மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது.
ஒரு தற்கொலையில் தொடங்கும் கதை, அந்த தற்கொலைப் பற்றியும் அதற்கு காரணம் என்ன என்பதையும் தேடும் நண்பன் என்று கதை நகர்கிறது.
'பிரபாகர் சூசைட் பண்ணிக்கிட்டான்டா' என ஆரம்பிக்கும் நாவல், பிரபாகரனின் தற்கொலைக்கான காரணத்தை அவனின் நண்பன் துப்பறிவது போல கதை செல்கிறது. Rashomon effect போல சதாசிவம், நாஸியா, மணி,பாஸ்கர், பிரபாகரனின் அப்பா, அன்வர், லீமா, மயில்சாமி என ஒவ்வொருவர் பார்வையிலும் கதை நகர்கிறது.
கதை மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள்.
ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். அவரும் அதற்குள் அங்கமாக இருப்பவர் என்பதால் அந்த விவரிப்புகளுக்கு இயல்பாகவே ஒரு உண்மைத் தன்மை கிடைத்து விடுகிறது.
-சரவணன் சந்திரன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Paatal Lok (2020)
சாதாரண காவல் அதிகாரி ஹதிராம் சௌத்ரிக்கு அவர் கனவிலும் எதிர்பார்த்திராத ஒரு வழக்கு விசாரணை செய்வதற்கு வழங்கப்படுகிறது. அதில் வெற்றிபெற்றால், வீட்டிலும் வேலை இடத்திலும் மற்றவர்களின் ஏளனப்பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். பதவி உயர்வும் கிடைக்கும்.
சஞ்சீவ் மெஹ்ரா நியூஸ் சேனல் ஒன்றில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் . அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிதான் ஹதிராம் சௌத்ரி. இவர்களையும், இவர் சார்ந்த அந்த சிஸ்டத்தையும் அலசுகிறது `Paatal Lok'.
இந்தச் சமூக அடுக்கில் வெவ்வேறு நிலையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய அவர்களது வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொரு எபிசோட்டிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஹதிராம் சௌத்ரியாக ஜெய்தீப் நடித்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் சலீமா வருபவர்.
உண்மையிலேயே இந்த படம் ஆண் வர்க்கத்துக்கே ஒரு செருப்படிதான். 'எங்க வீட்ல எல்லாம் இப்படி இல்லப்பா' என்று சொல்லும் எல்லாருக்குமே எங்கேயாவது சின்ன உறுத்தல் ஆச்சும் வந்திருக்கும்.
என் அம்மாவோட கர்ப்பபை அகற்றுற சந்திர சிகிச்சைக்கு பிறகு 2 மாதம் ஓய்வு தேவைப்பட்டுச்சு. அப்போதான் முதல் முதலா சமையல் வேலைகள் பார்க்க வேண்டியதாகிச்சு.
அதுக்கு முன்னர் எல்லாம் 'தேங்காய் திருவு, வெங்காயம் உரி' என்று சின்ன சின்ன வேலைகள் மட்டுமே செய்துகொடுத்திருப்பேன்
'சமைக்கிறதெல்லாம் ஒரு விசயமா?' என்ற கேள்விதான் மனதில இருந்திச்சு. ஆனா அந்த 2 மாசமும் என்னோட தப்பை உணர்ந்தேன். இன்னொரு விஷயத்தில எங்க அம்மாவை நான் பாராட்டுவேன். சின்ன வயசிலேயே இருந்தே மற்ற எல்லா வேலைகளையும் நானேதான் செய்யணும்னு சொல்லி குடுத்துட்டாங்க.
The Handmaiden (2016)
த்ரில்லருக்கான அடிப்படையே அதன் பரபரப்பான திரைக்கதை, அதிவேக சேஸிங் காட்சிகள், ஒரே இடத்தில் நில்லாமல் வேகமாக சுழலும் கேமரா, அதற்கேற்ற எடிட்டிங். ஆனால், நிதானமாக பயணிக்கும் திரைக்கதையில் மேலே சொன்ன எதுவுமே இல்லாமல் மிக சிறந்த thrillerஐ உருவாக்கியிருக்கிறார்கள்.
ஜப்பானில் பெரும் செல்வந்தர் வீட்டிற்கு வேலைக்கு செல்லும் பணிப்பெண்தான் பிரதான பாத்திரம். இங்கு வரும்பொழுதே அவள் ரகசியமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒப்புக்கொண்டே வருகிறார். ஊருக்கு சற்று தள்ளி உள்ள அந்த பெரும் மாளிகையினுள் அப்பணிப்பெண்னுடனே நுழைகிறது அந்த நூலிழை அளவு த்ரில்லிங்கும்
எந்த இடத்திலும் அந்த நூல் முடிச்சிட்டு பார்வையாளரை குழப்பாமலும், அதே நேரம் அங்கு நம்மால் இனம் கண்டுகொள்ளப்படாத ஏதோ ஓர் நிகழ்வு நடந்துவருவதை ஹாரர் கதைகளை போல ஒலி மூலம் நமக்கு உணர்த்தாமல், யதார்த்த காட்சி அமைப்பின் மூலமே உணரச்செய்யும் உருவாக்கல் அசாத்தியம்.
B612 என்ற mobile application பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Android mobile பாவிக்கும் எல்லோருக்கும் பிடித்தமான selfie camera applicationதான் அது. B612 என்ற பெயர் ஏன் வைத்திருப்பார்கள்? அதில் போட்டோ எடுக்கும் போது அதன் அடியில் சில குறியீடுகள் விழுவதை கவனித்திருக்கிறீர்களா?
குட்டி இளவரசன் வசிக்கும் சிறுகோளின் பெயர்தான் B612. அதில் ஒரு நாளில் நாற்பத்து நான்கு முறை சூரிய அஸ்தமனங்களை காண முடியும்.
குட்டி இளவரசனின் inspiration வெறும் selfie app மட்டுமில்லை.
பிரான்சில் அதை கொண்டாடுகிறார்கள்
பிரான்சின் பிராங் நாணயங்களில் குட்டி இளவரசன் ஓவியங்கள் காணப்படுகின்றன, halloweenல் குட்டி இளவரசன் சார்ந்த உருவங்களும் வலம் வருகின்றன, Exupéryன் நினைவு நாள் அங்கு ஒரு பெரிய கொண்டாட்டம். 46610 Bésixdouze என்று ஒரு சிறுகோளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். (46610ன் Hexadecimal B612)
'The God and Delusion' என்ற புத்தகத்தில் Richard Dawkins பகுத்த, கடவுளின் இருப்பைப் பற்றிய மனிதர்களின் வெவ்வேறு அளவான நிலைப்பாடுகள்.
1.உறுதியான இறை நம்பிக்கையாளர் (theist).கடவுள் உண்டு என்பதற்கான சாத்தியக்கூறு 100 %.
கடவுளை நம்புகிறவன் அல்ல நான், அவரைத் தெரிந்தவன் - சி.ஜி.ஜங்.
2.மிக அதிக சாத்தியக்கூறு, ஆனால் 100 வீதத்திலும் குறைவு. இவர்கள் மெய்ம்மையில்(De facto) இறைநம்பிக்கையாளர்கள். 'என்னால் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கடவுளை உறுதியாக நம்புகிறேன், அவர் இருக்கிறார் எனும் அனுமானத்தின் அடிப்படையில் வாழ்கிறேன்.'
3.50%ற்கும் அதிகம், ஆனால் மிக அதிகம் இல்லை. சொல்லுக்குரிய பொருளின்படி (technically) அறிய முடியாக் கொள்கையர், ஆனால் கடவுள் நம்பிக்கையின் பக்கம் சாய்கிறவர்.
4.சரியாக 50% முற்றிலும் நடுநிலமையான அறிய முடியாக் கொள்கையர். 'கடவுள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் சம அளவு வாய்ப்புடையவை.'