கடந்தாண்டு தசை அழுகல் நோயால் பிரதிபா ஹிலிம் தனது கைகளையும் கால்களையும் இழந்தார். அதனால் ஓய்ந்துவிடாமல், மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள ஆதிவாசி மாணவர்களின் ஆன்லைன் கல்வி வாய்ப்பு குறைவாக கிடைக்கும் மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே வகுப்பெடுத்து வருகிறார். bit.ly/2MW0o4O
“எனக்கு இவ்வாறு நேரும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. எனக்கு அதிக காய்ச்சல் வந்தபோது நான் இங்கே (கார்ஹே) இருந்தேன்“ என்று பிரதீபா கூறுகிறார்.
பின்னர் மார்ச் மாதத்தில் கோவிட் – 19 ஊரடங்கும் போடப்பட்டது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஊரடங்கு காலத்தில் படிக்க முடியாமல் சிரமப்படுவதை அவர் உணர்ந்தார். அவர் அக்குழந்தைகள் அங்குமிங்கும் சுற்றுவதோ அல்லது வயல்களில் வேலை செய்வதையோ பார்த்தார்.
“இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்றால் என்னவென்று புரியாது. அவர்கள் எவ்வாறு ஆன்லைன் கல்வி கற்க செல்போன் வாங்குவார்கள்“ என்று அவர் கேட்கிறார். எனவே அவர் அக்குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்க முடிவெடுத்தார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வீட்டிற்கு திரும்பிய சோனிக்கு தனது 5 வயது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவருகிறது. ஊரடங்கினால் ஏற்கனவே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சோனி போன்ற மும்பையின் பாலியல் தொழிலாளர்களுக்கு தங்களின் குழந்தைகளை பாதுகாப்பதும் சவால் நிறைந்த பணி தான்.
+7 bit.ly/3oSoEC1
“இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. ஆனால் யாரும் வாய் திறப்பதில்லை,” என்கிறார் காமத்திப்புராவில் நம்மிடையே அமர்ந்து உரையாடிய பாலியல் தொழிலாளி ஒருவர்.
2018இல் வெளியான ஆய்வுக் கட்டுரையில், “பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள்,பள்ளிகளை பாதியில் நிறுத்திய பதின்பருவ சிறுவர்,சிறுமியர், கூலி வேலைக்குச் செல்வோர் ஆகிய பிரிவினருக்கு பாலியல் துன்புறுத்தல் அபாயகரமாக அதிகரித்துள்ளது”என குறிப்பிடப்பட்டுள்ளது.