Mr.Bai Profile picture
15 Jan, 16 tweets, 11 min read
ஃபாஸ்ட் பவுலர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் - 50 Over Format #PART1

சமீபகாலத்தில், ஒருநாள் தொடர் போட்டிகளில், எந்த பவுலராவது, ரிவர்ஸ் ஸ்விங் போடுகிறாரா என்ற கேள்வியைக் கேட்டால் நம்மில் பலபேர், பேந்தப் பேந்தத்தான் முழிப்போம்.
சரி எந்த பவுலராவது ஏர் ஸ்விங் போடுகிறாரா என்று
கேட்டால் அப்படி ஒரு ஸ்விங் இருக்கிறதா என்றுதான் பல பேர் கேள்வியாகக் கேட்பார்கள்.
கீழே இருக்கும் இரண்டு படங்களில், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஏர் ஸ்விங் இருக்கின்றன. ஒன்று 2011 உலகக் கோப்பையில் வகாப் ரியாஸ் யுவராஜிற்கு வீசியது, இன்னொன்று 2019 உலகக் கோப்பையில் ஸ்டார்க், ஸ்டோக்ஸிற்கு
வீசியது. அவை
இரண்டுமே புதிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இப்படியெல்லாம் ஸ்விங் போடுவார்களா என்று வியக்க வைத்த பந்துகள்! 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு, இது ஒரு சாதாரண பந்து. ஆனால் இந்தத் தலைமுறைக்கு இது ஆச்சர்யப் பந்து!!!
ஒருநாள் தொடர், அதற்குரிய பொலிவை, கொஞ்சம் கொஞ்சமாக
இழந்து கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் T20 Fever தொற்றிக் கொண்டிருக்க, அதனின் தாக்கம் 50 ஓவர் கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்து, கரையான் புற்று போல அரித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு கிரிக்கெட் போட்டி என்பது, பேட்டிற்கும் பந்திற்கும் இடையே நடக்கும் சரிசமமான போட்டியாக இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு, பலகாலமாக பேட் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறது, பந்து பேசுவதே இல்லை, அதைப் பேச விடவும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தயாராக இல்லை, அதற்குக் காரணம் பணம் மற்றும் பணம் மட்டுமே!

கிரிக்கெட்டில், கால ஓட்டத்தில் நிகழ்ந்த சில மாற்றங்களைப் பற்றிக் கூறி, அதிலிருந்து, இந்தக்
கட்டுரையை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். அப்பொழுதுதான், இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை இன்னும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.கிரிக்கெட்டில் ரெட் பால் மட்டுமே பயன்படுத்திய காலகட்டங்கள் நகர்ந்து, கலர் உடைகளுக்கு மாறி, வெள்ளைப் பந்துக்கு மாறி, போட்டியை பகல் இரவு ஆட்டங்களாக நடத்தத்
தொடங்கினார்கள். அமோக வரவேற்புக் கூடியது, இந்த மாற்றத்திற்கு.

1. 90 - 2000 காலகட்டங்களில், ஒருநாள் போட்டிகள், ரெட் பால் மற்றும் வொய்ட் பால் என இரண்டு பந்துகளிலும் மாறி மாறி நடந்து கொண்டே வந்தது. ஐசிசி தொடர்கள் , பிரபல முத்தரப்புத் தொடர்கள் கலர் வடிவத்திலும், இரண்டு அணிகள் மோதும்
தொடர், வெள்ளை வடிவத்திலும் நடைபெற்று வந்தது.

2. 2000க்குப் பிறகு, ஒருநாள் போட்டிகள் முற்றிலுமாக வொய்ட் பால் கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டது.

3. 2000 டூ 2010 காலகட்டங்களில் நடைபெற்ற பகல் இரவு போட்டிகளின் போது, பந்து மிகவும் தேய்ந்து போய், அதன் நிறம் மாறிவிடுகிறது, அதனால் அந்தப்
பந்தை மாற்ற வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

4. 2010இல் ஐசிசி, ஒரு புதிய விதியைக் கொண்டு வந்தது. ஒருநாள் தொடர்களில் 34 ஓவர்களுக்குப் பிறகு, புதுப் பந்தை மாற்ற வேண்டும் என்ற விதியை அமல்படுத்தியது.

5. 2011 அக்டோபரில், ஐசிசி இருபுறமும் புதுப்பந்து என்ற விதியைக் கொண்டு
வந்தது. அதாவது இரண்டு எண்டிலும் இரண்டு வெவ்வேறு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும். 50 ஓவர்கள் போட்டிகளில், 25 ஓவர்கள் மட்டுமே ஒரு பந்து வீசப்படும் என்ற விதியைக் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டை, குழி தோண்டிப் புதைத்து விட்டது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்த இடம்
இங்கே தான்.
இந்த விதியை மாற்ற, ஐசிசி, "பந்து, நிறம் மாறாது, ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஸ்விங் நன்றாகக் கிடைக்கும்!", என்று பசப்பு வார்த்தைகளைக் கூறியது. ஆனால் இதன் உண்மையான நோக்கம், முழுக்க முழுக்க வணிகக் காரணம் மட்டுமே. 15 டூ 40 ஓவர்களில், போட்டி போரடிக்கிறது, ரன்கள் பெரிதாக
வருவதில்லை, அதனால் ரசிகர்கள் இந்த ஓவர்களைப் பார்க்க, டிவியில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் விளம்பர வருவாய் பாதிக்கிறது என்பதனால், இதை மாற்ற, மறைமுகமாகக் கொண்டு வந்ததுதான் இந்த இரு பந்து விதிமுறை.

சரி இந்த விதியை மாற்றியதால், என்ன பெரிதாக நடந்து விட்டது,
எதற்கு இப்போது அதைக் குறை கூறுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

இரண்டு எண்டிலும் புதுப்பந்துகளையே பயன்படுத்துவதால், பந்து பழையதாகாது. மேலும் பேட்டுக்கு எளிதாகப் பந்து வரும். ரன்கள் சேர்ப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதுதான், இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதுவே பழைய பந்து
என்றால், பேட்டுக்கு அவ்வளவு எளிதில் வராது, வெயிட் பண்ணி ஆட வேண்டும், ஸ்பின்னர்களுக்கு பந்தை எளிதாக டர்ன் செய்ய உதவும், இறுதி ஓவர்களில் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு, ரிவ்ர்ஸ் ஸ்விங் ஆகும். இது எதுவும் தற்போது இல்லை.

Credits:Ayyapan

Next threadla meethi continue panren

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

14 Jan
20 நாட்களுக்குள் 1000 Followers உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி.
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @iam_vikram1686 @peru_vaikkala பாத்துதான் எழுத ஆரம்பிச்சேன்,நான் எல்லா Postum Tag பண்ணி தான் போடுவேன் இதுவரைக்கும் யாரும் ஏதும் சொன்னதே இல்ல,அத்துணை உறவுகளுக்கும்
Read 4 tweets
13 Jan
John wick நல்ல ஒரு ஆக்சன் படம் எதிர்ப்பாகிறவங்க இந்த படத்தை பாக்கலாம் Keanu Reeves நடிச்ச படம் படத்தோட கதை என்னனா நம்ம ஹீரோ முன்னாள் ஒரு Contract killer அப்டினு கூட சொல்லலாம் தன்னோட மனைவி இறந்து போனதால அதுல இருந்து ஆகி வீட்ல தனிமைல இருப்பாரு,அப்ப அவங்க மனைவி அவருக்கு ஒரு நாய் Image
பரிசலிச்சு இருப்பாங்க அவரோட மனைவி நினைவா அத வீட்ல வச்சு இருப்பாரு Ore Routine lifethan ஒரு Groundku போவாரு அங்க போயிட்டு தன்னோட கார்லா Drag பண்ணுவாரு திரும்ப வீட்டுக்கு வந்திருவாரு அது மாறி ஒரு நாள் போகையில Petrol bunkla petrol fill பண்ணிட்டு இருப்பாரு அப்ப ஒரு Gang Image
வரும் அவரோட இந்த கார் எவ்ளோ அப்டினு கேப்பாங்க அதுக்கு அவரு it is not for sale அப்டினு சொல்லிட்டு போயிருவாரு அதுக்கு அப்பறம் இவரு வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் அந்த Gang இவர் வீட்டுக்கு உள்ள நொழஞ்சு இவரோட கார் திருடிகிட்டு போயிருவாங்க அவர் செல்லமா வளர்த்த நாயா சாகடிச்சருவாங்க Image
Read 11 tweets
10 Jan
நான் கடைசியா Whatsapp Terms and Condition பத்தி எழுதுன threadக்கு நல்ல Response கிdடைச்சுது ஆனால் அதுல நிறைய பேர் நம்ம Data தான் அவங்கள்ட்ட ஏற்கனமே இருக்கே நீங்க என் புதுசா சொல்லுறீங்க அப்டினு கேட்டாங்க நிறைய பேர் நம்மொளோட Privacy பத்தி புரிதல் இல்லாம அந்த கேள்வியை கேக்கறாங்க
முதல நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் முதல கேட்டது போல் நம்ம DATA எல்லாம் அவங்களட இருக்கலாம் ஆனா அந்த DATA எல்லாம் ஒரு சில Conditons ஒட அந்த Application செயல்பட எடுத்துஇருப்பாங்க இது எல்லா Application உள்ள பொதுவான விசியம் ஆனால் இங்க என்ன மாறுபடுத்துன நம்ம தகவல்கள் எல்லாத்தையும்
அடுத்தவங்களுக்கு கொடுத்து லாபம் பாக்க போறாங்க இது எல்லாத்துலயும் நடக்குற பொதுவான விஷயம் அப்டினு நினைக்காதீங்க இத நாம புரிஞ்சுக்க Facebookல இருந்து ஆரம்பிக்கலாம் Facebook நம்மளோட எல்லா தகவல்களையும் அவங்க சேகரிக்குறாங்க அவங்கோலாட Advertisement,Analysis அதுக்காக இத வந்து 2016
Read 12 tweets
9 Jan
ஆஸி என்ற கொம்பர்களை அடக்க நல்ல கிரிக்கெட் மட்டும் அல்ல, சில சமயம் அக்ரசிவ் கிரிக்கெட்டும் தேவை!
இங்கே வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும்போதும் சரி, ரசிகர்கள் ஈடுபடும்போதும் சரி, அவர்களுக்கு பதிலடி கொடுக்கவென்றே சில பிரேத்யேக வீரர்கள் இருப்பார்கள்.
அவர்கள் இருந்தாலே, எதிரணியும் சரி
அவர்களது ரசிகர்களும் சரி, வாலாட்ட மாட்டார்கள். மீறி வாலாட்டினால், அந்த பிரத்யேக பீரங்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துவிடும்.
அப்படி ஒரு பீரங்கி இன்னைக்குப் பார்த்து நம்மட்ட இல்லாமப் போனதால ஆஸ்திரேலியர்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு!
சிராஜையும், பும்ராவையும் பார்த்து
ஆஸ்திரேலியா ரசிகர்கள் தகாத வார்த்தைகளைப் பேச, போட்டி முடிந்தவுடன் தான் அம்பயர்களிடம் முறையிடப்பட்டது.கங்குலியோ அல்லது கோலியோ இன்று களத்தில் இருந்தால், போட்டி நடைபெறும்போதே அதகளமே நடந்திருக்கும். பல சமயம் கேப்டன் கூலைக் கொண்டாடும் நாம், கேப்டன் அக்ரஷனின் முக்கியத்துவத்தை உணர்ந்த
Read 4 tweets
9 Jan
Comrade In America Dulqar salman நடிச்ச திரைப்படம் படத்தோட கதை என்னனா படத்தோட ஒரு opening Scenela போராட்டம் நடக்கும் Dulqar salman kerela Communist partyla membera இருப்பாரு அங்க உள்ள எதிர்க்கட்சி எதிர்த்து போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பாரு அவரோட அப்பா காங்கிரஸ் கட்சில இருப்பாரு
அப்பாவும் புள்ளையும் வேற வேற கட்சில இருப்பாங்க இவர் போராட்டம் முடிச்சிட்டு வீட்டுக்கு போனவுடனே இவர் அப்பா இவன திட்டுவாரு ஏன் இப்டி பன்றேன்னு அதற்கு அப்பறமா Heroine entry Dulqar படிச்சா காலேஜ்ல ஒரு பொண்ணு அமெரிக்காவுல இருந்து இங்க படிக்க வந்துருக்கும் முதல் நாள் காலேஜ் அந்த பொண்ண
ராகிங் பண்ணிட்டு இருப்பாங்க Dulqar வந்து காலேஜ் ஒட சீனியர் அத வந்து பாத்துட்டு எல்லாரையும் திட்டுவாரு இதனால Dulqar மேல ஒரு Crush வரும் அப்டியே இரண்டு பெரும் பேசி பழகி காதல் ஆகிரும் Dulqar வந்து வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு பொய் Introduce பண்ணுவாரு அதுக்கு பொண்ணோட வீட்டுக்கு
Read 11 tweets
8 Jan
Into the Night Netflix release பண்ண முதல் Belgium web series இந்த seriesla மொத்தமே 6 Episode தான் ஒவ்வொரு Episodeum Maximum 30 to 40 minutes குள்ள தான் இருக்கும் இந்த series ஓட கதை ஒரு Airport ல இருந்து ஆரம்பிக்கும் எல்லாரும் Flight எற காத்திட்டு இருப்பாங்க அப்ப திடிர்னு
ஒருத்தவன் வந்து West side ல போற டிக்கெட் ஏதாவது கொடுங்க அப்டின்னு கேற்பான் அப்ப MOSCOW போற FLIGHT இருக்கும் அதோட டிக்கெட் வாங்கிட்டு எல்லார் மாறியும் Flightகுள்ள போவான் அதுக்கு அப்பறமா அங்க உள்ள
security Guard அடிச்சு போட்டுட்டு gun வாங்கி் flighta hijack பன்னிருவன் அதுக்கு
அப்புறமா அங்க உள்ள எல்லார்ட்டையும் நா terrorist இல்ல உங்களை எல்லாரையும் நா காப்பாத்த தான் வந்துஇருக்கேன் சொல்லிட்டு Pilot room உள்ள போய் flight take off பண்ண சொல்லுவான் முடியாதுனு சொன்ன உடனே அவன் கைல Shoot பண்ணிருவான் அப்பறம் அவன் co-pilot இல்லாம takeoff பண்ண முடியாதுனு
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!