365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்!
🇮🇳🙏1
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். 🇮🇳🙏2
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 🇮🇳🙏3
9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 🇮🇳🙏4
86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. 🇮🇳🙏5
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. 🇮🇳🙏6
இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப் பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். 🇮🇳🙏7
அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.
🇮🇳🙏8
திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
🇮🇳🙏9
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. 🇮🇳🙏10
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.🇮🇳🙏11
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். 🇮🇳🙏12
தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப் போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
🇮🇳🙏13
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. 🇮🇳🙏14
இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு. திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, 🇮🇳🙏15
திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.
🇮🇳🙏16
வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி - முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி - அன்னதானம்
🇮🇳🙏17
மாலை 4 மணி - நடை திறப்பு
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
🇮🇳🙏18
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்
🇮🇳🙏19
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வீர சிவாஜி மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றிய காஞ்சி மகான் (பூனேவிற்கு அருகில் தில்லை நடராஜர் திருக்கோயில் உருவான அற்புத நிகழ்வு):
அப்பொழுது 1980ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர், பெருந்திரளென அடியவர்களும் உடன்வர, பூனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில், சத்தாரா (satara) மாநகரத்திலுள்ள சஜ்ஜன்கட் (sajjangad) கோட்டையில் அமைந்துள்ள
சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தை தரிசித்துப் போற்றி மகிழ்கின்றார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் திடீரென்று ஓரிடத்தில் சாலையோரமாக அமர்ந்து விடுகின்றார்.
*நான்கு விதமான மாம்பழங்களைக் காய்க்கும் ஆச்சர்யமான ஸ்தல விருட்சம். தமிழகத்தின் அதிசயக் கோவில்.*
சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட சிவாலயங்களுள் காஞ்சியின் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். மேலும் பஞ்ச பூதங்களை குறிக்கும் சிவாலயங்களில் இந்த கோவில், பூமியை குறிக்கிறது. 🙏🇮🇳1
இங்கிருக்கும் லிங்கத்தை ப்ரித்வி லிங்கம் என அழைகின்றனர். இந்த கோவில் கிட்டதட்ட 25 ஏக்கரில் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களின் வரிசையில் இதுவும் முக்கியமான ஒன்று.
🙏🇮🇳2
இந்த கோவில் வளாகத்தில் தென்புற கோபுரம் மிகவும் உயரமானது கிட்டதட்ட 58.5 மீட்டர் உயரம் கொண்டது .
ஸ்ரீரங்கநாதஸ்வாமி தெற்கு நோக்கி
ஸயனித்திருப்பது ஏன் ?
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம்.
""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன்.
""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.
பாக்., வேண்டாம் - சிந்து மாகாண மக்கள் போர்க்கொடி : டுவிட்டரில் டிரெண்டிங்
சிந்து : பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள் தனி நாடு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
அதோடு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.
உலகின் மிகவும் பிரபலமான, தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம். இதன் பிறப்பிடமாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை தழுவி பரவி விரிந்து கிடந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல இன்று சுவடே தெரியாமல் அழிந்துவிட்டது. இருப்பினும் சிந்து மாகாணத்தில் பலர் இன்னும் அந்த தொன்மையை பாதுகாக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள், 1967 முதல் 'சிந்துதேஷ்' என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டு சிறை..! சாம்சங்கின் எதிர்காலம் என்ன?
சியோல்: அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தென் கொரிய மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனம் சாம்சங். 1938-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தென்கொரியாவின் டெங்கோ பகுதியில் லி நுங் செல் இந்த நிறுவனத்தை துவங்கினார்.
ஆரம்பத்தில் டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழிலாக இருந்த சாம்சங் குழுமம் அடுத்த 60 ஆண்டுகளில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து உலகையே கலக்கியது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு நிகராக தற்போது சாம்சங் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
🙏🇮🇳
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.18000 கோடி சொத்து வைத்து இருப்பவர். எளிமை , இறைப்பணி, மக்கள் பணி.
அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.