Jegan Profile picture
18 Jan, 15 tweets, 6 min read
தேசிங்கு ராஜா அரசவையில் மூச்சை நிறுத்தி வீர மரணம் அடைந்த தமிழச்சி கதை தெரியுமா?

'முதல் நாள் ஒரு கையை வெட்டுங்கள், மறுநாள் மற்றொரு கை, அடுத்து மார்பு, அதன் பின் முதுகு சதையை கிழி, பிறகு மூக்கறு, பின்னர் காதுகள், இடையிடையே வெந்நீரை ஊற்று, (1/15) Image
பின் குதிகாலை கொளுத்துக'இப்படி ஒரு தீர்ப்பைச் சொன்னது செஞ்சியை ஆண்ட விரத்திற்கும் தீரத்திற்கும் பேர் போன ராஜா தேசிங்கு...

'மன்னராட்சியில் குற்றவாளிகளுக்கு கொடும் தண்டனை கொடுப்பது வழக்கம்தானே..!' என்கிறீர்களா..! அதுதான் இல்லை... டெல்லியில் பாதுஷா ஷா ஆலம் ஆட்சி (2/15)
அப்போது ஆற்காடு நவாப்பின் கட்டுபாட்டில் செஞ்சி. செஞ்சி பாளையப்பட்டின் தலைவன் தேசிங்கு. இவர்தான் இப்போதும் ராஜா தேசிங்கு என அழைக்கப்படுகிறார்.

இவரின் வீரத்தைப்பற்றி நம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இவரின் ஆட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்...? அதைச் சொல்கிறது (3/15)
இந்த தமிழச்சியின் கதை. ராஜா தேசிங்குவின் சிப்பாய்களுக்கு தலைவர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு சிப்பாயின் பெயர் சுதரிசன் சிங். அவனின் நண்பன் ரஞ்சித் சிங். இவர்கள் இருவரும் புதுச்சேரி சென்று வரும்போது வளவனுாரில் இளைப்பாறுகிறார்கள். (4/15)
அப்போது திம்மன் என்ற தமிழன் உபசரித்து இளநீர் கொடுக்கிறான். பின்னர் உணவளிக்கிறான். உணவு பரிமாறும் போது திம்மனின் மனைவி சுப்பம்மாவை கண்ட சுதரிசன் சிங் அவள் அழகில் மயங்குகிறான்.அவளை அடைய திட்டமிட்ட சுதரிசன் சிங் திம்மனிடம், 'செஞ்சி கோட்டையில் சிப்பாய் வேலை வாங்கித் தருகிறேன்' (5/15)
என ஆசை வார்த்தை கூறி, அப்போதே திம்மனையும், சுப்பம்மாவையும் செஞ்சிக்கு அழைத்துச்செல்கிறான். இரவு நேரமாகிறது... குதிரையில் சுதரிசன் சிங்கும், ரஞ்சித் சிங்கும் முன்னே செல்ல, மாட்டு வண்டியில் திம்மனும் சுப்பம்மாவும் செல்கின்றனர். (6/15)
அப்போது வழிமறித்த கிராம மக்கள் திம்மனிடம், 'எங்கு செல்கிறாய்?' என கேட்க, திம்மன் செஞ்சிக்கு போவதாக கூற, தவறான முடிவெடுப்பதாக கிராமத்தினர் தடுக்க, அதையும் மீறி திம்மன் செஞ்சிக்கு செல்வதில் ஆர்வமாக இருக்கிறான். இதற்கிடையே, தங்களை எச்சரித்த தன் கிராமத்தினரிடம் இருந்து, (7/15)
திம்மனுக்கு தெரியாமல் சுப்பம்மா ஒரு கத்தியை வாங்கிக் கொள்கிறாள்.
செஞ்சியில் ஒரு குடிசையில் சுப்பம்மாவை தங்க வைத்துவிட்டு, திம்மனை கோட்டைக்கு அழைத்துச் சென்று ஓரிடத்தில் விட்டுவிட்டு, மீண்டும் குடிசைக்கு வந்த சுதரிசன் சிங் தன் ஆசைக்கு ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறான். (8/15)
சுப்பம்மா ஒப்புக்கொள்ளாததால் அவளை உள்ளே வைத்து குடிசையை சுதரிசன் சிங் கொளுத்துகிறான்.ஆனால், சுப்பம்மா உயிர் தப்புகிறாள். அதே பகுதியில் வேறொரு வீட்டில் அடைக்கலம் புகுந்த சுப்பம்மாவிற்கு தனது கைக்கூலி மூலம் மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்த சுதரிசன் சிங் சுப்பம்மாவை அடைகிறான்.(9/15)
மயக்கம் தெளிந்த சுப்பம்மா, சுதரிசனை தேடிப் பிடித்து தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொல்கிறாள். சுதரிசன் சிங் கொல்லப்பட்ட செய்தி அறிந்து, ராஜா தேசிங்கு நேரில் விசாரிக்கிறான்.அங்கி ருந்த ரஞ்சித்சிங் சுப்பம்மாதான் சுதரிசன் சிங்கை கொன்றாள் என்கிறான். (10/15)
அங்கிருந்து தப்பிய சுப்பம்மா கோட்டையில் திம்மனை கண்டு பிடிக்க, இருவரும் அங்கிருந்து தப்ப முயல்கின்றனர். ஆனால், சிப்பாய் கூட்டம் திம்மனையும் சுப்பம் மாவையும் கண்டுபிடிக்கிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் திம்மன் கொல்லப்படுகிறான். ராஜா தேசிங்குவின் அரசவை, கூடியிருந்த அவையினர்(11/15)
மத்தியில், பிடிபட்ட சுப்பம்மாவின் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ராஜா தேசிங்கு, 'முதல் நாள் ஒரு கையை வெட்டுங்கள், மறுநாள் மற்றொரு கை, அடுத்து மார்பு, அதன் பின் முதுகு சதையை கிழி, பிறகு மூக்கறு, பின்னர் காதுகள், இடையிடையே வெந்நீரை ஊற்று, பின் குதிகாலை கொளுத்துக' 🔥🔥
(12/15)
என்று தீர்ப்பளிக்கிறான். இதை கேட்ட சுப்பம்மா, தன் மூச்சை இயங்காது சுயகட்டுப்பாட்டால் நிறுத்தி இறக்கிறாள். செஞ்சிக் கோட்டை வரலாற்றின் கோர அத்தியாயம் இது.

இதை பாவேந்தர் பாரதிதாசன் தனது, 'தமிழச்சியின் கத்தி' என்ற கவிதை நுாலில் விவரித்துள்ளார். (13/15)
இந்நுாலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (14/15) @KingKuinsan @Karthicktamil86 @CineversalS @MVenukopal @Dpan2990 @kaviminigayle @kavinal_tweets
@Mr_Bai007 @Soru_MukkiyamDa @Karthi_Genelia @rightclickcbe @iam_vikram1686 @AriviyalTime @selvachidambara @ChennaiViswa
@tamil_twtz @bharath_kiddo @hari979182 @karthi_Nan Tag'ல் விடுபட்ட வர்கள் மண்ணிக்கவும்🙏 (15/15)
நன்றி 🙏 மகிழ்ச்சி 👑 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Jegan

Jegan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Jeganm27

19 Jan
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா(93) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா இன்று அதிகாலையில் உயிரிழந்தார். சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.(1/5) Image
தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு வி.சாந்தா அர்ப்பணித்தவர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றி ருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர்(2/5) ImageImage
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் (3/5) ImageImage
Read 5 tweets
24 Oct 20
பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?

இந்த பங்கு மார்க்கெட் தொழிலில் என்ன செய்யலாம் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்....

1. அத்தியாவசிய தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை கொண்டு இங்கே முதலீடு செய்யாதீர்கள்..(1/11)
2. நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணம் சில பல நாட்களுக்கு உங்களிடம் சும்மாவேதான் இருக்கிறது (surplus fund) என்றால் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம்.

3. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஓரளவுக்கு நியாயமான லாபத்தை (resonable returns) எதிர்பாருங்கள்..(2/11)
சந்தைக்குள் வரும் போதே குறுகிய காலத்தில் வாரன் பஃப்பட்டையும், ராகேஷ் ஜூன் ஜூன்வாலவையும் போல ஆகிவிடலாம் என்று கற்பனை கட்டுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்..

4. முதலீடு செய்யப்படும் பணத்தில் இருந்து மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகை வரும் என்று (3/11)
Read 11 tweets
18 Oct 20
மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?

1.மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக் கொள்வது.

1.Correcting ourselves without trying to correct others.

2.அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

2.Accepting others with their short comings.(1/8)
3.மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3.Understanding the opinions of others from their perspectives.

4.எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4.Learning to leave what are to be avoided. (2/8)
5.மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5.Leaving the expectations from others.

6.செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6.Doing whatever we do with peace of mind. (3/8)
Read 9 tweets
16 Oct 20
#My1StThread
உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.. (1/9)
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! (2/9)
பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.. (3/9)
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!