சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
🇮🇳🙏4
குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம்.
🇮🇳🙏5
உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார்.
🇮🇳🙏6
திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது.
🇮🇳🙏7
இங்கு கொடிமரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச்சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம்.
உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார்.
🇮🇳🙏9
குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார்.
🇮🇳🙏10
அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான்.
🇮🇳🙏11
அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார்.
🇮🇳🙏12
கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். 🇮🇳🙏13
கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார்.
அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். 🇮🇳🙏14
கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். 🇮🇳🙏15
இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார்.
🇮🇳🙏16
நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். 🇮🇳🙏17
மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார்.
🇮🇳🙏18
தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மாநிலத் தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்பம் கற்பிப்பதே எனது கனவு - பிரதமர் மோடி
ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவு எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாலா என்னும் பெயரில் மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
விஸ்வநாத், சராய்தியோ ஆகிய இரு இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
வாரிசு அரசியலுக்கு இடமில்லை: பிரதமரின் சகோதரர் மகளுக்கு அனுமதி மறுப்பு
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர் மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதிய விதியை காரணம் காட்டி, பா.ஜ., நிராகரித்துவிட்டது.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி. இவர், நியாய விலை கடை வைத்துள்ள இவர், குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி
கவுகாத்தி: இந்தியாவை அவதூறு செய்ய வேண்டும் என சதி செய்பவர்கள், இந்திய தேயிலையையும் விட்டு விடாமல் அவதூறு செய்யும் அளவுக்கு தாழ்ந்திருக்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி,சோனிட்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: இந்தியாவை அவதூறு செய்ய வேண்டும் என சதி செய்பவர்கள், இந்திய தேயிலையையும் விட்டு விடாமல் அவதூறு செய்யும் அளவுக்கு தாழ்ந்திருக்கிறார்கள்.
இந்த சதி செய்பவர்கள், இந்திய தேயிலைக்கு , உலகம் முழுவதும் அவதூறு ஏற்படுத்த வேண்டும் என உறுதி ஏற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதை நீங்கள் படித்திருப்பீர்கள்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அரசியலில் மாறுகிறது காட்சி: ராகுல் செயல்பாடு பிடிக்காததால் விலக முடிவு
காங்., ராகுலின் செயல்பாடுகள் பிடிக்காததால், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் வாயிலாக, காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதுாக்கி இருப்பதால், அதற்கு தீர்வு காணும்படியும், விவசாயிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும்படியும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம், தினமும் அவர் போனில் பேசி வருகிறார்.
காங்கிரசிலிருந்து விலகும் நடவடிக்கைகளில், அவர் தீவிரம் காட்டி வருவதால், தேசிய அரசியலில், காட்சிகள் மாறத் துவங்கியுள்ளன.
வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் முறை எளிதாக்கப்படுகிறது..! விரைவில் மோட்டார் வாகனச் சட்டத்தில் புதிய திருத்தங்கள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான போக்குவரத்து அமைச்சகம், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான முறைகளில் அதிரடியான மாற்றங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தங்களைக் கொண்டு வர உள்ளது.
இதில் ஓட்டுனர் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள், பயிற்சி பெறுவோருக்கு சோதனைகளை நடத்தும் முறைக்கு முடிவு கட்டப்பட உள்ளது.
போக்குவரத்து உரிமம் பெற அரசு அலுவலகங்களில் அதிகாரிகளிடமும் இடைத்தரகர்களிடமும் சிக்கும் முறைக்கு முடிவு கட்ட மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
விவசாயிகள் போராட்டத்தில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்து, பேசு பொருளானது. பிரபல பாப் பாடகி ரிஹானா மற்றும் பருவநிலை இளம் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் ஆகிய இருவரும் போராட்டத்துக்கு ட்விட்டரில் தெரிவித்த ஆதரவே இதற்கு காரணம்.
ரிஹானா வெளியிட்ட குறும்பதிவில் அதிகவிவரங்களோ, விளக்கமோ இல்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திப்படத்தை பகிர்ந்து, ‘இது பற்றி ஏன் பேசாமல் இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்திருந்தார். போராட்டம் தொடர்பான ஹாஷ்டேகையும் இணைத்திருந்தார்.