ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.
எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை.
போலித் தன்மை யினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்க வில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது.
ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்,
-----
இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்து விட்டது.
எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள்.
----
உலகியலின் பக்கத்திலோ எல்லாம் வெறுமை, எதுவும் இல்லை. எல்லாம் மறைந்துகொண்டே இருக்கின்றன. அழகு, இளமை, நம்பிக்கை இவை நிறைந்த இன்றைய மனிதன், நாளைய அனுபவசாலியாக ஆகிறான். இன்று பூத்த மலர்களாகிய நம்பிக்கையும் இன்பங்களும் சுகங்களும் எல்லாம் நாளைய உறைபனியில் வாடிக் கருகிவிடும்.
ஒரு பக்கம் இப்படி இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், வெற்றியின் மேல் மனிதனுக்கு உள்ள ஆசை, வாழ்க்கையின் தீமைகளை வெல்ல ஆசை, வாழ்க்கையை வெற்றிகொள்ள ஆசை, பிரபஞ்தசதையே கீழடக்க ஆசை, இவை உள்ளன. இந்தப் பக்கத்தில்தான் மனிதர்கள் உறுதியாக நிற்க முடியும்.
எனவே வெற்றிக்காக, உண்மைக்காக மத உணர்வுக்காகத் துணிச்சலாகப் போராடுபவர்கள் சரியான வழியிலேயே போகிறார்கள். அதையே வேதங்களும் போதிக்கின்றன.
மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள். விழித்திருங்கள், குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது"
“காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால்,
'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.
உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
அரசியல் வாரிசுகளால்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து -பிரதமர் மோடி
அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார்.
பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .
அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் !
1) "போகி பண்டிகை "
====================
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை ,இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் .அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .
2) "சூரியன் பண்டிகை "
===================
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும் ,சூரிய கலையாகவும் ,சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது .
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.எளிமை , இறைப்பணி, மக்கள் பணி. அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம்.
ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.