*நான்கு விதமான மாம்பழங்களைக் காய்க்கும் ஆச்சர்யமான ஸ்தல விருட்சம். தமிழகத்தின் அதிசயக் கோவில்.*
சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட சிவாலயங்களுள் காஞ்சியின் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். மேலும் பஞ்ச பூதங்களை குறிக்கும் சிவாலயங்களில் இந்த கோவில், பூமியை குறிக்கிறது. 🙏🇮🇳1
இங்கிருக்கும் லிங்கத்தை ப்ரித்வி லிங்கம் என அழைகின்றனர். இந்த கோவில் கிட்டதட்ட 25 ஏக்கரில் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களின் வரிசையில் இதுவும் முக்கியமான ஒன்று.
🙏🇮🇳2
இந்த கோவில் வளாகத்தில் தென்புற கோபுரம் மிகவும் உயரமானது கிட்டதட்ட 58.5 மீட்டர் உயரம் கொண்டது .
🙏🇮🇳3
புராணங்களின் படி, பார்வதி தேவி இங்கே இருக்கும் புனிதமான மாமரத்தின் அடியில் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்ததாகவும் அருகில் இருந்த மணலை கொண்டே இந்த சிவபெருமானை வடித்ததாகவும் சொல்லப்படுகிறது. 🙏🇮🇳4
அந்த மாமரத்தின் அடியிலேயே சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்சிக்கொடுத்தால் அவர் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
🙏🇮🇳5
இந்த கோவில் கிபி 600 முதல் இருப்பதாக நம்பப்படுகிறது . ஆனால் இன்று இருக்க கூடிய கோவில் அமைப்பு 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபம் இந்த கோவில் கட்டிடக்கலையின் மற்றொரு ஆச்சர்யம். 🙏🇮🇳6
இங்கிருக்கும் இந்த மாமரம், 3000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. இந்த மரம் நிகழ்த்தும் அதிசயம் யாதெனில், இந்த மரத்தில் நான்கு விதமான பழங்கள், நான்கு விதமான தட்பவெட்ப சூழலில் காய்க்கிறது.
🙏🇮🇳7
நாம் சிவாஜியின் நடிப்பில் கண்டு மெய்சிலிர்த்த திருக்குறிப்புத்தொண்ட நாயனாரின் வரலாறு நிகழ்ந்த இடம் இது தான். 🙏🇮🇳8
சிவபெருமான் அந்தணர் வேடம் தரித்து தன்னுடைய ஆடையை சூரிய அஸ்தமனத்துக்குள் துவைத்து தர வேண்டும் என கேட்டு திருவிளையாடல் நிகழ்த்தி அந்த ஆடையை துவைக்க விடாமல் செய்தார் சிவபெருமான். 🙏🇮🇳9
இந்த ஏமாற்றம் தாங்கள் தன் தலையை கல்லில் மோதி உயிர் துறக்க எண்ணிய திருக்குறிப்புத்தொண்டரின் உயிரை மீட்ட இடம் இதுவே. இந்த கோவில் பற்றிய குறிப்புகள் நம் தமிழ் இலக்கியங்களான மணிமேகலை மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
🙏🇮🇳10
இந்த கோவில் வளாகத்தினுள்ளே நிலதிங்கள் துன்டம் பெருமாள் கோவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு இங்கிருக்கும் பெருமாள் வாமன மூர்த்தியாக வழிபடப்படுகிறார். ஆழ்வார்கள் பாடிய 108 திவ்யதேஷங்களுள் ஒன்றாக இந்த இடம் உள்ளது.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிரபல கிறிஸ்தவ மதபோதகரும், இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரனின் சென்னை அடையாறு வீடு, அலவலகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமான ”இயேசு அழைக்கிறார்” என்கிற மத பிரச்சார அமைப்பை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு சொந்தமாக கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர, இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் தனியாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பால்தினகரன் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி கிடைத்து வந்துள்ளது.
வீர சிவாஜி மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றிய காஞ்சி மகான் (பூனேவிற்கு அருகில் தில்லை நடராஜர் திருக்கோயில் உருவான அற்புத நிகழ்வு):
அப்பொழுது 1980ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர், பெருந்திரளென அடியவர்களும் உடன்வர, பூனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில், சத்தாரா (satara) மாநகரத்திலுள்ள சஜ்ஜன்கட் (sajjangad) கோட்டையில் அமைந்துள்ள
சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தை தரிசித்துப் போற்றி மகிழ்கின்றார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் திடீரென்று ஓரிடத்தில் சாலையோரமாக அமர்ந்து விடுகின்றார்.
ஸ்ரீரங்கநாதஸ்வாமி தெற்கு நோக்கி
ஸயனித்திருப்பது ஏன் ?
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம்.
""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன்.
""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.
பாக்., வேண்டாம் - சிந்து மாகாண மக்கள் போர்க்கொடி : டுவிட்டரில் டிரெண்டிங்
சிந்து : பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள் தனி நாடு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
அதோடு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.
உலகின் மிகவும் பிரபலமான, தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம். இதன் பிறப்பிடமாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை தழுவி பரவி விரிந்து கிடந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல இன்று சுவடே தெரியாமல் அழிந்துவிட்டது. இருப்பினும் சிந்து மாகாணத்தில் பலர் இன்னும் அந்த தொன்மையை பாதுகாக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள், 1967 முதல் 'சிந்துதேஷ்' என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.