கவலை, இரக்கம், அழுகை என அத்தனை உணர்ச்சிகளையும் கொட்ட வைக்க முடியுமா?. முடியாது என்று நீங்கள் நினைத்தால் ஆயிஷாவை படித்துப் பாருங்கள்.
பாவ கதைகள் (2020)
இந்த சீரிஸ் பற்றி எல்லாரும் எழுதிட்டு இருக்கிறாங்க. அதில ரயிலில் அந்த பெண் வாசிக்கிறது பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவல். அதை பற்றி பார்க்கலாம். இதுவும் ஒரு வகையில பாவ கதைதான். இதை இங்க காட்டணும்னு நினைச்சது வெற்றிமாறன் ஐடியாவா இருக்கும்னு நினைக்கிறேன்
மாதொருபாகன்.
திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத கணவன் மனைவியான காளி-பொன்னாவின் கதைதான் இந்த நாவல். இதில் அவர்கள் வாழ்க்கை முறையையும், சமூகத்தில் குழந்தை இல்லாமையால் படும் இன்னல்களையும் விவரிக்கிறார். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் கதை நிகழ்கிறது.
குழந்தை இல்லாதா பெண்களும், ஆண் குழந்தை வேண்டுபவர்களும் திருச்செங்கோடு பதினான்காம் திருவிழாவில் வேற்று ஆண்களோடு உறவாடி பிள்ளை பெற்று கொள்வதாகவும். அவர்களை 'சாமி பிள்ளை' என்று செல்வதாகவும் நாவலில் எழுதி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அந்தோலஜி திரைப்படங்கள், ஒரே வகையான Theme/Concept உள்ள குறும்படங்களின் தொகுப்பு. ஒவ்வொரு குறும்படங்களும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கும்.
01. The Ballad of Buster Scruggs (2018)
All Gold Canyon, The Girl Who Got Rattled ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்புகளை அடிப்படையாக வைத்து coen brothers இயக்கிய திரைப்படம். 6 சிறு பகுதிகளை கொண்டது. அனைத்தும் western style கதைகள்.
Anthology வகை படங்களில் மிகச்சிறந்த திரைப்படம்.
02. Wild Tales (2014)
பழிவாங்குதலை கருவாக கொண்ட 6 குறும்படங்களின் தொகுப்பு. One of the best anthology ever.
Hyperlink சினிமா.
ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் தனித்தனி trackல சொல்லப்பட்டு, அது எல்லாத்தையும் ஏதோ ஒரு விதத்தில தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட சினிமக்களை Hyperlink சினிமா என்று சொல்லுவாங்க. அப்படி என்னென்ன படங்கள் வந்திருக்குன்னு இந்த த்ரெட்ல பார்க்கலாம்.
தமிழ்ல நிறைய hyperlink சினிமா வந்திருக்கு. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ரெண்டு படமும் இதே வகைதான். 01. ஆரண்ய காண்டம் (2010) 02. Super Deluxe (2019)
03. தசாவதாரம் (2008) 04. ஆய்த எழுத்து (2004)
05.மாநகரம் (2017) 06. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் (2015)
எல்லாரும் 🔞+ திரைப்படங்கள் பற்றி பகிர்கிறதால நான் கொஞ்சம் வித்தியாசமா, Raw sex content வரும் தமிழ் நாவல்களை பகிரலாம்னு நினைக்கிறேன். நீங்களும் அதை வாசிச்சுட்டு, 'என்னடா இவ்வளவு பச்சையா இருக்குன்னு?' கேட்டிறாதீங்க. ஏன்னா, இலக்கியம்னா அப்பிடித்தான் இருக்கும்.
01. பொண்டாட்டி
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, அம்மன் என எல்லாரையும் நாவலின் கதாபாத்திரங்கள் ஆக்கி இருக்கிறார். பல வகையான பெண்டாட்டிகளை நாவலில் உலாவ விட்டிருக்கிறார்.
02. நான் ஷர்மி வைரம்.
Call boy network, பெண்கள் மட்டும் பங்குகொள்ளும் பிரபலமான பார்ட்டிகள் என ஆரம்பிக்கும் நாவல் ஒரு வைரக்கொள்ளையுடன் முடிவடைகிறது.