பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு, அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்த மகா பெரியவா.
குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை வந்து நக்கும், சாபம் விலகும்னு முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பத்தால குழந்தையோட தேகம் முழுக்க பாலைத் தடவினாரே
பெரியவாளின் தீர்க்க தரிசனம்.
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)
ஒருசமயம் ஸ்ரீமடத்துல மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். அப்போ அவரை தரிசிக்க, கையில சின்னக் குழந்தையோட வந்திருந்தா ஒரு தம்பதி.
அவா வந்து வரிசையில நின்னதுல இருந்து பலரும் அந்தக் குழந்தையைத்தான் பார்த்துண்டு இருந்தா. ரொம்பவே அழகா மூக்கும் முழியுமா இருந்த அந்தக் குழந்தைகிட்டே இருந்து சின்ன சிணுங்கலோ ,அழுகையோ அசைவோ ஒண்ணுமே ஏற்படலை.
ஒருவேளை தூங்கிண்டு இருக்கலாம்னு நினைச்சவாளுக்கு குழந்தையோட கண்கள் திறந்த நிலையில இருக்கறதைப் பார்த்ததும் ஒண்ணும் புரியலை.
ஆனா,குழந்தை சம்பந்தமான ஏதோ சங்கடத்தோடதான் அவா வந்திருக்காங்கறது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சுது.
குழந்தையோட பரமாசார்யா முன்னால வந்து நின்ன அந்தத் தம்பதி தங்களோட குழந்தையை அவர் திருவடிக்கு முன்னால அப்படியே தரையில விட்டா.
குழந்தை அழாமலும் சிணுங்காமலும் கிடக்க, பெத்தவா ரெண்டு பேரும் கதறி அழ ஆரம்பிச்சா.
"பெரியவா..குழந்தை பொறந்ததுலேர்ந்து எந்த அசைவுமே இல்லை. இதுக்கு பார்வை தெரியுமா, காது கேட்குமாங்கறதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியலை. எந்த உணர்ச்சியுமே இல்லாம ஜடம் மாதிரி இருக்கு.நீங்கதான்...!" முழுசா முடிக்க முடியாம கேவிக்கேவி அழத்தொடங்கிட்டா ரெண்டு பேரும்.
பதில் ஏதும் சொல்லாம கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையையே பார்த்துண்டு இருந்த மகாபெரியவா, "சுவாமிக்கு பூஜை பண்ணின புஷ்பத்தில் இருந்து ஒரு நந்தியாவட்டையும், கொஞ்சம் பசும்பாலும் எடுத்துண்டு வா!" தன் பக்கத்துல நின்னுண்டிருந்த சீடன்கிட்டே சொன்னார்.
என்ன, எதுக்குன்னெல்லாம் கேட்காம போய் எடுத்துண்டு வந்தார் அந்த சீடன்.
கிண்ணத்துல எடுத்துண்டு வந்த பாலை, நந்தியாவட்டை புஷ்பத்தால தொட்டுத் தொட்டு அந்தக் குழந்தையோட உடம்பு முழுக்க தடவினார் மகாபெரியவா.
இதோ இப்ப ஏதோ அதிசயம் நடக்கப்போறதுன்னு எல்லாரும் காத்துண்டு இருக்க, "கொழந்தையை அப்படியே தூக்கிண்டு போய் மாயவரத்துல இருக்கிற கோயில்ல தக்ஷிணாமூர்த்தி சன்னதியில படுக்கப் போடுங்கோ. உடனே பொறப்படுங்கோ!" மகபெரியவா சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காம உடனே புறப்பட்டா அந்தத் தம்பதிகள்.
மகாபெரியவா சொன்னபடியே மாயூரநாதர் கோயிலுக்குப் போய் எல்லா சுவாமியையும் தரிசனம் பண்ணிட்டு, அப்படியே பிரகாரத்துல வந்து தக்ஷிணாமூர்த்தி முன்னால ஒரு துண்டை விரிச்சு, அந்தக் குழந்தையைக் கிடத்தினா.
இதுக்குள்ளே மகபெரியவா சொன்னதாலதான் அவா அங்கே வந்து அப்படி ஒரு சங்கல்பத்தை செஞ்சுண்டு இருக்கா, அப்படின்னு தெரிஞ்சு நிறைய பக்தர்கள் அங்கே கூடிட்டா.
ஆசார்யாளே சொல்லி அனுப்பியிருக்கார்னா ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும்கற எதிர்பார்ப்பு எல்லார் முகத்துலயும் இருந்தது.
அதைவிட முக்கியமா அந்தக் குழந்தையோட பெற்றோரிடம், தங்களோட குழந்தைகிட்டே கண்டிப்பா மாற்றம் ஏற்படும்கற நம்பிக்கை இருந்தது
நேரம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்துண்டு இருந்தது. மத்தியானம் நடை சாத்தற நேரம் நெருங்கிண்டு இருந்தது.நடை சாத்தறதுன்னா கோயிலை விட்டு வெளியே வந்துடணும்.
அந்த சமயத்துல திடீர்னு ஒரு பூனை எங்கே இருந்தோ வந்தது.சன்னதியில கிடந்த குழந்தைகிட்டே நெருங்கித்து குழந்தையை பூனை பிராண்டிடுமோன்னு பயந்து விரட்ட நினைச்சவா கூட ஏதோ மந்திரத்தால கட்டுப்பட்டவா மாதிரி
பூனைக்கு எந்தத் தொந்தரவும் செய்யாம வேடிக்கை மட்டும் பார்த்துண்டு இருந்தா.
யாரும் எதிர்பாராத நேரத்துல பூனை சட்டுன்னு குழந்தையை நெருங்கி, அதோட தேகத்தை நாக்கால நக்கிட்டு, ஒரே ஓட்டமா வெளியில தாண்டி ஓடித்து.
அந்த நிமிஷம் அங்கே அதிசயம் நடந்தது. பொறந்ததுல இருந்து அசைவே இல்லாம ஜடம் மாதிரி இருந்த குழந்தை மெதுவா கையைக் காலை உதைச்சுண்டு புரண்டு படுக்க முயற்சி பண்ணித்து.
தன்னையே நம்ப முடியாத பரவசத்தோட குழந்தையை நெருங்கினா, அதோட அம்மா. தாயாரைப் பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரிச்சுது.
ம்...ழேன்னெல்லாம் மழலையில் கொஞ்சித்து. சரியா அதே நேரத்துல உச்சிகால பூஜைக்கான மணி ஓசை எழுந்து கோயில் முழுக்க எதிரொலிச்சுது
'மார்ஜால சாபம்'.னு இதைச் சொல்லுவா. (மார்ஜாலம்னா பூனைன்னு அர்த்தம்) அப்படி ஒரு சாபம் இவாளுக்கு இருந்திருக்குபோல இருக்கு.அதை நிவர்த்தி ஆகறதுக்குதான் மகாபெரியவா இவாளை இங்கே அனுப்பியிருக்கார்!" கூட்டத்துல யாரோ சொல்லிண்டு இருந்தா.
அவாளுக்கு பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் குடுத்து மாயவரத்துக்கு மகாபெரியவா ஒரு ஆச்சரியம்னா,
குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை வந்து நக்கும்.,சாபம் விலகும்னு முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பத்தால குழந்தையோட தேகம் முழுக்க பாலைத் தடவினாரே,அது எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்.
ஹர ஹர சங்கர 🇮🇳🙏
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வீர சிவாஜி மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றிய காஞ்சி மகான் (பூனேவிற்கு அருகில் தில்லை நடராஜர் திருக்கோயில் உருவான அற்புத நிகழ்வு):
அப்பொழுது 1980ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர், பெருந்திரளென அடியவர்களும் உடன்வர, பூனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில், சத்தாரா (satara) மாநகரத்திலுள்ள சஜ்ஜன்கட் (sajjangad) கோட்டையில் அமைந்துள்ள
சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தை தரிசித்துப் போற்றி மகிழ்கின்றார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் திடீரென்று ஓரிடத்தில் சாலையோரமாக அமர்ந்து விடுகின்றார்.
*நான்கு விதமான மாம்பழங்களைக் காய்க்கும் ஆச்சர்யமான ஸ்தல விருட்சம். தமிழகத்தின் அதிசயக் கோவில்.*
சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட சிவாலயங்களுள் காஞ்சியின் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். மேலும் பஞ்ச பூதங்களை குறிக்கும் சிவாலயங்களில் இந்த கோவில், பூமியை குறிக்கிறது. 🙏🇮🇳1
இங்கிருக்கும் லிங்கத்தை ப்ரித்வி லிங்கம் என அழைகின்றனர். இந்த கோவில் கிட்டதட்ட 25 ஏக்கரில் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களின் வரிசையில் இதுவும் முக்கியமான ஒன்று.
🙏🇮🇳2
இந்த கோவில் வளாகத்தில் தென்புற கோபுரம் மிகவும் உயரமானது கிட்டதட்ட 58.5 மீட்டர் உயரம் கொண்டது .
ஸ்ரீரங்கநாதஸ்வாமி தெற்கு நோக்கி
ஸயனித்திருப்பது ஏன் ?
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம்.
""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன்.
""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.
பாக்., வேண்டாம் - சிந்து மாகாண மக்கள் போர்க்கொடி : டுவிட்டரில் டிரெண்டிங்
சிந்து : பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள் தனி நாடு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
அதோடு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.
உலகின் மிகவும் பிரபலமான, தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம். இதன் பிறப்பிடமாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை தழுவி பரவி விரிந்து கிடந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல இன்று சுவடே தெரியாமல் அழிந்துவிட்டது. இருப்பினும் சிந்து மாகாணத்தில் பலர் இன்னும் அந்த தொன்மையை பாதுகாக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள், 1967 முதல் 'சிந்துதேஷ்' என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டு சிறை..! சாம்சங்கின் எதிர்காலம் என்ன?
சியோல்: அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தென் கொரிய மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனம் சாம்சங். 1938-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தென்கொரியாவின் டெங்கோ பகுதியில் லி நுங் செல் இந்த நிறுவனத்தை துவங்கினார்.
ஆரம்பத்தில் டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழிலாக இருந்த சாம்சங் குழுமம் அடுத்த 60 ஆண்டுகளில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து உலகையே கலக்கியது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு நிகராக தற்போது சாம்சங் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
🙏🇮🇳
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.18000 கோடி சொத்து வைத்து இருப்பவர். எளிமை , இறைப்பணி, மக்கள் பணி.
அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.