B612 என்ற mobile application பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Android mobile பாவிக்கும் எல்லோருக்கும் பிடித்தமான selfie camera applicationதான் அது. B612 என்ற பெயர் ஏன் வைத்திருப்பார்கள்? அதில் போட்டோ எடுக்கும் போது அதன் அடியில் சில குறியீடுகள் விழுவதை கவனித்திருக்கிறீர்களா?
குட்டி இளவரசன் வசிக்கும் சிறுகோளின் பெயர்தான் B612. அதில் ஒரு நாளில் நாற்பத்து நான்கு முறை சூரிய அஸ்தமனங்களை காண முடியும்.
குட்டி இளவரசனின் inspiration வெறும் selfie app மட்டுமில்லை.
பிரான்சில் அதை கொண்டாடுகிறார்கள்
பிரான்சின் பிராங் நாணயங்களில் குட்டி இளவரசன் ஓவியங்கள் காணப்படுகின்றன, halloweenல் குட்டி இளவரசன் சார்ந்த உருவங்களும் வலம் வருகின்றன, Exupéryன் நினைவு நாள் அங்கு ஒரு பெரிய கொண்டாட்டம். 46610 Bésixdouze என்று ஒரு சிறுகோளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். (46610ன் Hexadecimal B612)
யார் அந்த குட்டி இளவரசனும், Exupéryயும் என்றுதானே நினைக்கிறீர்கள்?
ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 10 கோடிக்கு மேல் பிரதிகள் விற்கப்பட்ட 'அந்த்வான் து செந்த் - எக்சுபெரி' எழுதிய 'குட்டி இளவரசன்' நாவலுக்குத்தான் இத்தனை அங்கீகாரங்களும்.
நான் வாசித்திலேயே மிக சிறந்த நாவல்கள் எது என்று கேட்டால் குட்டி இளவரசனுக்கும், இரா.முருகனின் ஆயிஷாவுக்கும்தான் முதலிடம். இரண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் படிக்கவேண்டிய நாவல்கள். கண்ணை மூடிக்கொண்டு எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம்.
Leon Werth எனும் முதியவருக்குத்தான் இந்த புத்தகம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது, அதற்கு தகுந்த காரணங்களையும் எழுத்தாளர் அளித்திருக்கின்றார் இந்த புத்தகம் முழுவதுமே வளர்ந்த மனிதர்கள் தமது சிறுபராயத்தின் மீது கொண்டிருக்கும் அங்கலாய்ப்புகளைப் பேசுகின்றது.
குட்டி இளவரசன் வழமையான கதைப்பாணியில் எழுதப்படட கதை இல்லை. ஒரு சுயசரிதையை ஆரம்பிப்பதைப்போல ஆரம்பிக்கிறது. ஒரு விமானி இறப்பின் மூக்கினை தொட்டபின் மீண்டு வந்து அதை ஒரு கூட்டத்தில் இருந்து சிலாகித்து சொல்லும் ஒரு நினைவுக்குறிப்பைபோல்.
இதில் மூன்று விதமான கடந்த காலங்கள் மூலம் கதை சொல்லப்படுகிறது,
1.முன்னொரு காலத்தில்..
2.நான் சிறுவனாக இருந்த காலத்தில்..
3.சில வருடங்களுக்கு முன்..
இந்தக் காலங்களை சரியாகப்புரிந்து கொண்டால் தான் கதையுடன் ஒன்றித்து போக முடியும்.
ஒரு கதையில் 'முன்னொரு காலத்தில்..' என்று ஆரம்பிப்பது வரலாற்றை பிரதிபலிப்பதாக காணப்படும், 'சிறுவனாக இருந்த போது அல்லது எனது பதினைந்தாவது வயதில்' என்பது நினைவுக்குறிப்பு, 'கடந்த இரண்டு வருடங்களின் முன்' என்பது அனுபவக்குறிப்பு. இப்போது புரிந்திருக்கும் நான் மேலே குறிப்பிட விடயம்.
வரலாற்று குறிப்புகளில் எப்போதும் விடயங்கள் பேசப்படும்: இனி அது திரும்ப பெறமுடியாது என்பதைப்போல, நினைவுக்குறிப்புகளில் அங்கலாய்ப்பு: எனக்கு நடந்தது யாருக்கும் நடந்துவிடக்கூடாது அல்லது அப்படி நடந்தவர்கள் உண்டா என்ற கேள்வியை எழுப்புவதைப்போல..
ஆம் எனக்கு நடந்திருக்கின்றது என்றால் அந்தக்கதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிபோய்விடும், அனுபவ குறிப்புகளில் பெருமிதம் : இப்படி ஒன்றை நான் நிகழ்த்தியிருந்தேன் அல்லது இப்படி ஒருவரை நான் சந்தித்திருந்தேன். இந்த விடயங்கள் அனைத்தும் குட்டி இளவரசனின் காணப்படுகின்றது.
குட்டி இளவரசன் நான் சிறுவனாக இருந்த போது என்று ஆரம்பிக்கிறது , கடந்த சில வருடங்களின் முன் என்றவாறு கதை செல்கிறது. இடையில் ஒன்றிரண்டு இடத்தில முன்னொரு காலத்தில் என்று கதையின் தேவையின் நிமிர்த்தம் பாவிக்கப்படுகிறது.
வளர்ந்தவர்களிடம் இருந்து எப்படி குழந்தை தன்மை அழிந்து போயிருக்கின்றது என்பதை காட்சிப்படுத்தும் பல உரையாடல்கள் குட்டி இளவரசனில் காணப்படுகின்றது
இந்த கதையில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? "அன்பு இருக்கின்றது, எல்லையில்லாத பேரன்பு."
The Little Prince (2016)
இந்த நாவல் அனிமேஷன் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

16 Jan
'The God and Delusion' என்ற புத்தகத்தில் Richard Dawkins பகுத்த, கடவுளின் இருப்பைப் பற்றிய மனிதர்களின் வெவ்வேறு அளவான நிலைப்பாடுகள்.
1.உறுதியான இறை நம்பிக்கையாளர் (theist).கடவுள் உண்டு என்பதற்கான சாத்தியக்கூறு 100 %.
கடவுளை நம்புகிறவன் அல்ல நான், அவரைத் தெரிந்தவன் - சி.ஜி.ஜங்.
2.மிக அதிக சாத்தியக்கூறு, ஆனால் 100 வீதத்திலும் குறைவு. இவர்கள் மெய்ம்மையில்(De facto) இறைநம்பிக்கையாளர்கள். 'என்னால் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கடவுளை உறுதியாக நம்புகிறேன், அவர் இருக்கிறார் எனும் அனுமானத்தின் அடிப்படையில் வாழ்கிறேன்.'
3.50%ற்கும் அதிகம், ஆனால் மிக அதிகம் இல்லை. சொல்லுக்குரிய பொருளின்படி (technically) அறிய முடியாக் கொள்கையர், ஆனால் கடவுள் நம்பிக்கையின் பக்கம் சாய்கிறவர்.

4.சரியாக 50% முற்றிலும் நடுநிலமையான அறிய முடியாக் கொள்கையர். 'கடவுள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் சம அளவு வாய்ப்புடையவை.'
Read 8 tweets
15 Jan
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்களிடத்திலும் நேர்மையே உருவானவர்களிடத்திலும் இருந்து கேட்க்கப்படும் கேள்விகளை பல சமயங்களில் மௌனமே ஆட்சி செய்யும்❤️.
(A Good writing is not only about Powerful Dialogs. It's also About Powerful Silence)
சூர்யா : ஒரு பையனும் பொண்ணும் friendsஆ மட்டும் இருக்க முடியாதுல?
பிரியா :

குமார் : பணம் ஏதாவது?
கிருஷ்ணவேணி :

ஜானி : ஆரம்பத்துல படபடன்னு பேசிட்டிங்களே. நான் அப்படியெல்லாம் நெனைக்கிறவனா? ஏன் அப்டி பேசுனீங்க?
அர்ச்சனா : நா அப்படி தான் பேசுவேன்.
ஜானி : ஏன்? ஏன்?
அர்ச்சனா :
கிருஷ்ணவேணி : நா மாசமா இல்லனா என்ன கல்யாணம் பண்ணிருப்பியா?
குமார் :

கார்த்திக் : ஏங்க இப்படி கதவ தொறந்து போட்டு குளிக்கிறீங்க? ஒரு அவசரத்துல நான் வந்து பார்த்திருந்தேன்னா?
யாமினி : நீ பாப்பேன்னு நினைச்சேன்
கார்த்திக் :
Read 4 tweets
14 Jan
Zombie apocalypse கதைகளை வச்சு வந்த Korean படங்கள்/சீரிஸ் பற்றி இந்த threadல பார்க்கலாம். Image
"பொன்னியின் செல்வன்" நாவல் வாசிக்காதவர்கள் ரொம்ப குறைவு. வீரம், அரியணை போட்டி, வஞ்சம், சூழ்ச்சி,காதல் போன்றவற்ற வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். இவற்றுடன் Zombiesம் இணைந்தால் எப்படி இருக்கும். ஒரு பக்கம் அரியணைக்காக சூழ்ச்சிகள், இன்னொரு பக்கம் Zombies. கேட்கவே நல்லா இருக்குல்ல. Image
இது தாங்க Kingdom (2019) கொரியன் seriesஇன் கதை. திரைக்கதை, makingல Game of Thronesஐயே தூக்கி சாப்பிடுற அளவுக்கு worthஆன series. ஒவ்வொரு கதாபாத்திரமும், அங்கங்கே வரும் திருப்பங்கள்னு செதுக்கியிருக்காங்க. Image
Read 11 tweets
9 Jan
'தமிழ் பயங்கரவாதம்' என்று அரசியல் செய்யும் நிலை தற்போது இலங்கையில் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படியொரு பிம்பத்தை கட்டமைத்தால்தான், அவர்களின் கையாலாகாத்தனங்களை மூடி மறைக்க முடியும். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது சதுரங்கத்தின் முதல் நகர்வு
இனிமேல்தான் காய்கள் கவனமாக நகர்த்தப்படவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படாது நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை அகற்றியதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.
ஆனால் இரவோடு இரவாக, ராணுவத்தினரின் பாதுகாப்போடு இடிக்க வேண்டிய தேவை என்ன?
அந்த தூபி அனுமதி பெறப்படாது கட்டப்பட்டது என்றால், முறையாக மாணவர் ஒன்றியத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டமொன்றில் அதற்கான தீர்வினை ஆலோசித்திருக்க வேண்டும்.
Read 6 tweets
9 Jan
Suspect X (2008/Japanese)

"Galileo" என்ற ஜப்பானிய துப்பறியும் தொடர் ஒன்றின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். The Devotion of Suspect X என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ஒரு கொலையை மறைத்து குற்றவாளி தப்பிக்கிறதுதான்" படத்தோட கதை.
இதை adopt பண்ணி நிறைய படங்கள் வந்திருக்கு.
1. Perfect Number (2012/Korean)
2. Drishyam (2013/Malayalam)
3. பாபநாசம் (2015)
4. கொலைகாரன் (2019)
The Other Me (2016/Greek)
இதுவும் கொலைகளை துப்பறியும் படம்தான்.கொலைகளில் தடையங்களா 220 எண்ணை கொலையாளி விட்டுட்டு போறான். "ஏன் அப்டி செய்யிறான்? , யார் கொலையாளி?" என்று கண்டுபிடிக்கிறதுலாம் செமையா இருக்கும். முக்கியமா cinematograohy வேற லெவல்ல இருக்கும்.
Read 5 tweets
8 Jan
விக்ரம் ❤️

சியான் விக்ரம். இந்த மனுசனை புடிக்காதுன்னு சொல்லுறவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?
யாரையுமே கடிந்து பேசாம, fans கூட அவ்ளோ அன்பு, versatality acting, சக நடிகர்களோட ego இல்லாம பழகுறதுனு சொல்லிட்டே போகலாம்.
100 years of indian சினிமா விழாவில், 'தலைவா' பட பிரச்சனையால தளபதிக்கு கடைசி வரிசைல இருக்க இடம் குடுத்து ரொம்ப insult பண்ணாங்க. அப்போ தளபதி கூட இருந்து தன்னோட நட்பை காட்டியிருப்பார்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இயக்குனர் பாலா எழுதின "இவன்தான் பாலா" biographyல விக்ரம் பற்றி நிறைய சொல்லி இருப்பார். சேது படத்திற்க்காக உடல் எடையை குறைச்சிட்டு இருக்கிறப்போ பாலா கேட்ட கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில், அந்த ஓர்மம். அதுதாங்க விக்ரம்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!