'The God and Delusion' என்ற புத்தகத்தில் Richard Dawkins பகுத்த, கடவுளின் இருப்பைப் பற்றிய மனிதர்களின் வெவ்வேறு அளவான நிலைப்பாடுகள்.
1.உறுதியான இறை நம்பிக்கையாளர் (theist).கடவுள் உண்டு என்பதற்கான சாத்தியக்கூறு 100 %.
கடவுளை நம்புகிறவன் அல்ல நான், அவரைத் தெரிந்தவன் - சி.ஜி.ஜங்.
2.மிக அதிக சாத்தியக்கூறு, ஆனால் 100 வீதத்திலும் குறைவு. இவர்கள் மெய்ம்மையில்(De facto) இறைநம்பிக்கையாளர்கள். 'என்னால் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கடவுளை உறுதியாக நம்புகிறேன், அவர் இருக்கிறார் எனும் அனுமானத்தின் அடிப்படையில் வாழ்கிறேன்.'
3.50%ற்கும் அதிகம், ஆனால் மிக அதிகம் இல்லை. சொல்லுக்குரிய பொருளின்படி (technically) அறிய முடியாக் கொள்கையர், ஆனால் கடவுள் நம்பிக்கையின் பக்கம் சாய்கிறவர்.
4.சரியாக 50% முற்றிலும் நடுநிலமையான அறிய முடியாக் கொள்கையர். 'கடவுள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் சம அளவு வாய்ப்புடையவை.'
5. 50 வீதத்திலும் குறைவு, ஆனால் மிகக்குறைவு அல்ல. சொல்லுக்குரிய பொருளின்படி, அறிய முடியாக் கொள்கையர், ஆனால் நாத்திகச்சார்பு உள்ளவர். 'கடவுள் இருக்கிறாரா' என்பதை தெரியாதவன், ஆனால் அதைப்பற்றி சந்தேகிப்பவன்(Sceptical).'
6. மிகக்குறைவான சாத்தியக்கூறு, ஆனால் பூஜ்ஜியத்தை எட்டவில்லை. மெய்ம்மையில் நாத்திகர். 'நிச்சயமான வகையில் தெரியமுடியவில்லை. ஆனால், கடவுளின் இருப்பு மிகவும் அசாத்தியமானது(improbable); கடவுள் இல்லை எனும் அனுமானத்தின் பேரில் வாழ்கிறேன்.'
7. உறுதியான நாத்திகர்
ஆனாலும் அவர் சொல்லாத ஒரு வகை இருக்கு. 8. நான் நாத்திகர். ஆனால், அம்மா அப்பா சந்தோசத்துக்காக அவங்க கடவுள் சார்ந்து சொல்லுறதை செய்வேன்.
நீங்க இதுல எந்த வகைனு பார்த்துக்கோங்க.
கடவுள்களுக்கு வாகனம் assign பண்ணும் போது சிங்கம் புலி எல்லாம் அசைன் பண்ணினானுக. ஆனா அதையெல்லாம் விட பலசாலியான டைனோசரை எந்த கடவுளும் வாகனமா வச்சுக்கல.
வெள்ளப்பெருக்கில இருந்து உலகத்துல உள்ள எல்லா மிருகங்களையும் காப்பாத்தின நோவாவுக்கு ஏன் டைனோசர மட்டும் காப்பாத்த முடியாம போச்சி.
ஏன் எண்டு எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?
Truth is, கடவுளை மனிதன் படைத்து கடவுள் கதையை கட்ட ஆரம்பித்த காலத்தில் டைனோசர்கள் உலகில் இருந்து அழிந்து போயிருந்தன. So கடவுளுக்கு டைனோசரை தெரியாது. அதனால் தான் எந்த புனித நூலிலும் டைனோசர் குறித்த குறிப்பு இருக்காது.😬
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
B612 என்ற mobile application பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Android mobile பாவிக்கும் எல்லோருக்கும் பிடித்தமான selfie camera applicationதான் அது. B612 என்ற பெயர் ஏன் வைத்திருப்பார்கள்? அதில் போட்டோ எடுக்கும் போது அதன் அடியில் சில குறியீடுகள் விழுவதை கவனித்திருக்கிறீர்களா?
குட்டி இளவரசன் வசிக்கும் சிறுகோளின் பெயர்தான் B612. அதில் ஒரு நாளில் நாற்பத்து நான்கு முறை சூரிய அஸ்தமனங்களை காண முடியும்.
குட்டி இளவரசனின் inspiration வெறும் selfie app மட்டுமில்லை.
பிரான்சில் அதை கொண்டாடுகிறார்கள்
பிரான்சின் பிராங் நாணயங்களில் குட்டி இளவரசன் ஓவியங்கள் காணப்படுகின்றன, halloweenல் குட்டி இளவரசன் சார்ந்த உருவங்களும் வலம் வருகின்றன, Exupéryன் நினைவு நாள் அங்கு ஒரு பெரிய கொண்டாட்டம். 46610 Bésixdouze என்று ஒரு சிறுகோளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். (46610ன் Hexadecimal B612)
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்களிடத்திலும் நேர்மையே உருவானவர்களிடத்திலும் இருந்து கேட்க்கப்படும் கேள்விகளை பல சமயங்களில் மௌனமே ஆட்சி செய்யும்❤️.
(A Good writing is not only about Powerful Dialogs. It's also About Powerful Silence)
சூர்யா : ஒரு பையனும் பொண்ணும் friendsஆ மட்டும் இருக்க முடியாதுல?
பிரியா :
குமார் : பணம் ஏதாவது?
கிருஷ்ணவேணி :
ஜானி : ஆரம்பத்துல படபடன்னு பேசிட்டிங்களே. நான் அப்படியெல்லாம் நெனைக்கிறவனா? ஏன் அப்டி பேசுனீங்க?
அர்ச்சனா : நா அப்படி தான் பேசுவேன்.
ஜானி : ஏன்? ஏன்?
அர்ச்சனா :
கிருஷ்ணவேணி : நா மாசமா இல்லனா என்ன கல்யாணம் பண்ணிருப்பியா?
குமார் :
கார்த்திக் : ஏங்க இப்படி கதவ தொறந்து போட்டு குளிக்கிறீங்க? ஒரு அவசரத்துல நான் வந்து பார்த்திருந்தேன்னா?
யாமினி : நீ பாப்பேன்னு நினைச்சேன்
கார்த்திக் :
Zombie apocalypse கதைகளை வச்சு வந்த Korean படங்கள்/சீரிஸ் பற்றி இந்த threadல பார்க்கலாம்.
"பொன்னியின் செல்வன்" நாவல் வாசிக்காதவர்கள் ரொம்ப குறைவு. வீரம், அரியணை போட்டி, வஞ்சம், சூழ்ச்சி,காதல் போன்றவற்ற வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். இவற்றுடன் Zombiesம் இணைந்தால் எப்படி இருக்கும். ஒரு பக்கம் அரியணைக்காக சூழ்ச்சிகள், இன்னொரு பக்கம் Zombies. கேட்கவே நல்லா இருக்குல்ல.
இது தாங்க Kingdom (2019) கொரியன் seriesஇன் கதை. திரைக்கதை, makingல Game of Thronesஐயே தூக்கி சாப்பிடுற அளவுக்கு worthஆன series. ஒவ்வொரு கதாபாத்திரமும், அங்கங்கே வரும் திருப்பங்கள்னு செதுக்கியிருக்காங்க.
'தமிழ் பயங்கரவாதம்' என்று அரசியல் செய்யும் நிலை தற்போது இலங்கையில் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படியொரு பிம்பத்தை கட்டமைத்தால்தான், அவர்களின் கையாலாகாத்தனங்களை மூடி மறைக்க முடியும். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது சதுரங்கத்தின் முதல் நகர்வு
இனிமேல்தான் காய்கள் கவனமாக நகர்த்தப்படவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படாது நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை அகற்றியதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.
ஆனால் இரவோடு இரவாக, ராணுவத்தினரின் பாதுகாப்போடு இடிக்க வேண்டிய தேவை என்ன?
அந்த தூபி அனுமதி பெறப்படாது கட்டப்பட்டது என்றால், முறையாக மாணவர் ஒன்றியத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டமொன்றில் அதற்கான தீர்வினை ஆலோசித்திருக்க வேண்டும்.
"Galileo" என்ற ஜப்பானிய துப்பறியும் தொடர் ஒன்றின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். The Devotion of Suspect X என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ஒரு கொலையை மறைத்து குற்றவாளி தப்பிக்கிறதுதான்" படத்தோட கதை.
இதை adopt பண்ணி நிறைய படங்கள் வந்திருக்கு. 1. Perfect Number (2012/Korean) 2. Drishyam (2013/Malayalam) 3. பாபநாசம் (2015) 4. கொலைகாரன் (2019)
The Other Me (2016/Greek)
இதுவும் கொலைகளை துப்பறியும் படம்தான்.கொலைகளில் தடையங்களா 220 எண்ணை கொலையாளி விட்டுட்டு போறான். "ஏன் அப்டி செய்யிறான்? , யார் கொலையாளி?" என்று கண்டுபிடிக்கிறதுலாம் செமையா இருக்கும். முக்கியமா cinematograohy வேற லெவல்ல இருக்கும்.
சியான் விக்ரம். இந்த மனுசனை புடிக்காதுன்னு சொல்லுறவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?
யாரையுமே கடிந்து பேசாம, fans கூட அவ்ளோ அன்பு, versatality acting, சக நடிகர்களோட ego இல்லாம பழகுறதுனு சொல்லிட்டே போகலாம்.
100 years of indian சினிமா விழாவில், 'தலைவா' பட பிரச்சனையால தளபதிக்கு கடைசி வரிசைல இருக்க இடம் குடுத்து ரொம்ப insult பண்ணாங்க. அப்போ தளபதி கூட இருந்து தன்னோட நட்பை காட்டியிருப்பார்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இயக்குனர் பாலா எழுதின "இவன்தான் பாலா" biographyல விக்ரம் பற்றி நிறைய சொல்லி இருப்பார். சேது படத்திற்க்காக உடல் எடையை குறைச்சிட்டு இருக்கிறப்போ பாலா கேட்ட கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில், அந்த ஓர்மம். அதுதாங்க விக்ரம்.