வீர சிவாஜி மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றிய காஞ்சி மகான் (பூனேவிற்கு அருகில் தில்லை நடராஜர் திருக்கோயில் உருவான அற்புத நிகழ்வு):
அப்பொழுது 1980ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர், பெருந்திரளென அடியவர்களும் உடன்வர, பூனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில், சத்தாரா (satara) மாநகரத்திலுள்ள சஜ்ஜன்கட் (sajjangad) கோட்டையில் அமைந்துள்ள
சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தை தரிசித்துப் போற்றி மகிழ்கின்றார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் திடீரென்று ஓரிடத்தில் சாலையோரமாக அமர்ந்து விடுகின்றார்.
அடியவர்களிடம் அருகிலுள்ள இல்லமொன்றின் அடையாளத்தைக் கூறி, அங்கு குறிப்பிட்ட அறையினுள் வைக்கப்பட்டிருக்கும் படத்தினைக் கேட்டுப் பெற்று வருமாறு கூறுகின்றார்.
அனைவருக்கும் பெரு வியப்பு, சுவாமிகள் கூறிய அடையாளத்தின் படி அமைந்திருந்த இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்தோரிடம் சுவாமிகள் வருகை தந்துள்ள விவரத்தையும், அவர்கள் இல்லத்திலுள்ள படத்தைப் பற்றியும் விவரிக்கின்றனர்.
அவர்களும், சகல மரியாதைகளுடன் சென்று காஞ்சி மகானைப் பணிந்துத் தங்களிடமிருந்த பெரியதொரு படத்தையும் சமர்ப்பிக்கின்றனர். சுவாமிகள் அதன் திரையை விலக்க, அது சத்ரபதி சிவாஜி மகராஜின் சித்திரம்.
காஞ்சிப் பெரியவர் நெகிழ்ச்சியுடன் அப்படத்திற்கு ஒரு சால்வையைப் போர்த்தி 'இன்று நம் தேசத்தில் இந்து தர்மம் தழைத்தோங்கி இருப்பதற்கு, சமர்த்த ராமதாஸரின் பரிபூரணத் திருவருள் பெற்ற 'வீர சிவாஜி' எனும் இந்த மகானின் தன்னலமற்ற சேவையும், அளப்பரிய வீரமுமே காரணம்' என்று போற்றுகின்றார்.
முன்பொரு சமயம் சிவாஜி மன்னர் தில்லையிலுள்ள நடராஜர் திருக்கோயிலைத் தரிசனம் செய்ய வந்திருந்த சமயத்தில், 'இது போன்றதொரு அற்புத ஆலயம் நம் மாநிலத்தில் இல்லையே' என்று பெரிதும் ஏங்கினாராம்.
அதனை நினைவு கூர்ந்த மகாப்பெரியவர், சிவாஜி மன்னரின் விருப்பத்தினை இச்சமயத்தில் நாம் பூர்த்தி செய்வோம், இவ்விடத்தில் ஒரு நடராஜர் திருக்கோயிலைப் புதுக்குவோம் என்று ஆசி கூறி அருள் புரிகின்றார்.
நான்கு வருடங்களில், நான்கு மாநில அரசுகளின் பங்களிப்போடு, ஒரு அற்புத நடராஜர் ஆலயம் அவ்விடத்தே உருவாகி 1984ஆம் குடமுழுக்கும் நன்முறையில் நடந்தேறுகின்றது.
ஆத்தீக அன்பர்கள் அவசியம் சத்தாரா சென்று சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தையும், நடராஜப் பரம்பொருளின் ஆலயத்தையும் தரிசித்துப் போற்றுதல் வேண்டும்.!!!
ஹர ஹர சங்கர 🇮🇳🙏
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிரபல கிறிஸ்தவ மதபோதகரும், இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரனின் சென்னை அடையாறு வீடு, அலவலகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமான ”இயேசு அழைக்கிறார்” என்கிற மத பிரச்சார அமைப்பை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு சொந்தமாக கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர, இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் தனியாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பால்தினகரன் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி கிடைத்து வந்துள்ளது.
*நான்கு விதமான மாம்பழங்களைக் காய்க்கும் ஆச்சர்யமான ஸ்தல விருட்சம். தமிழகத்தின் அதிசயக் கோவில்.*
சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட சிவாலயங்களுள் காஞ்சியின் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். மேலும் பஞ்ச பூதங்களை குறிக்கும் சிவாலயங்களில் இந்த கோவில், பூமியை குறிக்கிறது. 🙏🇮🇳1
இங்கிருக்கும் லிங்கத்தை ப்ரித்வி லிங்கம் என அழைகின்றனர். இந்த கோவில் கிட்டதட்ட 25 ஏக்கரில் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களின் வரிசையில் இதுவும் முக்கியமான ஒன்று.
🙏🇮🇳2
இந்த கோவில் வளாகத்தில் தென்புற கோபுரம் மிகவும் உயரமானது கிட்டதட்ட 58.5 மீட்டர் உயரம் கொண்டது .
ஸ்ரீரங்கநாதஸ்வாமி தெற்கு நோக்கி
ஸயனித்திருப்பது ஏன் ?
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம்.
""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன்.
""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.
பாக்., வேண்டாம் - சிந்து மாகாண மக்கள் போர்க்கொடி : டுவிட்டரில் டிரெண்டிங்
சிந்து : பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள் தனி நாடு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
அதோடு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.
உலகின் மிகவும் பிரபலமான, தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம். இதன் பிறப்பிடமாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை தழுவி பரவி விரிந்து கிடந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல இன்று சுவடே தெரியாமல் அழிந்துவிட்டது. இருப்பினும் சிந்து மாகாணத்தில் பலர் இன்னும் அந்த தொன்மையை பாதுகாக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள், 1967 முதல் 'சிந்துதேஷ்' என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.