காந்தளூர் வசந்தகுமாரன்- சுஜாதா அவர்களின் இரண்டாவது வரலாற்று நாவல் ஆகும்.
கதை மாந்தர்களை கற்பனா பாத்திரங்களாகப் படைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாக சாதாரண மனிதர்களாக உலவவிட்டிருக்கிறார். ஒரு வரலாற்று கதை மன்னன் மற்றும் அவரின் சிறப்பான ஆட்சிகளைப் பற்றி மட்டுமே கூறும்.
இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய வரலாற்றுக் கதை இது.........
இந்த நாவலில் நாம் பல புதிய தமிழ்ச் சொற்களை அறிய முடியும்.
(உம்)
இவுளி - குதிரை
தொய்யான் - துணி தைப்பவன்.
பொலிசை- கடன்.
கரவடம் - திருட்டு.
கடந்த கால் நூற்றாண்டுகளாக ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’, சுஜாதாவின் மைல் கற்களில் ஒன்றாகவே அவ்வப்போது சிலாகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தனக்கு சரித்திர நாவல் எழுத வராது என்பதை ஒரு சரித்திர நாவல் எழுதி நிரூபித்தார் என்பதே நாம் விரும்பாத வரலாறாகி விட்டது. t.me/bookcravings
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சோழர்களை பற்றி அதிகம் படித்து சேரர்களை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் படிக்கவேண்டியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய 'சாகித்திய அகாடமி'விருது பெற்ற நூல் 'சேரமான் காதலி'.
இந்நாவல் மூன்றாம் சேரமான் பெருமாள்(கிபி 798- 838 )என்ற பாஸ்கர ரவிவர்மன் மன்னை பற்றியதே.
இவர் இரண்டாம் சேரமான் பெருமாளின் மைத்துனன் மகன் மற்றும் தளபதியாக இருந்தவன். 2ம் சேரமான் பெருமாள் 47 ஆண்டுகள் ஆட்சி செய்து பின்னர் முடி துறந்து சென்ற இவர் தான் பன்னிரு ஆழ்வார்களில் ஓருவரான 'குலசேகர ஆழ்வார்' இவரே,
இவருக்கு பிறகு இவரது மகன் மார்த்தாண்டவர்மன் ஆட்சிக்கு வந்ததும் அவரை உள்நாட்டு கலகப் போரில் வீழ்த்தி சேர நாட்டை இரண்டாக பிரித்து ஆண்டவர் தான் 3ம் சேரமான்.இக்கதை முக்கியமாக தமிழக மூவேந்தர்களில் ஒருவர் தனது காதலிக்காக இஸ்லாம் மதத்தை தழுவி இறுதி காலகட்டத்தில் உயிர் நீத்தவர்.
பெண்களுக்கென்று தனியான ஒரு ரகசிய எழுத்து மொழி : ' 'நுஷு'. nüshu, a script that is only used by women in China
சீனாவில் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதை ஆண்கள் மறுத்தார்கள். இந்த இழிநிலையை சீனத்துப் பெண்கள் புதுவழியில் மீறினார்கள்.
ஆண்களுக்குத் தெரியாத ரகசிய எழுத்து வரிவடிவம் ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு எழுத்தை உருவாக்கினார்கள்.அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள்.
நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
இதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.. 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடும் கிறுக்கியது போல் இருக்கும். விசிறிகளிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம்.
ரசவாதி - சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும்,
தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ,
வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற,
ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் இங்குள்ள சிக்கல் என்ன?
கொஞ்சம் மற்ற நாடுகளின் பாணியை பார்ப்போம். குறிப்பாக மேலை!
Prom Night: பள்ளி பருவம் முடிகையில் இந்த விழா கொண்டாடப்படும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஆண்டுவிழா போல். ஆனால் ஹை ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும்.
இந்த நாளுக்கு மாணவ, மாணவிகள் ஜோடியாக வர வேண்டும். தன் மகளை prom nightக்கு அழைக்க ஒரு மாணவன் வருகிறான் எனில், பெற்றோர் வரவேற்பார்கள். ஒருவேளை யாரும் வரவில்லை எனில், கவலைப்படுவார்கள். தன் மகள் எதிர்பாலினத்தில் ஒருவனை கூட ஈர்க்கும் அளவுக்கு வளரவில்லையோ என. இதேதான் மாணவனுக்கும்.
அந்த விழா வெறுமனே ஜோடி நடனமும் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த ஜோடி முதலியவற்றுக்கான விருதளிப்பும் கொண்ட விழா மட்டுமே. ஆனாலும் அடிப்படையில் சமூகரீதியாக இணைதேடலை அங்கீகரிக்கும் நிகழ்வு அது.
விழாவின்போது வரும் ஜோடி முன்னமே காதலர்களாக இருக்கலாம். அல்லது பின்னர் காதலர்கள் ஆகலாம்.