சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்.அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்."மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்.அதில் வெற்றி பெற்றால்,நீ தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகிவிடுவாய்.இன்று இரவு முழுவதும் நீ தனியாக,இந்தக் காட்டிலேயே இருக்கவேண்டும்.
உன் கண்கள் கட்டப்படும்.ஆனாலும் நீ பயப்படக்கூடாது.வீட்டிற்கு ஓடிவந்து விடவும் கூடாது" என்றார்.சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.அவனது கண்களை தந்தைத் துணியால் இறுகக் கட்டினார்.பிறகு,தந்தை திரும்பிச்செல்லும் காலடி ஓசை, மெல்ல,மெல்ல மறைந்தது.
அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு,தூரத்தில் ஆந்தை கத்துவதும்,நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது.காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ,என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.மரங்கள் பேயாட்டம் ஆடின.
மழை வேறு தூறத் தொடங்கியது.கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது."அய்யோ!இப்படி அனாதையாக தவிக்கவிட்டுத் தந்தை போய்விட்டாரே.யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்”என்று பலமுறை கத்திப் பார்த்தான்.பயனில்லை.சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.
திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல்,என்னதான் நடக்கும் பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.இப்படியே இரவு கழிந்தது.விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்.சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.
கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது,அவனுக்கு ஆச்சரியம்!ஆனந்தம்!அழுகையே வந்துவிட்டது. "அப்பா"என்று கூவி,அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான். "அப்பா நீங்கள் எப்போது வந்தீர்கள்?"என்று ஆவலாகக் கேட்டான்.
சோர்வும்,மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை,"நான் எப்போது மகனே உன்னை விட்டுப்போனேன்" என்றார். "இரவு இங்குதான் இருந்தீர்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறிய போதெல்லாம் என்னை கண்டுக்கொள்ளவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?" என்று கேட்டான்.
‘"உன் மனோதிடம் வளரவேண்டும்.நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காகவே மெளனம் காத்தேன்.ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்" என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது. இறைவனும் அந்த தந்தையைப் போலதான், நம்மோடே இருக்கிறார்.
துன்பத்திலும் சோகத்திலும் நாம் தவிக்கும்போது, நாம் துவண்டுவிடாமல், தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து,வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு செயலையும், கண்காணித்து கொண்டு தான் இருக்கிறார்.
நம் முயற்சிக்கும், நற்காரியங்களுக்கும், நம் உழைப்பிற்கும், உறுதுணையாகவே உள்ளார். இறைவன் எப்போதும் நம்மை கைவிடுவதில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்குத் தமிழில் அர்த்தம் சொல்வதென்றால்,"ஒரு மனிதரைப் பற்றியோ,ஒரு பொருளைப் பற்றியோ,ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம் அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், "கருத்து" எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமில்லை.கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை,அதற்குரிய தெளிவான அறிவு இல்லையென்றால். ஸ்டீவன் கோவி என்பவர் எழுதிய நூலில்,
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார்.
ஒரு ஞாயிறு காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தனர்.சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்தனர்.
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒருநாள் தெருவில் உலவிக் கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி."ஆஹா!இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே." என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார்.
இதை கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை அந்த முதியவரிடம் இருந்து பறித்துச்சென்றுவிட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லைக்கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டுசென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்துவிட்டார். இதை அறியாத அவரது மனைவி, பரணிலிருந்த பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கச்சென்றாள். பானையை கழுவும்போது உள்ளிருந்த கல்,
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப்பார்த்த குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்,
எனக்கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனைப்பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள்.
உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக்கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும், நக்கலாக அவன் சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனை குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக்கூறி சிரித்தான்.
உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா?அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா?வந்த கோபம் இன்னும் உள்ளதா?யோசித்துப் பாருங்கள்.
இந்த கல்லு இருக்கிறதே.அது ஒருமுறை உடைந்துவிட்டால்,பின் ஒட்டவே ஒட்டாது.என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும்.
பொன் இருக்கிறதே,அதில் கொஞ்சம் பிளவு வந்துவிட்டால் உருக்கி ஒட்ட வைத்துவிடலாம்.ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.
இந்தத் தண்ணீரின் மேல் அம்பைவிட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப்பொழுதில் மீண்டும் சேர்ந்துக்கொள்ளும். அம்புபட்ட தடம் கூட இருக்காது.
கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால்,வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள்.நமக்கு எப்படி மறுதீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள்.இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல.
குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டுவிட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது.
"என் தந்தை சத்தியவான்.செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர்புரிந்தார்.ஆனால் அவரைப் பாண்டவர்கள்,நான் இறந்ததாக பொய்சொல்லி,அநியாயமாக கொன்றுவிட்டனர்.என் தந்தை செய்த தவறு என்ன" என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்.ஒருநாள்,கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான்.
கிருஷ்ணன் மீது அவனுக்குக்கோபம் இருந்தது.அதனால், அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தைக்கேட்டான். "என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றதற்கு நீதானே காரணம்.அவர்
செய்த தவறு என்ன?".கிருஷ்ணர் சிரித்துவிட்டு,"செய்த பாவத்துக்கு, யாராக இருந்தாலும்,தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்"