வாரிசு அரசியலுக்கு இடமில்லை: பிரதமரின் சகோதரர் மகளுக்கு அனுமதி மறுப்பு
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர் மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதிய விதியை காரணம் காட்டி, பா.ஜ., நிராகரித்துவிட்டது.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி. இவர், நியாய விலை கடை வைத்துள்ள இவர், குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இவரது மகள், சோன் மோடி. இவர், விரைவில் நடைபெற உள்ள ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், சமீபத்தில், வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இதில் சோனல் பெயர் இடம்பெறவில்லை.
எந்த வார்டிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு, வரும் தேர்தலில் போட்டியிட, கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற விதிமுறை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், வரும் தேர்தலில் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என விதிமுறை வகுக்கப்பட்டது. விதிமுறைகள் அனைவருக்கும் சமம் தான். இவ்வாறு அவர் கூறினார்.
சோனல் மோடி கூறுகையில், பா.ஜ., தொண்டர் என்ற அடிப்படையில் தான் வாய்ப்பு கேட்டேன். பிரதமரின் உறவினர் என்பதற்காக வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வழக்கமான கட்சி தொண்டராகவே செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரஹலாத் மோடி கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள், விருப்பமான முடிவை எடுக்க சுதந்திரம் உள்ளது.
எனது குடும்பத்தினர் பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தவில்லை. அதனை பயன்படுத்தி எந்த சலுகையையும் அனுபவிக்கவில்லை. நாங்கள் சொந்தமாக உழைத்து வாழ்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.
அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும், இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
விவசாயிகளுக்கு மோடி விளக்கம் : டுவிட்டரில் டிரெண்டிங்
புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் வேளையில் ராஜ்யசபாவில் பிரதம் மோடி இன்று அதுதொடர்பாக பேசினார். அவர் பேசிய விஷயங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகளுக்கு 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.
போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியுள்ளது - பிரதமர் மோடி விமர்சனம்
போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது பதிலளித்துப் பேசிய அவர், போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாகவும், எந்த வகை போராட்டம் எங்கு நடந்தாலும் அவர்கள் சென்றுவிடுவதாகவும் விமர்சித்தார்.
போராட்டங்கள் இல்லாமல் வாழ முடியாத அத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி கூறினார்.
இத்தாலியில் 6 கோடி நபர்கள். இந்தியாவில் 130 கோடி நபர்கள்.
இத்தாலி மக்கள், இந்திய மக்களைவிட கல்வியிலும் பொருளாதாரத்திலும்டாப்புல இருக்காங்க.
அதுபோல அமெரிக்காவுடன் இந்தியாவை பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒப்பிடவே முடியாது.
ஆனால், இப்படிப்பட்ட வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் கொரானாவையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது
சற்றும் யோசிக்காமல்
பொருளாதாரத்தை பின்னாடி பார்போம் என்று ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிரை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு தைரியமாக போட்டாரு பாருங்கள் நம்ம பிரதமர்
அன்றாடம் நடக்குற நோய் தொற்று எவ்வளவு? இறப்பு எவ்வளவு? குணமாகி போவோர் எத்தனை பேர் என்று அரசாங்க லெட்ஜர்ல அப்டேட் ஆக்க வைத்தார்.
பேரூர்:கோவை அருகே, பழங்குடியினருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, மதமாற்ற முயற்சிப்பதாக, 'காருண்யா' மீது புகார் எழுந்துள்ளது.
'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், மத பிரசார நிகழ்ச்சிகளை நடத்துபவர், மத போதகர் பால் தினகரன். அவர், கோவை, நல்லுார்வயல் கிராமத்தில், காருண்யா நிகர்நிலை பல்கலை, பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்துகிறார்.
இவருக்கு சொந்தமான காருண்யா 'சீஷா' நடமாடும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வாயிலாக, பழங்குடியினருக்கு பரிசு பொருட்களை கொடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக புகார்எழுந்துள்ளது.