பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அரசியலில் மாறுகிறது காட்சி: ராகுல் செயல்பாடு பிடிக்காததால் விலக முடிவு
காங்., ராகுலின் செயல்பாடுகள் பிடிக்காததால், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் வாயிலாக, காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதுாக்கி இருப்பதால், அதற்கு தீர்வு காணும்படியும், விவசாயிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும்படியும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம், தினமும் அவர் போனில் பேசி வருகிறார்.
காங்கிரசிலிருந்து விலகும் நடவடிக்கைகளில், அவர் தீவிரம் காட்டி வருவதால், தேசிய அரசியலில், காட்சிகள் மாறத் துவங்கியுள்ளன.
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், முதலில், பஞ்சாபில் தான் துவங்கியது. தற்போது, டில்லி எல்லையில் போராட்டம் நீடிக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் அமரீந்தர் சிங் தான். ஆனால், போராட்டம் என்ற பெயரில், சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, அமரீந்தர் சிங் கவலை அடைந்துள்ளார்.
ஏற்கனவே, பஞ்சாபை, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக் கோரி, பயங்கரவாதிகள், பல தாக்குதல்களை நடத்தினர்; பின், அவர்கள் ஒடுக்கப்பட்டனர். தற்போது, விவசாயிகள் போராட்டத்துக்கு திடீரென வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கோஷம் வருவது, அமரீந்தர் சிங்கிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டத்தைத் தொடர்ந்து, பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தலை துாக்கி இருப்பதால், அவர் கவலை அடைந்துள்ளார்.
கருத்து வேறுபாடு
போராட்டத்துக்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என, அமரீந்தர்சிங் விரும்புகிறார். ஆனால், காங்கிரஸ் எம்.பி.,ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர், போராட்டம் நீடிக்க வேண்டும் என, விரும்புகின்றனர்.
ராகுலின் இந்த நடவடிக்கையால், அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். ஏற்கனவே, ராகுலுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் ஏழாம் பொருத்தம். விவசாயிகள் போராட்ட விஷயத்தில், இருதரப்புக்கும் இடையே, தற்போது கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், முதல்வர் அமரீந்தர் சிங், தினமும் போனில் பேசி வருவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சில அமைப்புகள், போராட்டத்தைக் கைவிட விரும்புகின்றன என்றும், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அமரீந்தர் சிங், அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாபில், அகாலி தளம் கட்சி, பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தது. விவசாயச் சட்டங்களை காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து, அகாலி தளம் வெளியேறியது; இது, அமரீந்தர், பா.ஜ., தலைவர்களுடன் நெருக்கம் காட்டுவதற்கான வாய்ப்பை அதிகரித்து விட்டது.
இது குறித்து, பஞ்சாப் மாநில அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
வலியுறுத்தல்
பஞ்சாபில், ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, பெரும் விலை கொடுக்க நேர்ந்தது.மீண்டும் அது போன்ற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என, அமரீந்தர் நினைக்கிறார்.
இதனால், விவசாயிகள் பிரச்னைக்கு, தற்காலிகமாக ஒரு தீர்வை அறிவிக்கும்படியும், பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார். இந்த விஷயத்தில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஒத்துழைக்க மறுப்பதால், மத்திய அரசின் கதவை, அமரீந்தர் தட்டியுள்ளார்.
விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது, காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தலை துாக்காமல் தடுப்பது என, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க, அமரீந்தர் திட்டமிட்டுள்ளார்.
மேலும், ராகுலின் மீது உள்ள அதிருப்தியால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, விரைவில் தனிக்கட்சி துவங்கும் திட்டமும், அமரீந்தரிடம் உள்ளது. வரும், 2022 ஏப்ரலில், பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
அந்தத் தேர்தலை, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கவும், அமரீந்தர் தயாராகி வருகிறார். அமரீந்தர் சிங்கின் இந்தக் காய் நகர்த்தல்களால், தேசிய அரசியலிலும், விரைவில் காட்சிகள் மாறும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.
அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும், இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
விவசாயிகளுக்கு மோடி விளக்கம் : டுவிட்டரில் டிரெண்டிங்
புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் வேளையில் ராஜ்யசபாவில் பிரதம் மோடி இன்று அதுதொடர்பாக பேசினார். அவர் பேசிய விஷயங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகளுக்கு 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.
போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியுள்ளது - பிரதமர் மோடி விமர்சனம்
போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது பதிலளித்துப் பேசிய அவர், போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாகவும், எந்த வகை போராட்டம் எங்கு நடந்தாலும் அவர்கள் சென்றுவிடுவதாகவும் விமர்சித்தார்.
போராட்டங்கள் இல்லாமல் வாழ முடியாத அத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி கூறினார்.
இத்தாலியில் 6 கோடி நபர்கள். இந்தியாவில் 130 கோடி நபர்கள்.
இத்தாலி மக்கள், இந்திய மக்களைவிட கல்வியிலும் பொருளாதாரத்திலும்டாப்புல இருக்காங்க.
அதுபோல அமெரிக்காவுடன் இந்தியாவை பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒப்பிடவே முடியாது.
ஆனால், இப்படிப்பட்ட வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் கொரானாவையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது
சற்றும் யோசிக்காமல்
பொருளாதாரத்தை பின்னாடி பார்போம் என்று ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிரை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு தைரியமாக போட்டாரு பாருங்கள் நம்ம பிரதமர்
அன்றாடம் நடக்குற நோய் தொற்று எவ்வளவு? இறப்பு எவ்வளவு? குணமாகி போவோர் எத்தனை பேர் என்று அரசாங்க லெட்ஜர்ல அப்டேட் ஆக்க வைத்தார்.
பேரூர்:கோவை அருகே, பழங்குடியினருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, மதமாற்ற முயற்சிப்பதாக, 'காருண்யா' மீது புகார் எழுந்துள்ளது.
'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், மத பிரசார நிகழ்ச்சிகளை நடத்துபவர், மத போதகர் பால் தினகரன். அவர், கோவை, நல்லுார்வயல் கிராமத்தில், காருண்யா நிகர்நிலை பல்கலை, பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்துகிறார்.
இவருக்கு சொந்தமான காருண்யா 'சீஷா' நடமாடும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வாயிலாக, பழங்குடியினருக்கு பரிசு பொருட்களை கொடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக புகார்எழுந்துள்ளது.